எட்டு நாள் வரை பசியில்லாமல் இருக்க...

Author: தோழி / Labels:


பசி மனித குலத்தின் தீராத நோய்களில் ஒன்றாக குறிப்பிடப் படுகிறது. இந்த பசிதான் மனித வாழ்க்கையின் அச்சாக இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இத்தகைய புற வாழ்க்கையைத் தாண்டிய அக வாழ்க்கையை முன்னிலைப் படுத்திய சித்தர் பெருமக்கள் இந்த பசியை வென்றிட பல்வேறு உபாயங்களை அருளியிருக்கின்றனர். அவற்றில் ஒன்றை இன்று பார்ப்போம்.

போகர் தனது “போகர் ஜாலவித்தை” என்னும் நூலில் எட்டு நாள் வரை பசியே இல்லாமல் இருந்திட வைக்கும் ஒரு உபாயத்தை அருளி இருக்கிறார்.

நாட்டிலே உனைமதிக்க யின்னோர் வித்தை
நவிலுகிறேன் மணவனே நவிலக்கேளு
வீட்டிலே எட்டுநா ளன்னாகாரம்
வேண்டாமற் புசியாம லிருக்கலாகும்
ஏட்டிலே புளுகினா னென்று சொல்லி
யேசாதே நாயுருவி விரையுழக்கு
வாட்டியே பசும்பாலை விட்டுக்கிண்டி
வருந்தினவன் எட்டுநா ளிருக்கலாமே.

நாயுருவி செடியின் விதையை ஆழாக்கு அளவு சேகரிக்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அவற்றை தூய்மை செய்து, அடுப்பில் வாட்டிய பின்னர் அத்துடன் பசும்பாலைச் சேர்த்து கிண்டி வேக வைத்து அதனை உண்டால் எட்டு நாள் வரையில் பசி எடுக்காது என்கிறார். இது பொய் இல்லை உண்மை என உறுதி கூறுகிறார்.

இதன் சாத்திய அசாத்தியங்கள் ஆய்வுக்கு உட்பட்டவை. இப்படி ஏட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் இத்தகைய அரிய தகவல்களை ஆய்வு செய்து, இவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்திட அரசும், ஆர்வமுள்ளவர்களும் முன் வரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

17 comments:

kimu said...

Thanks for your information.

''இறைவனடி யுவராஜா'' said...

வாழ்க வளமுடன்,
வணக்கம் தோழி..

தோழி இது உண்மைய.

Anonymous said...

ஆஹா ! என்ன ஒரு தகவல் . உடம்பை குறைக்க நினைக்கும் அனைவருக்கும் இது ஒரு இனிப்பான செய்தி அல்லவா நன்றி தோழி ....ப்ரவீன் குமார் ...........

Anonymous said...

பட் தோழி ஆப்டர் எட்டு நாள் வாட் வில் ஹப்பேன் ? அஹ அஹ ..........ப்ரவீன் குமார்

Senthil said...

வணக்கம் தோழி..
பதிவுகள் அற்புதம்
வியக்கும் சொற்பதம்
தேவை சிவபதம்
தங்களின் சேவை சிறக்க சிறியேனின் வாழ்த்துக்கள்.
இச்சேவையை என்னால் முடிந்த வரை தமிழ் குறும் அன்பர்களுக்கு கொண்டு செல்ல என் வலைத்தளத்தில் தங்களின் வலைதள முகவரியை இணைத்துள்ளேன்

Senthil said...

தங்களின் சேவை சிறக்க சிறியேனின் வாழ்த்துக்கள்.
இச்சேவையை என்னால் முடிந்த வரை தமிழ் குறும் அன்பர்களுக்கு கொண்டு செல்ல என் வலைத்தளத்தில் தங்களின் வலைதள முகவரியை இணைத்துள்ளேன்

ஷங்கர்- said...

சிறப்பாயிருப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றது

ஷங்கர்- said...

சிறப்பாயிருப்பதுடன் சிந்திக்கவும் வைக்கின்றது

Balaji said...

இது நல்ல தகவல். என்னுடைய பெயர் பாலாஜி எனக்கு சித்தர்கள் மற்றும் யோகா பற்றி அறிய அதிக ஆர்வம் உள்ளது. அதற்கான குரு யாரிடம் செல்வது என்று எனக்கு தெரியவில்லை. தங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள். எனக்கு உதவியாக இருக்கும்.

HAI RAVISHANKAR said...

hello sir /madam

I am going to try this method if its true mean pls tell me ....

rep me by ravishankar

raviit88@gmail.com(9444723736)

HAI RAVISHANKAR said...

I am going to use this method pls any one suggest me how to do this ...

or contact me
raviit88@gmail.com

9444723736

தமிழ் களஞ்சியம் said...

நல்லதொரு பதிவு

velavan said...

sengutuvel@GMAIL.COM

Unknown said...

dear mam i try this is true
prabu 8220090222

Unknown said...

dear mam i try this its working


prabakara nayanar

8220090222

AWR said...

நல்லதொரு பதிவு

Unknown said...

முயற்சி செய்து பார்த்தீங்களா

Post a comment