தொலைவில் நடப்பதை அறியும் “மை”!

Author: தோழி / Labels:

ஏதேனும் தொலைந்து போய்விட்டால் மை போட்டு பார்த்து கண்டுபிடிக்க மாந்திரிகர்களையும், தாந்திரிகளையும் அணுகுவது முற் காலத்தில் சர்வசாதாரணமான ஒன்று. அவர்களும் வெற்றிலை, முட்டை என பலவற்றில் ஏதோ ஒரு மையை பூசி அதைப் பார்த்து காணாமல் போன பொருள் எங்கே எந்த திசையில் இருப்பதாக சொல்லுவார்கள். இதன் உண்மைத் தன்மை அல்லது நம்பகத் தன்மை கேள்விக்குரியது. பகுத்தறிவாளர்களினால் ஏமாற்று வேலை என கேலி செய்யப்படும் ஒன்றாக மாறி தற்போது அநேகமாய் அழிந்து விட்ட ஒரு கலை இது.

நிதர்சனம் இப்படி இருக்க அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்கிற நூலில் இந்த மையை தயாரிப்பது பற்றியும், அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

பார்க்கவே யின்னமொரு சூட்சங்கேளு
பரமான மூலியடா யார்தான்காண்பார்
யேற்கவே சொல்லுகிறேன் புலத்தியாகேள்
யிளசான தாமரையின் கொடியை வாங்கி
தீற்றமுட னக்கொடியை வுலர்த்திநல்ல
சிவந்தமட்டுக் குள்ளிருத்தி மேலேசுத்தி
சேர்க்கையுடன் நெய்நனைத்து தீபமேத்தி
தீபமதால் யெரிந்துஅது கரியாங்காணே.

காணவே கரியெடுத்து கல்வத்திட்டு
கருவான யேரண்டத் தயிலத்தாலே
பூணவே யீராறு சாமமாட்டி
புத்தியுடன் அதுக்குநிகர் சவ்வாதுசேர்த்து
தோணவே மத்தித்து சிமிழில்வைத்து
சுத்தமுடன் சற்குருவைத் தியானம்பண்ணி
பேணவே புருவனடுச் சுழினைமீது
பிலமான மையெடுத்து திலர்தம்போடே.

போடப்பா திலர்தமது போடும்போது
திரணமாய் நின்றுமன தறிவால்போட்டால்
சூடப்பா கொண்டேகி கண்திறந்து
தொலைதூரங் காணுமடா சுழிக்கண்ணாட்டம்
நாடப்பா தூரதிஷ்டி விபரமெல்லாம்
நயனமதில் தோணுமடா நந்திவாழ்வு
தேடப்பா அவ்வாழ்வு யோகவாழ்வு
சிவசிவா சிவயோக வாழ்வில்நில்லே.

- அகத்தியர்.

தாமரை செடியின் கொடியை எடுத்து வெய்யிலில் காயவைத்து எடுத்து, அதை சிவப்புநிற துணியில் சுற்றி திரிபோல் செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த திரியை விளக்கில் இட்டு பசு நெய்விட்டு தீபமேற்ற வேண்டுமாம் அப்படி தீபமேற்றினால் அந்த திரி எரிந்து கரியாகி இருக்குமாம். அந்த கரியை எடுத்து கல்வத்தில் இட்டு ஏரண்டத் தைலம் விட்டு பன்னிரெண்டு சாமம் அரைத்து எடுத்து பிறகு அதற்கு சம அளவில் சவ்வாது சேர்த்து மத்தித்து சிமிழில் சேகரித்து கொள்ள வேண்டும் என்கிறார்.

தேவை ஏற்படும் போது புருவ மத்தியில் அந்த மையைக் கொண்டு திலகம் இட்டு கொள்ள வேண்டுமாம். இப்படி செய்யும் போது எது தேவையோ அதனை மனதால் நினைத்து உணர்ந்து திலகமிட்டால், உட்கண் திறந்து தொலை தூரத்தில் நடப்பவைகள் எல்லாம் மனக்கண்னில் தோன்றுமாம். அப்படி தோன்றும் போது அந்த தகவல் அறிவைக் கொண்டு யோக வாழ்வும் அதற்கு தேவையானவற்றையும் தேடி அறிந்து சிவ யோக வாழ்வைக் கடைப்பிடிக்கலாமாம் என்கிறார் அகத்தியர்.

சுவாரசியமான தகவல்தானே!... ஆர்வமும், குருவருளும் கூடியவர்கள் முயற்சித்துப் பார்க்கலாமே!!

குறிப்பு :- புதிய தமிழ் திரட்டியான “யுடான்ஸ்”, இந்த வாரத்திற்கான நட்சத்திர பதிவாக நமது சித்தர்கள் ராச்சியத்தை தெரிந்தெடுத்திருக்கின்றனர். இதற்காக யூடான்ஸ் திரட்டியின் நிர்வாகிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

19 comments:

Sasikumar C said...

Good info...great work

Anonymous said...

நல்ல தகவல் தோழி யுடான்ஸ் தளத்தில் " சித்தர்கள் ராஜசியம் " தை இந்த வார நட்சத்திர பதிவாக அறிவித்தமைக்கு எனது வாழ்த்துக்கள் !!!

ப்ரவீன் குமார் .. :)

kimu said...

vazthukkal thozi.

kabelan said...

வாழ்த்துக்கள் ......... தோழி....

Rathnavel said...

வித்தியாசமான தகவல்கள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

piravipayan said...

ஹல்லோ தோழி

வர வர சித்தர்கள் ராஜ்யம் சித்த மருத்துவ ராஜ்யம் மாதிரியும் தோன்றுகிறது
மை நீங்கள் தயாரித்து சோதனை செய்த பிறகு பதிவில் அனுபவத்தை வெளிபடுத்தலாம். நீங்கள் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மற்றும் சந்தேகங்களுக்கு முறையான பதிலை தரலாம். இல்லை என்றால் உடான்ஸ் வலையின் பதிவாகிவிடும்

Advocate P.R.Jayarajan said...

'ஏரண்டத் தைலம்' விளக்கம் தெரிந்தால் செய்து பார்த்து விடலாம்..

ESWARAN said...

eranda thailam = aamanaku thailam(castor oil)

bharathraja said...

yeranda thailam yentral yenna?

Krish Rajendran said...

test pani success anavar yarum undaa????

Krish Rajendran said...

யாராவது வேட்றி கரமாக செய்தவர் உண்டா?

Krish Rajendran said...

???

Sri hari said...

Hi,
Anybody experienced this

kc mohan said...
This comment has been removed by the author.
kc mohan said...
This comment has been removed by the author.
ஐயப்பன் கிருஷ்ணன் said...

குருவாக கேசி மோகனைப் பெறுவதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. இந்த குழுவில் இருக்கும் ஆக்களை நீங்கள் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் குருவே

bala chandran said...

neinga soilrathilam ok but thaliva soilla mattringa

jeeva rathinam said...

erazhinjal vidhayai kuzhithayalam irakki payanpaduthuvadhuku perdhn eranda thailam

jeeva rathinam said...

yes me

Post a Comment