அகத்தியர் அருளிய மிருக வசியம்!

Author: தோழி / Labels: ,

இயல்பில் சித்தர்கள் வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகியே வாழ்ந்திருந்தனர். தங்களுடைய அக மற்றும் புறத் தேடல்களுக்கு மனித சஞ்சாரமற்ற தனிமையான இடங்களே அவசியமாக இருந்தன. இதன் பொருட்டே காடுகள், மலைகள் என இயற்கையின் மடியில் வாழ்ந்திருந்தனர்.

இம்மாதிரியான இடங்களில் மனித சஞ்சாரம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்... ஆனால் விலங்குகள்?

வனத்தில் நிறைந்திருக்கும் விலங்குகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கென சில உபாயங்களை சித்தர்கள் பயன் படுத்திவந்தனர். இன்றும் கூட காடுகளில் வாழ்ந்திருக்கும் பழங்குடியினர் இம்மாதிரியான சில வழிமுறைகளை கைக் கொண்டு காட்டு விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

அகத்தியரும் கூட தனது அகத்தியர் பரிபூரணம் என்கிற நூலில் இம் மாதிரியான ஒரு வசிய உத்தியை அருளியிருக்கிறார். அதனை இன்று பார்ப்போம்.

இருந்துநிலை தானறிந்து யோகஞ்செய்ய
யேகாந்த புலத்தியனே ஒன்றுகேளு
வறிந்துநின்ற மிருகமெல்லாம் வசியமாக
மார்க்கமுடன் மந்திரந்தான் ஒன்றுகேளு
அருந்தவமாய்ச் சொல்லுகிறோம் நன்றாய்க்கேளு
அக்உக் கென்றுமிக அழுத்தியூது
பரந்துவரும் மிருகமெல்லாம் அசந்துபோகும்
பாலகனே சுழிமுனையில் பதிவாய்நில்லே.

- அகத்தியர் பரிபூரணம்.

இந்த பாடல் அகத்தியர் தனது சீடனான புலத்தியருக்கு சொல்வதைப் போல அமைந்துள்ளது. மனதை ஒரு நிலைப் படுத்தி சப்தமாக அக் உக் என்று அழுத்தி உச்சரிக்க மிருகங்கள் எல்லாம் வசியமாகும் என்கிறார். இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் எந்த வகையான வன விலங்குகளிடம் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாமாம்.

இம் மாதிரியான ஆச்சர்யமான தகவல்கள் எல்லாம் ஏட்டளவில் உறைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அல்லது ஆய்வாளர்கள் இவற்றை எல்லாம் பரீட்சித்து இதன் உண்மைத் தன்மையை உறுதி செய்தால் பலரும் பயன் படுத்திடக் கூடியவையாக இருக்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

19 comments:

Unknown said...

...எந்த வகையான வனவிலங்குகளிடமிருந்தும் நம்மை காத்துக்கொள்ளலாம் " என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நகரவாசிகளுக்கு இதற்கான வாய்ப்புதான் இல்லையே

Ramees said...

ithe pathi scientifical la ethavathu research irukka?

Ramees said...

ithappathi scientifical a ethavathu research panni irukkankala?

Advocate P.R.Jayarajan said...

சித்தர்கள் சொல்லிய சூட்சுமங்களை கற்றுக் கொண்டால் பெரும் நன்மை கிடைக்கும் !

SURESH said...

அருமையான பதிவு

SURESH said...

What is Scientifical Mr.RameesLine?

SURESH said...

யாரவது ஆராய்ந்து பார்த்து சொன்னால் தான் நம்புவீர்களா? நீங்களே முதலில் ஆராய்ந்து பாருங்கள், பின்பு அதன் அருமை புரியும்.

senthil said...

ohm nangily sing am this manthiram is used to
stop a snake

Wind said...

செந்தில் , அந்த மத்திரத்தை தமிழ்-ல சொல்ல முடியுமா. தப்பு இல்லாம புரிஞ்சுக்க விரும்பறேன்.

anandh said...

அருமையான பதிவு தோழி,உங்கள் சேவை தொடரட்டும்.

umavaishnavi said...

very useful messages

umavaishnavi said...

very useful messages

ananda said...

thozi,

sitharkal avarkalin apura sakthinal ithai seytharkal nammal ithai seyamudiyuma sollunga thozi............

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

Unknown said...

NICE ONE

Unknown said...

ss

Unknown said...

anbavathal unaralam

Anonymous said...

Much appreciated

Suresh GV said...

Y u wouldn't. Reple

Post a comment