குண்டலினி.... நாடிகளின் சூட்சுமம்!!

Author: தோழி / Labels: , ,

குண்டலினி தொடரின் நெடுகே ஒவ்வொரு சக்தி ஆதார சக்கரங்களில் இருந்து தாமரை இதழைப் போல வெளிக் கிளம்பும் நாடிகளைப் பற்றி பார்த்தோம்.

இதன் பின்னே இருக்கும் சூட்சுமத்தை தொடரின் இறுதியில் பகிர்வதாக கூறியிருந்தேன். தொடரின் போக்கில் இந்த குறிப்பை அவதானிக்க தவறி விட்டேன். நிறைய நண்பர்கள் இதைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர்.

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி....

குண்டலினி யோகத்தின் போது மூலாதாரத்தில் நான்கு இதழ்களும், சுவாதிஷ்டானத்தில் ஆறு இதழ்களும்; மணிபூரகத்தில் பத்து இதழ்களும், அநாகதத்தில் பன்னிரெண்டு இதழ்களும், விசுத்தியில் பதினாறு இதழ்களும், ஆக்ஞையில் இரண்டு இதழ்களும் வெளிக் கிளம்புவதைப் பார்த்தோம். இந்த நாடிகள் அதிரும் போது ஒலி உருவாவதையும் பார்த்தோம்.

சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது மிக நுட்பமானது, சூட்சுமம் நிறைந்ததும் கூட. பஞ்சாக்கரம் என்பது ஐம்பத்தியோரு தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது. ”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச் சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது.

அகத்தியர் துவங்கி திருமூலர், பட்டினத்தார், சிவவாக்கியார், கோரக்கர் போன்ற பல சித்தர் பெருமக்கள் இந்த ஐம்பத்தி ஒன்று எழுத்த்துக்களின் மகத்துவத்தை பாடியுள்ளனர்.

திருமூலர் தனது திருமந்திர மாலை என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"பெறுதியில் அம்முதல் பேசும்க்ஷவ் வீறாய்
அறிவதெழுத்தைம்பத் தொன்றுமங் கானதே"


- திருமூலர்.

மேலும் திருமூலரே தனது திருமந்திரம் என்னும் நூலிலும் பஞ்சாக்கரம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.

- திருமூலர்.

அருணகிரி நாதரும் தனது திருப்புகழில் பஞ்சாக்கரத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"அகர முதலென உரைசெய் ஐம்பத்தோரட்சரமும்"

-அருணகிரிநாதர்.

இப்படி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை பஞ்சாக்கரத்திற்கு எடுத்துக் காட்டாய்ச் சொல்லலாம். இவற்றின் படி, இந்த ஐம்பத்தி ஒரு எழுத்துக்களையும் மிக முக்கியமானதாகவும், உயர் தனித்துவமானவை என்று போற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது மீண்டும் குண்டலினிக்கு வருவோம். குண்டலினி யோகத்தில் ஏழு முக்கிய ஆதாரங்களில் இருந்து வெளிக்கிளம்பும் நாடிகளின் அதிர்வுகளால் ஏற்படும் ஒலிகளை தமிழ் எழுத்துக்களாக குறித்திருப்பது உங்களுக்கு இப்போது நினைவுக்கு வரலாம்.

நண்பர்களே, குண்டலினி யோகத்தில் ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும் போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும் ஓசையைத்தான் சித்தர்கள் பஞ்சாக்கர எழுத்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர். ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழும்பும் ஐம்பது நாடிகளின் சப்பதங்கள் அய்ம்பது எழுத்துக்களாகவும், துரிய நிலை சித்திக்கும் போது உருவாகும் உருவாகும் பேசாமொழியான ஓரெழுத்தும் சேர ஐம்பத்தியோரு எழுத்துக்கள் ஆகின்றன. இந்த பேசா மொழியைப் பற்றி முந்தைய பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். இதனை நாயோட்டு மந்திரம் என்றும் அழைப்பர்.

வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது. இதனை மனதில் கொண்டே நம் பெரியவர்கள் தமிழை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து பேசினாலே உடல்நலம், ஆன்மநலம் சிறக்கும் என கூறியிருக்கின்றனர். நாம்தான் அதனை மனதில் கொள்ளாமல் பிறமொழி மோகத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.

பிற்சேர்க்கை: பஞ்சாக்கர எழுத்துக்கள் பற்றிய எனது பழைய பதிவினை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

Shiva said...

குண்டலினி தொடர் மிகவும் அருமை தோழி.

Statsfact said...

அன்புள்ள தோழி,

அகத்தியர் அருளிய நாவல் மரம் வைத்து பூஜை செய்து என் சகோதரி ஒருவற்கு பிள்ளை பாக்கியம் கிடைத்து உள்ளது.
ஆகஸ்ட் 31 - (ரம்ஜான) அன்று பூஜை செய்தார்கள் - அக்டோபர் 1 - டாக்டர் உறுதி படுதிள்ளர். அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம்.

அகத்தியற்கும் - தோழிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

abitha said...

The way you present the subtle issues ,interlinking many aspects of human body mechanism and the very flow of appropriate words and sentences simply help a searcher to comprehend and know the existance. Thanks

abitha said...

தமிழின் தோற்றம் எங்கே என்று வெளியில் தேடித்திரிந்தோம். உள்ளே கண்டகொண்டபின் உவகை கொள்கிறேன்.. மொழி ஆய்வில் இருந்த முடிச்சு விலகியது. தமிழ், தமிழி, சமஸ்க்ரித்த ... தெளிவாயிற்று. நன்றி எனது அகக்கண்ணை திறந்த தற்கு....

sundar said...

can you provide me the first few link for this article.........

Piththa_ Piraisoodi said...

ஐந்திறம்: ஒளியும், வெளியும் சேர்ந்தசைந்து “ஓம்” என்ற மூலஒலி பிறக்கிறது. ஒளியnuவும், ஒலியnuவும் மேலும் எழுச்சியும் சூழற்சியும் கொள்வதால் மூல ஒலிகளான அ, இ, உ, எ ஆகியவை தோன்றுகின்றன (a,e,i,u). இம்மூலவொளிகள் விண்ணிலும் சிதாகaயத்தாலும் தோன்றுவது இயற்கையின் இயல்பு என ஐந்திறம் கூறுகிறது. எனவே “இயல்மொழி” – இயற்கை முதன் முதலில் பேசிய மொழி தமிழாயிற்று. இது விண்பேசிய மொழி. இன்றும் சொல்லப்போனால் இது ஒளி பேசிய முதல்மொழி.
ஒளிமுதல் கண்ட விண்ணொலி ஓசை
வெளிமொழி ஓமென விளம்பற் பாற்றே – ஐந்திறம்!

senthilsh said...

FANTADTIC

jaisankar jaganathan said...

இப்பத்தான் பாயிண்டுக்கு வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்

Saravanan Subramani said...

நன்றி

Post a Comment