மூலாதாரத்திலிருந்து ஆறாவது சக்தி ஆதார மையமாய் குறிக்கப்படும் ஆக்ஞா சக்கரம் பற்றி இன்று பார்ப்போம். இதனை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
ஆள்வாயே யாதாரஞ் சொச்சங்கேளு
அருளினோம் விசுத்தி யாக்கினையைகேளு
பாள்வாயே இதற்க்குமேல் பதினாறங்குலந்தான்
பாலகனே கண்டமார் புருவமாகும்
மாள்வாயே மளவாகி யளவாக்லோங்கி
மகத்தான யிரண்டிதளாய் பிரிந்தே நிற்கும்
யேள்வாயே வட்சரந்தான் னிரண்டதாகும்
இதனடுவில் யகார மாக்கினை வீடாமே.
- அகத்தியர்.
இந்த சக்கரம் நமது புருவ மத்திக்கு நேராக மூளையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப் படுகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில் நமது நெற்றியில் உள்ள பள்ள முடிச்சுக்கு இனையாக இருக்கிறது. இதற்குத் 'திரிகூடம்" என்றும் பெயர். இந்த ஆக்ஞா சக்கரமும் மற்ற சக்கரங்களைப் போல சுழுமுனை நாடியில் அமைந்துள்ளது.
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "ய" என்னும் எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குவதாக இது அமைகின்றது. இதன் மூலக்கூறு நெருப்பு. கண்கள், நெற்றி போன்றவை தொடர்புடைய உறுப்புகளாகும்.
அக்ஞா சக்கரத்தில் இரண்டு தாமரை இதழ்களை போல் இருபக்கமும் எதிரெதிரே இரண்டு யோக நாடிகள் உள்ளன. இவற்றை சூரிய சந்திர அம்சமாக உருவகம் செய்திருக்கின்றனர். இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை ஹ, ள என்ற எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் ஆக்ஞா சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கரத்தின் அதிதேவன் பரமசிவன், அதி தேவதை வாகினி. மூல மந்திரம் "ஓம்". அக்ஞா சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல மந்திரத்தை உருவேற்றி வர விசுத்தி சக்கரத்தில் இருக்கும் குண்டலினியானது மேலேறி அக்ஞா சக்கரத்தை வந்தடையும்.
ஆக்ஞா சக்கரம் மலர்வதையே நெற்றி கண் திறப்பதாக பொதுவில் குறிப்பிடுகின்றனர். இத்தகைய மலர்ச்சி நிலையில் சாதகனின் கவனக்குவிப்பு, விழிப்புணர்வு, நினைவாற்றல் போன்றவை பல மடங்கு அதிகரிக்கும். வாழ்வின் ஞானத்தை எல்லாம் தன்னகத்தே ஈர்த்துக் கொண்ட உயரிய நிலை இது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment




5 comments:
Valga Valamudan
first class
திருமண தடை நீக்கம் சம்பந்தமாக ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும். என்றும் இனிய அன்புடன் வாகை பா.க.செல்வராஜ்
Hha is not a tamil word? Is Agathiar writings are in Tamil and sanskrit???????
@Everyoneஹ என்ற எழுத்து தமிழ் தான். வடமொழியில் உள்ள हा என்ற உச்சரிப்பை தமிழில் உச்சரிக்க பயன்படுத்தப்பட்டது தான் இந்த எழுத்துக்கள்
Post a Comment