குண்டலினி - அனாகதம்.

Author: தோழி / Labels: ,


நமது உடலில் இருக்கும் நான்காவது ஆதார சக்கரமான அனாகதம் பற்றி இன்று பார்ப்போம். அநாகதம் என்றால் உருவமற்ற அல்லது உருவகிக்க இயலாத ஒலி என்பதாகும்.

இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவில் சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது. இதனை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா பூரகத்தின் மேலேகேளு
பாடுகிறோ மெட்டங்குலந்தா னனாகததின்வீடு
தேர்ந்தயிதழ் பன்னிரெண்டாய் சுற்றிநிக்கும்
ஏரப்பா தேயுவது யிருப்பிடமாய் நிற்க்கும்
பிருப்பிடத்தில் சிகாரமென்ற எழுத்தாமே
எழுத்தான பூதமதின் பீஜங் கேளு
இயம்புவேன் யமதுவும் மிடமேயாகும்
செத்தான அவ்வெழுத்தில் ருத்ரன்காகினிதானே.

-அகத்தியர்.

இந்த அனாகத சக்கரம் இதயத்தோடு தொடர்புடையதாக கூறப் படுகிறது. இதன் மூலக்கூறு காற்று. அதிதேவன் ருத்ரன், அதிதேவதை காகினி. இதன் மூல மந்திரம் “யம்” என்பதாகும். இந்த சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "சி" என்னும் எழுத்தையும் அதன் தத்துவத்தையும் விளக்குவதாக அமைகின்றது.

அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் அனாகதச் சக்கரத்தின் மாதிரி படம் இது.


இந்த சக்கரத்தில் இருந்து பன்னிரெண்டு யோக நாடிகள் தாமரை இதழ் போல வெளிக் கிளம்புகின்றன. இவற்றின் அசைவுகளால் உண்டாகும் சப்தங்களை சித்தர் பெருமக்கள் பின் வரும் எழுத்துக்களால் குறிக்கின்றனர். அவை சங, கக, கக, டட, ஞஜ, ஜச என்பதாகும். சக்கரத்தின் மையத்தில் சப்த பிரம்மத்தின் நாதமான, அனாகத சப்தம் கேட்கும்.

அனாகத சக்கர இடத்தை மனதில் இருத்தி மூல மந்திரத்தை தொடர்ந்து உருவேற்றி வர மணிப்புரக சக்கரத்திலிருந்து குண்டலினி எழும்பி, அனாகதம் வந்தடையும். இந்த சித்தி சில நாட்களிலும் வாய்க்கும், சமயங்களில் சில வருடங்கள் கூட ஆகலாம். இது முழுக்க சாதகனின் பொறுமை மற்றும் கவனக் குவிப்பை பொறுத்தது.

மூலாதார சக்கரத்தில் இருந்து எழுப்பப் பட்ட குண்டலினியானது அனாகத சக்கரத்தை வந்தடையும் போது அதற்கு “அக்கினி குண்டலினி” என்று பெயராகிறது. இப்படி அனாகத சக்கரம் மலர்ந்த நிலையில், சாதகனின் உள்ளத்தில் கருணை, அன்பு, இரக்கம் போன்ற சாத்வீக குணங்கள் மேம்படும். படைப்பாற்றலின் ரகசியமும் புரியவரும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

6 comments:

Purushothaman said...

Good Work
Thanks

piravipayan said...

தோழி தாங்கள் எழுதிய குண்டலினி விஷயங்கள் நன்றாக உள்ளது ஆனால் இதை செய்ய நல்ல ஆசிரியன் கிடைப்பாரா? அவர் எங்கு இருக்கிறார் சொல்ல முடியுமா

ரவி 09487774444

piravipayan said...

தோழி தாங்கள் எழுதிய குண்டலினி விஷயங்கள் நன்றாக உள்ளது ஆனால் இதை செய்ய நல்ல ஆசிரியன் கிடைப்பாரா? அவர் எங்கு இருக்கிறார் சொல்ல முடியுமா

ரவி 09487774444

''இறைவனடி யுவராஜா'' said...

நல்ல பதிவு தோழி....

மாய உலகம்4u said...

சாத்வீக குணம் மேம்பட... அருமையானதொரு மந்திரத்தை பகிர்ந்துள்ளீர்கள்... மனம் கவனகுவிப்புடன் செய்ய சொல்லியுள்ளீர்கள்.. பலன் அடைய பொருமை வேண்டுமென அழகாக பகிர்ந்துள்ளீர்கள்

LAV said...

Nalla pathivugal. Vazhthukkal.

Post a Comment