மூன்றாவது சக்தி ஆதார மையமான மணிப்பூரக சக்கரம் பற்றி இன்று பார்ப்போம்.
தாயின் வயிற்றில் இருந்து பிறந்த உடன் நம்முடைய உடலில் ஒரு முடிச்சு இடப் படுகிறது. அது தொப்புள் கொடியாகும். இந்த உடல் உருவாகி, உயிராகத் தேவையான பிராணன் இந்த கொடியின் வழியேதான் நமக்குள் அடைக்கப் படுகிறது என சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு அடைக்கப் பட்ட பிராணன் தொப்புளைச் சுற்றி குடி கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
இந்த சக்தி மையத்தையே நாம் மணிப்பூரகம் என்கிறோம். இது சுழிமுனை நாடியில் அமைந்திருக்கிறது. இது நமது வயிறு, சிறுகுடல், மண்ணீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளுடன் தொடர்புடையதாக கூறப் படுகிறது. இதன் மூலக்கூறு நெருப்பு ஆகும். மணிப்பூரகத்தில் தகித்துக் கொண்டிருக்கும் இந்த நெருப்பு மங்கி அணையும் போதுதான் நம் உடல் நோய்வாய்ப் பட்டு பலவீனம் அடைந்து பின்னர் உயிர் பிரிவதாகவும் ஒரு கருத்தாக்கம் கூறப்பட்டிருக்கிறது.
இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன் அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட, ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால் குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின் அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/லாகிணி. இதற்கான மூல மந்திரம் “ரம்”
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும் மணிபூரகச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
மணிப்பூரக சக்கரத்தின் நடுவே முக்கோண வடிவம் ஒன்று உள்ளது. இது நெருப்பினை அடையாளப் படுத்துகிறது. இந்த சக்கரமானது “சிவயநம” என்னும் எழுத்துக்களில் ஒன்றான “ம்” என்பதன் தத்துவத்தை விளக்குவதாக அமைந்திருக்கிறது.
மணிப்பூரகத்தை மனதில் இருத்தி, இதன் மூல மந்திரத்தினை உருவேற்ற சுவாதிஷ்டானத்திலிருந்து குண்டலினியானது எழும்பி மணிப்பூரகத்தை வந்தடையுமாம். இது மிகக் கடுமையான பயிற்சி மற்றும் முயற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.
முறையான பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த குருவின் வழிகாட்டுதல் இல்லையெனில் இந்த நிலையை தாண்டுவது மிகக் கடினம். ஏனெனில் முறையற்ற பயிற்சி உடலில் தேவையற்ற பக்க விளைவுகளை உருவாக்கிடும். இதை என்னுடைய சொந்த அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். எனவே தக்க வழிகாட்டுதலுடன் பயில வேண்டுகிறேன். இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரிதான்.
முறையாக பயிற்சி செய்து சுவாதிஷ்டானத்தில் மலர்ந்திருக்கும் குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்தால், நமது உயிர் சக்தி தூண்டப் பட்டு உடலின் உறுதி மற்றும் உடல் நலம் மேம்படும். இத்தகைய சக்கரம் தூண்டப் பட்டவர்கள் கடுமையான உழைப்புக்கும் அஞ்சாதவர்களாய் மாறிவிடுவர்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment




6 comments:
தகவலுக்கு மிக்க நன்றி
"குரு இல்லா வித்தை பாழ் வித்தை"
ரம் என்பதனை சுவாதிடான சகரத்திலேயே குறிப்பிடபட்டுள்ளது .மணிபுரகதிற்கும் ரம் எனபது சரியாய் தோழி ஏதேனும் மாற்றம் இருப்பின் தெரிவிக்கவும்
அரிய செய்திகளை அறியத் தரும் தோழிக்கு இதய நன்றி.
nalla valikatuthal.
Nengal karrukodukerekala?
venkat
உண்மை தான் தோழி..மிக உயரிய பதிவாக இருப்பதால் ... படித்து விசயத்தை அறிந்து கொள்கிறோம்... தேவையில்லாமல் பக்க விளைவு என்ற பயத்தை அடைய மனம் பயப்படுகிறது.... எச்சரிக்கையுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.
i need your contact my mobile no====09345503142
Post a Comment