குண்டலினியும் முன் தயாரிப்பும்!

Author: தோழி / Labels:

குண்டலினி யோகத்தை துவங்குவதற்கு தேவையான முன் தயாரிப்புகளையே இத்தனை நாளாக பார்த்து வந்திருக்கிறோம்.அந்த வரிசையில் தனிமையான,அமைதியான சூழலில் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து இந்த பயிற்சியினை துவங்கிடலாம் என்பது வரை நேற்றைய பதிவில் பார்த்தோம்.

பத்மாசனத்தில் அமரும் போது முதுகுத் தண்டானது நிமிர்ந்து இருப்பதால் சுவாசமானது மூலாதாரத்தில் இருந்து துரியம் வரை தடையின்றி செல்லும் என்கின்றனர்.மேலும் பத்மாசனத்தில் அமரும் போது நீண்ட நேரம் சோர்வின்றி அமர்ந்திருக்க முடியும்.மேலும் இப்படி அமரும் போது விரல்களில் சின் முத்திரை அல்லது ஞான முத்திரை வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஆசனம் தயாராகிவிட்டது. அடுத்த நிலை சுவாசத்தை கவனிக்க ஆரம்பிப்பதுதான், சிலர் சொல்வது போல தினமும் இத்தனை நிமிடங்கள் அமர்ந்திருந்தால் போதுமானது என்பதில் எனக்கு உடன்பாடில்லை, சித்தர்களும் அத்தகைய நேரக் கட்டுப்பாட்டினை வரையறுக்க வில்லை. நம்மால் எத்தனை நேரம் கவனம் குவித்து சுவாசத்தை கவனிக்க முடியுமோ அத்தனை நேரம் செய்வது சிறப்பு.

ஆரம்ப நாட்களில் சுத்தமாய் உங்களால் சுவாசத்தை கவனிக்கவே முடியாது. அப்படி யாராவது கவனிக்க ஆரம்பித்து விட்டேன் என யாரும் சொன்னால் அதை நம்பவும் கூடாது.மனம் நிறையவே அலைபாயும், அது எங்கெல்லாம் போகிறது என்பதை கவனிக்க ஆரம்பியுங்கள், மனம் தானாய் உங்களை நோக்கி மீண்டு வரும். அப்படி வரும் போது சுவாசத்தை கவனிக்க சொல்லுங்கள். கவனம் குவியும். வலிந்து செய்வதை காட்டிலும் இது மிக எளிய உத்தி!

வெறுமனே சுவாசத்தை மட்டும் கவனித்தால் போதுமானது, எதுவும் அற்புதம் நிகழும் என்றெல்லாம் எதிர்பார்க்கவே கூடாது. உடலை, மனதை, சுவாசத்தை தளர்வாக்கவே இந்த பயிற்சி. நாட்கள் செல்லச் செல்ல சில மாற்றங்களை உணரத் துவங்குவீர்கள். இதனை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். என்னுடைய அனுபவத்தைச் சொல்ல வேண்டுமெனில் ஒரு உள்ளார்ந்த அமைதி உண்டாகும். அது நமக்கு பிடித்தமானதாக இருக்கும்.

இந்த நிலையில்தான் குண்டலினியை பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

இனி நமது செயல்திட்டம் இரண்டு கட்டங்களை உள்ளடக்கியது. முதலில் குண்டலினியை விழித்தெழச் செய்வது, அடுத்து அவற்றை அடுத்த அடுத்த ஆதார மையங்களான சக்கரங்களை நோக்கி நகர்த்துவது அல்லது உயர்த்துவது.

இது மூலாதாரம் துவங்கி துரியம் வரை ஆறு நிலைகளில் நடைபெறும். ஒவ்வொரு சக்கரமும் மலரும் போது அதற்கான பலன்களை நாம் உணரத் துவங்குவோம். இந்தப் பயணத்தில் உடல் ரீதியான சில பிரச்சினைகளையும் நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

ஆக, முன் தயாரிப்புகள், விளக்கங்கள் எல்லாம் முடிந்து மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியை விழித்தெழச் செய்யும் கட்டத்திற்கு வந்து விட்டோம்.

நாளை முதல் சக்கரமான மூலாதாரம் பற்றியும், அதற்கான பயிற்சிமுறை, பலன்கள், விளைவுகள் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

5 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

நல்ல விளக்கம் தோழி!!

Rudran said...

நன்று தோழி ......



ப்ரவீன் குமார் ..

robinson said...

நல்ல விளக்கம் தோழி!!

R.Gopi said...

அருமை... அருமை...

தொடர்ந்து இணைந்திருக்கிறேன்....

M-Designs said...

ஒரு உள்ளார்ந்த அமைதி உண்டாகும். அது நமக்கு பிடித்தமானதாக இருக்கும்...!!!

(உண்மைதான் தோழி..!!)

அற்புதம் நிகழும் என்றெல்லாம் எதிர்பார்த்து..Meditation = தவம் செய்தல்..கூடாது...!! --அருமை..யாக..சொல்லியிருக்கீங்க!!
(குண்டலினி-தவம் உயிருக்கு செய்யும் வழிபாடு)
Refresh to our Soul............................

Post a Comment