குண்டலினி எழுந்தால் என்னவாகும்?

Author: தோழி / Labels: ,


குண்டலினி என்பது நமக்குள் புதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும், அது பாம்பைப் போல மூன்றரை சுருளாக சுருண்டு நமது மூலாதாரத்தில் புதைந்திருக்கிறது என்றும் பார்த்தோம். இந்த குண்டலினி நம் எல்லோரிடமும் இருக்கிறது, இதை அறிந்து உணர்ந்து தூண்டுவதன் மூலம் பேரற்புதம் வாய்ந்த ஒரு அனுபவமாகவும், ஆற்றலாகவும் மாற்றிட முடியும் என்கின்றனர் சித்தர்கள்.

குண்டலினியை தூண்டுவதற்கு முன்னர், நமது உடலைப் பற்றிய சித்தர்களின் தெளிவு ஒன்றினை பார்த்துவிடுவோம். நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது என்றும், இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில் இனைக்கப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இது குறித்து அடுத்து வரும் பதிவுகளில் விரிவாக பார்க்க இருப்பதால் மீண்டும் குண்டலினியை கவனிப்போம்.

குண்டலினி அசைவற்ற பாம்பினை ஒத்த நிலையில் இருப்பதாக பார்த்தோம். பாம்பினை சீண்டினால் என்ன ஆகும் சீறிக் கிளம்பும்தானே!, சீறிக் கிளம்புகிற பாம்பு ஊர்ந்து செல்லவும் வேண்டுமல்லவா!!

ஆம்!,குண்டலினியை தூண்டும் போது அது மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி கிளம்பிடுமாம்.அப்படி கிளம்புகிற குண்டலினி சக்தியானது மூலாதாரத்திலிருந்து மேலே பயணித்து துரியம் என்கிற உச்சந்தலை வரை கொண்டுவரலாம் என்கின்றனர். இந்த துரியத்திற்கு குண்டலினியை கொண்டு வந்தால் சமாதி சித்திக்கிறதாம். இதை காகபுசுண்டர் “சஞ்சார சமாதி” என்கிறார்.

இப்படி குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து உச்சந்தலையான துரியத்திற்கு கொண்டு வந்தால் என்னவாகும்?

அந்த அனுபவத்தை கொங்கணவர் பின்வருமாறு விளக்குகிறார்.

உணர்வற்று வுடலற்று யோகமற்று
யோடுவது மாடுவது மிரண்டுமற்று
பணர்வற்று நினைவற்றுப் பாசமற்றுப்
பார்க்கிறதும் பாராது மிரண்டுமற்றுச்
சுணர்வற்று லெச்சையற்றுக் கூச்சமற்று
சொல்வதுவுஞ் சொல்லாது மிரண்டுமற்று
நிணர்வற்ற நிட்களத்தில் நிலைத்துப் போக
நேராக குண்டலியை நிலைத்துப் பாரே.

- கொங்கணவர் -

உணர்வற்று, உடலற்று, யோகமற்று, ஓடுவதற்று, ஆடுவதற்று, நினைவற்று, பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய இரண்டும் அற்று லெச்சை, கூச்சம், சொல்வது, சொல்லாதது போன்றவை அற்று, நிட்களமாகிய பிரம்மத்திடம் மனமும் புத்தியும் லயித்து போகவேண்டும் என்று எண்ணினால் குண்டலி யோகத்தை செய் என்கிறார் கொங்கணவர்.

இப்போது குண்டலினியை எழுப்பி மேலே கொண்டு போக வேண்டும். ஒரே மூச்சில் மேலேறிவிடுமா? அல்லது ஒவ்வொரு நிலையாக உயர்த்திட வேண்டுமா?

விவரங்கள் நாளைய பதிவில்....


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

14 comments:

Sakthivel said...

Arumai!!!

Balu said...

Can you please compare with these lines with what ever you explained above?

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாம லெரியுது வாலைப்பெண்ணே!

rkjrdp said...

I have no word to praise you. Are you a student? I can't believe it. (Don't mistake me.)

S.Puvi said...

அடுத்த பதிவுக்கு காத்திருக்கின்றேன்.
சித்தரியல் அறிவை வளர்க்கின்றமைக்கு நன்றிகள்

சத்ரியன் said...

உண்மை தான். குண்டலினி யோகம் ஒரு பேராற்றல் மிக்கதுதான். மிகவும் எளிமையானதும் கூட!

ரசிகன் said...

பெரிய முயற்சி. அரிய விஷயம்.
தொடருங்கள். தொடர்கிறேன்.

andkm said...

மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் தோழி !!!!

arul said...

nice post

பித்தனின் வாக்கு said...

good article. i am interested to read this. good job. go ahead

Raji Chandran said...

தனித்திரு விழித்திரு பசித்திரு !

Appuvijay said...

Nantri.......

Karthikeyan Ranganathan said...

Ithan sakthi migavum perithu. Ethiyam padaikum vallamai namakku tharum.

vallabha siddhan said...

குண்டலி எழுந்தால் -முதலில் வருவது -தலை சுற்றல்தான் ,லாகிரி உண்டால் என்ன நடக்குமோ ,அந்த செயல்கள் எல்லாம் குண்டலி விழித்தாலே நடக்கும் ,அதனால்தான் அதற்க்கு வேகாத் தலை என்று பெயர் ,முதல் நிலையே உடல் வேக்காடு அதிகரித்து ,தன்னிலை மறத்தலேன்ற நிலை ஏற்படும் ,முதல் நிலையிலேயே ,எல்லோரும் பயத்தில் ஓடிவிடுவர் ,

Thaniyan Pandian said...

மூலாதாரத்திலிருந்து துரியம் வரை ஏழு மையங்களின் வழியாக ஆற்றலை மேலேற்றும் தொடு உணர்வு (தீட்சை)மனவளக் கலை மன்றங்கள் மூலம் உலகமெங்கும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆன்மீக நல்லாசிரியரின் உணர்வு பரிமாற்றத்திற்கு பின் கணினியின் சூடு உடல் முழுவதும் கொதித்துப் பொய் அதனை சரி செய்ய உடனடியாக அமைதி (சாந்தி) தவம் பெற்றவன் என்ற முறையில் அதை இங்கு பதிவது எனது கடமை என பதிகிறேன்.

துரியாதீதம் என்ற (பரம்பொருள் கலப்பு, சமாதி (சமம்+ஆதி)) என்ற தவமும் "உலக சமுதாய சேவை சங்கத்தின்" மூலம் "எளியமுறை குண்டலினி யோகா மற்று காயகல்ப பயிற்சி" என்ற பாடத் திட்டத்தின் கீழ் எல்லோருக்கும் பயிற்சி தருகிறார்கள். ஆன்மீக நுண்மான் நுழைபுலம் பெற விரும்பும் ஆன்றோர் இதை பயன்படுத்தி எல்லோரும் இன்புற்றிருக்க செய்யலாம்!

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

Post a Comment