குண்டலினி....மேலும் சில தெளிவுகள்!!

Author: தோழி / Labels:

  • பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது நம்முடைய இந்த உடல்
  • உடலின் உள்ளேயும் வெளியேயும் நின்று இயங்கும் ஆற்றலையே நாம் உயிர் என்கிறோம்.
  • உயிரின் படர் நிலைதான் மனம்.
  • மனத்திற்கு “ஞானம்”, “உறுதி” என இரண்டு முகங்கள் உள்ளது. இவை தனித்துவமானவை.
  • உணர்தல், உணர்த்துதல் என்கிற இரண்டு வேலைகளை மட்டுமே மனம் செய்திறது.
  • நம்முடைய உணர்தல் மற்றும் உணர்த்தும் நிலைமை மேம்பட விழிப்புணர்வு தேவைப் படுகிறது.
  • குண்டலினியை தூண்டுவதன் மூலம் இந்த விழிப்புணர்வினை உயர் தனித்துவ நிலைக்கு கொண்டு செல்லலாம்.
இதுதான் கடந்த வாரத்தின் நெடுகே நாம் பார்த்தவைகளின் சாராம்சம். இவை எதுவும் புதிய விஷயங்கள் இல்லை. நம்மில் பலரும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இருப்பினும் அடிப்படை கூறுகளின் மீதான புரிதலை உருவாக்கிட முந்தைய இந்த பதிவுகள் உதவி இருக்கும் என நம்புகிறேன்.

இன்று குண்டலினி பற்றி மேலும் சில அடிப்படை தகவல்களை அணுகிடுவோம்.

குண்டலினி என்பது உயிருடன் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து இருக்கும் ஒரு வகையான நிலையான ஆற்றல் என்கின்றனர். முந்தைய பதிவுகளில் நாம் பார்த்த நிலை ஆற்றல், இயக்க ஆற்றல் தத்துவம் இப்போது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

குண்டலினி எங்கே இருக்கிறது?

நமது கருவாய்க்கும், எருவாய்க்கும் இடையே இருப்பதாக கூறியிருக்கின்றனர்.அதாவது நமது பிறப்பு உறுப்பிற்கும், ஆசன வாய்க்கும் இடையே நடுவில் புதைந்து இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த இடத்தையே மூலாதாரம் என்றும் அழைக்கின்றனர்.

ஏன் இந்த பெயர் வந்தது?

குண்டலினி என்பது காரணப் பெயர். குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி, அவை எளிதில் வெளியேறிவிடாதபடி பாதுகாக்கும் இடம். இந்த குண்டத்தை நமது உடலுக்கு ஒப்பாக சொல்கின்றனர். அத்தகைய குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற இந்த ஆற்றலை குண்டலினி என்கின்றனர்.

யாரெல்லாம் இதை கற்கலாம்?, எல்லோருக்கும் இது சாத்தியமாகுமா?

ஆர்வமும், விடா முயற்சியும் உள்ள எவரும் இதை கற்கலாம். தகுந்த குருவின் வழிகாட்டுதலில் கற்றுக் கொள்வதே சிறப்பு.

எத்தனை நாளில் குண்டலினி எழும்பும்?

மிக நிச்சயமாக ஒரே நாளில் எதுவும் சாத்தியமாகாது. நிதானம், பொறுமை, கவனகுவிப்பு ஆகிய இம் மூன்றுமே இதை சாத்தியமாக்கும்.

குண்டலினி பற்றி சித்தர்கள் என்ன சொல்லியிருக்கின்றனர்?

சித்தர்களின் குண்டலினி பற்றி நாளை முதல் பகிர்ந்து கொள்கிறேன்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.

ADMIN said...

ஆன்மீக நாட்டத்துடன், யோகத்தைப்பற்றியும் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். அனுபவித்தவர்களுக்கு எளிதில் விளங்கும். புதியவர்களுக்கும் புரியும்படி எளிய முறையில் எழுதியிருக்கிறீர்கள்..வாழ்த்துக்கள்..!! வாழ்க வளமுடன்..!

ADMIN said...

இங்கேயும் வந்து ஒரு பார்வையிட வேண்டுகிறேன்.. பதிவின் தலைப்பு: பற்றற்ற ஞானி!

ragav said...

இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

Post a Comment