குண்டலினி தொடரின் முந்தைய இரண்டு பதிவுகள் சில ஆதார அடிப்படைகள் தொடர்பான புரிதல்களை உருவாக்கியிருக்கும் என நம்புகிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று மற்றுமொரு தகவலையும் பார்த்து விடுவோம்.
உயிர் என்பது நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஓர் ஆற்றல் மையம். அந்த ஆற்றலே நம் உடலை இயக்குகிறது. உயிர் ஆற்றல் ஓங்கும் போது உடல் ஆரோக்கியம் சிறக்கிறது. உயிர் ஆற்றல் மங்கும் போது உடல் தளர்ந்து நோய் வாய்ப் படுகிறது. இதுதான் இதுவரை நாம் பார்த்த நமது வாழ்வியலின் அடிப்படை.
மனித உடலின் அளவுகளில் வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் நம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உயிர்தான் வாய்த்திருக்கிறது. அப்படி இருக்கையில் மனிதர்களில் ஏற்றத் தாழ்வு ஏன் உருவாகிறது. இதற்கு எளிமையான ஒரு பதில், தன்னை உணர்ந்து செயல்படுகிறவன் சிறப்புகளைப் பெறுகிறான். உணராதவன் துன்பத்தில் வீழ்ந்து உழல்கிறான். இந்த இடத்தில் உணர்தல் என்கிற வார்த்தை மிக முக்கியமானது. ஏனெனில் இதைப் பற்றிதான் இன்று பார்க்கப் போகிறோம்.இந்த உணர்தல் என்கிற வார்த்தையின் தத்துவம் மிகப் பெரியது. அதில் நமக்கு தேவையானதை மட்டும் இங்கே பார்ப்போம்.
உணர்தல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. அநேகமாய் நமது கடைசி மூச்சு இருக்கிற வரையில் ஏதேனும் ஒரு வகையில் இந்த உணர்தல் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த உணர்தல்கள்தான் நமக்கு உணர்வுகளை கொடுக்கிறது. இப்படி கொண்டு தரும் உண்ர்வுதான் நமக்கு முக்கியம். உணர்தல் ஒரு போதும் நமக்குள் தங்குவதில்லை. ஆனால் அவை தரும் உணர்வு நமக்குள் தங்கிவிடுகிறது.
இப்படி தொடர்ந்து நமக்கும் சேகரம் ஆகிக் கொண்டிருக்கும் உணர்வு ஒரு கட்டத்தில் நமக்கான உணர்தல் என்ன என்பதை தீர்மானித்து விடுகிறது. ஒரு கட்டத்தில் இவையே நம்மை வழி நடத்தவும் ஆரம்பித்து விடுகிறது.
ஒரு உதாரணம் இதை எளிமையாக விளக்கும். குழந்தையாக இருக்கிறீர்கள்.உங்கள் தாயார் உங்களை விழுந்து விழுந்து கவனிக்கிறார். பாதுகாக்கிறார். தாயாரின் அன்பை நீங்கள் உணர்கிறீர்கள். நன்றாக வளர்கிறீர்கள். இப்போது உங்கள் தாயார் உடல் தளர்ந்து மெலிகிறார். இப்போது உங்களுக்குள் சேகரமாகி இருக்கும் அம்மாவின் உணர்வு விழித்துக் கொள்கிறது. இப்போது நீங்கள் அம்மாவை விழுந்து விழுந்து கவனிக்கிறீர்கள்.பாதுகாக்கிறீர்கள்.
இன்னொரு உதாரணமும் பார்ப்போம். நீங்கள் குழந்தையாக இருக்கிறீர்கள். ஒரு நபர் உங்களை அடித்து துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார். அவரின் மீது வெறுப்பு உணர்வு வளர்ந்து கொண்டே போகிறது. இப்போது நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் அந்த நபருக்கு வயதாகிவிட்டது. வலுவிழந்து விட்டார். இப்போது உங்களுக்குள் இருக்கும் வெறுப்புணர்வு என்ன செய்யும்? எப்படி வெளிப்படும்?
இதுதான் உணர்தலுக்கும், உணர்வுக்குமான தொடர்பு... இதையே சித்தர்கள் அனுபவம் என்கின்றனர்.
உடலைப் பற்றி உணர துவங்குகிறவர்கள் ஆரோக்கிய வாழ்க்கையின் அவசியம் பற்றிய உணர்வினைப் பெருகிறார்கள். அப்படி பெற்ற உண்ர்வு உடல் ஆரோக்கியமாய் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என உங்களைத் தூண்டுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்கச் செய்கிறது. உடற்பயிற்சி செய்ய துவங்குகிறீர்கள், உணவுக் கட்டுப்பாடு செய்கிறீர்கள். பலன் உடல் வலிவும் பொலிவும் பெறுகிறது.
ஆக,நல்ல உணவும், நல்ல உடற்பயிற்சி என்கிற இரண்டும் உடலுக்கு வலிவையும்,பொலிவையும் தருகிறது.
உடலுக்கு சரி, உயிருக்கு என்ன செய்வது?
இதற்கான பதில், முந்தைய பதிவில் நாம் பார்த்த இரண்டு நெறிகள் பற்றி நினைவிருக்கிறதா?. ஆம், பக்தி நெறி, ஞான நெறி என்கிற இரண்டும்தான் நம் உயிரை வளர்த்து பாதுகாக்கப் போகிறது.
பக்தி நெறி என்பது கோவிலுக்குப் போய் பூசைகள் செய்து சடங்குகள், சம்பிரதாயங்களின் பின்னால் ஓடுவது என்றே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சமுக வாழ்வியலின் கவனச் சிதறல்களில் சிக்கி இருக்கும் நம்மை ஒரு ஒழுங்கமைவுக்குள் கொண்டு வருவதே பக்தி நெறியின் நோக்கம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இது முதல் நிலை. இந்த நிலையை உணர்ந்து கொண்டால் அடுத்து யோக நிலை எளிதாய் கைகூடும்.
எப்படி?
நாளை தொடர்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



20 comments:
மக்களுக்கு தேவையான, சிறப்பானதொரு தொடரை ஆரம்பித்துள்ளீர்கள்.
விளக்கம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
மிகவும் அவசியமான பதிவு. இது தொடர்பாக செல்வச் சன்னிதி ஆலயத்தில் வயதான ஒரு ஐயா கூறக் கேழ்விப்பட்டிருக்கின்றேன். குண்டலினி சக்தியைப் பயன்படுத்தி பல சாதனைகள் செய்ய முடியும் என அவர் கூறியிருந்தார். நாட்டின் யுத்த சூழ்நிலையினால் அவரை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அக் குறையினை நீங்கள் தீர்த்துள்ளீர்கள். உங்கள் பதிவுகளுக்கு எனது நன்றிகள்.
தோழி,
தாங்கள் கூறிய உயிருக்கும், உடலுக்கும் வித்தியாசம் நன்றாக புரிந்தது. நல்ல உதாரணம்.
நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.
உயிரின் கரு மைய பதிவும் குண்டலினிக்கு தொடர்பு உண்டு என்ற
அருமையான விளக்கம் நன்றி தோழி.
பதிவு தொடரட்டும் . . .
குண்டலினி சித்தர் , திருவக்கரை (சோழர் காலத்து கோயில்) - புதுவையில் இருந்து 40km
http://static.panoramio.com/photos/original/54910090.jpg
it is youtube video about the koil
http://www.youtube.com/watch?v=m5Z9Ia4xItU
பயனுள்ள அருமையான பதிவு............நன்றி அக்கா :)
Today 1500 Fiends joined this website. Happy... Happy ....... Coming days more successful in this website. All The Best of writer.
உங்கள் தலத்தில் இணைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
அருமையான பதிவு...
நன்றி தோழி...
Excellent Work
குண்டலினி பற்றி முழுமையாக உணர்ந்தது போல் என் உள்மனது சொல்லுகிறது. கடந்த பிறவியில் சாதகர் அடைந்த நிலை இந்த பிறவியில் தொடருமா என்பதை தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.
மிக்க நன்றி.
அன்புடன் . . .
மு.கா.ச.ஓம்பிரகாஷ் .
குண்டலினி பற்றி முழுமையாக உணர்ந்தது போல் என் உள்மனது சொல்லுகிறது. கடந்த பிறவியில் சாதகர் அடைந்த நிலை இந்த பிறவியில் தொடருமா என்பதை தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.
மிக்க நன்றி.
அன்புடன் . . .
மு.கா.ச.ஓம்பிரகாஷ் .
குண்டலினி பற்றி முழுமையாக உணர்ந்தது போல் என் உள்மனது சொல்லுகிறது. கடந்த பிறவியில் சாதகர் அடைந்த நிலை இந்த பிறவியில் தொடருமா என்பதை தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.
மிக்க நன்றி.
அன்புடன் . . .
மு.கா.ச.ஓம்பிரகாஷ் .
vanakkam i am ganesh nan kuntalini kathukanumunu asai annal anaku oru guru kitaiyathu nan enaa saivathu
please me
antha thaai seai utharanam enaku puriyavillai.
avaravar unarvukal avarukule sekaramaaki anupavamaki pin aatipadaikkum enbathu en purithal. athai ''samskaaram'' endru ennikondirukiren. neenkal solvathupol oruvarin unarvu matrovaril pathivaakuma? vilakam veandukiren.
Nice
Nice ......
intha pathivukalai thaangal puthagamaga veliida vendum. nandri
ஒவ்வொன்றும் அருமையாக இருந்தது,ஆனால் ஓவ்வொரு தலைப்பும் தொடரும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது,அதாவது முழுமை பெறாமல் இருக்கிறது,ஒவ்வொண்றும் முழுமைபெற்று ஒரு தொடறாக இருந்தால் இதுபற்றி முழுமையாக தெறியாதவர்களுக்கு வசதியாக இருக்கும்,இ்லையென்றால் அரை குறையான கருத்தினையே பெறமுடியும்.
Post a Comment