குண்டலினி?... குண்டலினி?

Author: தோழி / Labels:

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய ஒரு சாமியார், தன்னுடைய தவ வலிமையால் ஒருவரின் உடலில் உள்ள குண்டலினியை எழுப்புவதன் மூலம் அவரை புவியீர்ப்பு விசைக்கு எதிராக அந்தரத்தில் மிதக்க விடப் போவதாக அறிவித்து, பின்னர் அந்த நிகழ்வு ஒரு கேலிக் கூத்தானது நாமறிந்த செய்தி. இப்படித்தான் காலம் காலமாய் குண்டலினி என்கிற இந்த கலை மர்மம் சூழ்ந்த ஒரு கருத்தியலாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.

உண்மையில் குண்டலினி என்பது என்ன?, ஏன் இப்படி ஒரு பெயர் வந்தது?, எதற்காக இந்த குண்டலினி?, இதை பழகுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்?, எல்லோருக்கும் இது சாத்தியமா?, யாரெல்லாம் இதை பழகலாம்?, அந்த சாமியார் சொன்னதைப் போல அந்தரத்தில் மிதக்க முடியுமா?... இப்படி இதன் உண்மைத் தன்மை மற்றும் அதன் பலாபலன்கள் குறித்து நம்மில் பலருக்கும் பல வேறு கேள்விகள் இருக்கின்றன.

எது உண்மை, எது பொய் என்பது புரியாத இன்றைய அவசர உலகில், குண்டலினியை சொல்லித் தருகிறேன் பேர்வழி என வீதிக்கு நான்கைந்து சாமியார்களை இப்போது பார்க்க முடிகிறது. வர்த்தக ரீதியாக தங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டி, இவர்கள் அவிழ்த்து விடும் கட்டுக் கதைகள் குண்டலினியின் உண்மைத் தன்மையை பின் தள்ளி விட்டு, கற்பனையான அற்புதத்தை முன் நிறுத்துவதாகவே அமைகின்றன.

கடந்த ஓராண்டாக நான் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த, இந்த குண்டலினி தொடரை ஆரம்பிக்க இதுவே சரியான தருணம் என கருதுகிறேன்.இனி வரும் நாட்களில் சித்தர்கள் அருளிய குண்டலினியை நான் அறிந்த வகையில், மிகையில்லாமல் இங்கே பகிர்ந்திட உத்தேசித்திருக்கிறேன். எனது பார்வையில் தவறேதும் இருப்பின் அதைப் பொறுத்து, என்னைத் திருத்திட வேண்டுகிறேன்.

குண்டலினி பற்றி பேசுவதற்கு முன்னர் எனக்கு புரிந்த சில ஆதார அடிப்படைகளை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.

உயிரும்,மெய்யும் ஒன்று சேர்ந்த “உயிர்மெய்” நிலைதான் மனிதன். மனிதனுக்கு மட்டுமல்ல இது மற்ற ஜீவராசிகளுக்கும் பொருந்தும். உயிரைப் பிரிந்த மெய் பிணமாகவும், மெய்யைப் பிறிந்த உயிரை ஆவியாகயோ அல்லது பேய் பிசாசாகவோ நாம் புரிந்திருக்கிறோம். ஆக, இந்த இரண்டு மூலங்கள் ஒன்று சேர்ந்துதான் ஒரு இயக்க நிலையினை உருவாக்குகிறது. ஒன்று மற்றதைப் பிரிந்தால் அதனால் பலனில்லை.

நமது முன்னோர்கள் இதைத்தான் இரண்டு தத்துவ நிலையாக சொல்லி வைத்திருக்கின்றனர். சக்தி, சிவம் என்பதெல்லாம் இப்போது உங்களுக்கு நினைவுக்கு வரலாம். பக்தி மார்க்கத்தில் இது பற்றி விரிவான கருத்தாக்கங்கள் இருக்கின்றன. அதை எல்லாம் நாம் இங்கே விவாதிக்கப் போவதில்லை.

சித்தர் பெருமக்கள் இந்த இரண்டு மூலங்களை “பரு உடல்”, “நுண்ணுடல்” என கூறுகின்றனர். இந்த பரு உடல் என்பதுதான் நம்முடைய உடல். இந்த உடலை இயக்கும் உயிர் நுண்ணுடல் ஆகிறது. உடலை வளர்க்கவும், பாதுகாக்கவும் உணவு தேவைப் படுகிறது.

உயிரை வளர்க்க?, உயிரை பாதுகாக்க?

நாளைய பதிவில் தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

18 comments:

அறிவில்லாதவன் said...

சரியான நேரத்தில் சரியான தொடர் . தொடரின் ஆரம்பம் அருமையாக இருக்கிறது. காத்து கொண்டிருக்கிறோம் .

Shiva said...

Good article indeed. Did you practice this?

Statsfact said...

Aarumaiyana Arrambam :)

Balu said...

Please go through this links

http://www.vallalyaar.com/?p=409

http://gnanacharal.net/
Read Siddar nerigalum siddhi muraigalum

Thanks
Balu

Rathnavel said...

நல்ல பதிவு.
தொடருங்கள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

நிகழ்காலத்தில்... said...

குண்டலினி பக்தி சித்தர்கள் சொன்னதை உங்களது தொகுப்பில் காண மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது..

தொடர்ந்து எழுதுங்கள் தோழி..

M.R said...

நல்ல தொடர் ஆரம்பித்து உள்ளீர்கள் சகோதரி
வாழ்த்துக்கள்.

தொடருங்கள் தொடர்கிறேன்

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

குண்டலினி பற்றியத் தகவல் புதுமை . இன்றைய சூழலில் இது சாத்தியமா !? தெளிவுபடுத்தவும்

Lingeswaran said...

உலகில் எந்த பொருளானாலும்....உயிரற்றவையாக இருந்தாலும் உயிர்பெற்றவையாக இருந்தாலும் அவை அனைத்தும் எலெக்ட்ரான் ,புரோட்டான், நியுட்ரான் என்ற அடிப்படை அணுத்துகள்களால் ஆனவை என்பதை தத்துவம், விஞ்ஞானம் இரண்டும் ஒத்துகொள்கிறதே......இந்த அடிப்படையில் குண்டலினி சக்தியை பற்றி யோசித்து பார்க்கலாம்.......சித்தர்கள் தத்துவமும் அறிவியல் பார்வையில் மிளிரட்டுமே.....

ram said...

Edai vidathu thodarattum pathivu

கும்க்கி said...

தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கும் அதே நேரம் இம்மி பிசகினாலும் அர்த்தங்கள் மாறக்கூடிய ஒரு விபரீத நிலை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

guruchandiran said...

nice explaination

hema s said...

very good beginning.Explained in a easy and understandable manner. thank you Thozhi

நாகராஜன் said...

உங்கள் புதிய பதிவு சிறப்புடன் மக்களை சென்றடைய எனது வாழ்த்துக்கள்.

Sasikumar C said...

அருமையான தொடக்கம்...தொடருங்கள்....

Manakkal Ayyampet மணக்கால் அய்யம்பேட்டை said...

உபயோகமான தகவல்

Srinivasan Rajagopalan said...

When I enter a comment out is not coming. Am I to become a member.

Rose said...

Sitharkal will help you to write this.

Post a Comment