விநாயகர் சதுர்த்தி!

Author: தோழி / Labels: , , , , ,

முற்காலத்தில் இந்து மதம் ஆறு தனித் தனி பிரிவுகளாய் இயங்கி வந்தது. ஒவ்வொரு பிரிவுக்கும் என தனித்துவமான ஒரு முழுமுதற் கடவுள் இருந்திருக்கிறார். விநாயகரை வணங்குவோர் கணாபத்யம், சிவனை வணங்குவோர் சைவம், விஷ்ணுவை வணங்குவோர் வைஷ்ணவம், சக்தியை வணங்குவோர் சாக்தம், முருகனை வணங்குவோர் கௌமாரம், சூரியனை வணங்குவோர் சௌரம் என தனித் தனி மதமாகவே இயங்கி வந்தன.

ஆதி சங்கரரே இவற்றை ஒன்றாக இணைத்து இந்து மதம் என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டு வந்ததாக தெரிகிறது. இந்த ஆறு பிரிவுகளில் முதலாவது பிரிவாக அறியப் படும் கணாபத்ய நம்பிக்கையின் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு இன்று அவதார நாள்.

பிரதி தமிழ் வருடம் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி திதி விநாயகரின் அவதார நாளாய் அனுஷ்டிக்கப் படுகிறது.சூட்சுமமான ஓம்காரத்தின் முழுவடிவே ஆனைமுகத்தான் என்பாரும் உண்டு.

சித்தர்களும் தங்களுடைய எந்த ஒரு நூலையும் விநாயகர் காப்புடனே துவங்கியிருப்பதை காண முடிகிறது. இந்த நல்ல நாளில் அப்படியான தகவல்கள் சிலவற்றை உங்களின் பார்வைக்கு தொகுத்து வைக்கிறேன்.

அகதியர் தனது "அகதியர் தீட்சாவிதி" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடன் இவ்வாறு ஆரம்பிக்கிறார்.

"பாதிமதி யணிந்த பரமன் எனக்கிசைந்த
பருதிமதி சுழிமூன்றும் நன்றாய்ச் சொல்வேன்
வேதனைவா ராமல் முதற்தீட்சை மார்க்கம்
விளம்புவேன் மஹா கணபதி காப்பாமே"


- அகத்தியர் -

போகர் தனது "போகர் ஞான சூத்திரம் 100" என்னும் நூலை விநாயகர் வணக்கத்துடனேயே தொடங்குகிறார்.

"பெருமையுள்ள சதநூலைப் படுவதற்கு
கருவூலந் திருமேனி தும்பிக்கையான்
கணபதி செந்தாமரைத்தாள் காப்பதாமே"

- போகர் -

உரோமரிஷியும் தனது "உரோம ரிஷி வைத்தியம் 500" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடனேயே ஆரம்பிக்கின்றார்.

"மூலமு தலாதார முடிவினின்ற
மூர்த்தியெனும் கணேசரது பாதங்காப்பு"


- உரோமரிஷி -

நந்தீசரும் தனது "நந்தீசர் நிகண்டு 300" என்னும் நூலை விநாயகர் வணக்கதுடனேயே ஆரம்பிக்கின்றார்.

"வெள்ளியங் கிரியான் தந்த
வேழமா முகனே யெந்தன்
உள்ளினுக் குள்ளாய் நாளும்
உரிவினுக் குருவாய் நின்று"

- நந்தீசர் -

பத்திரகிரியாரும் விநாயகர் வணக்கத்தின் முக்கியத்துவத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"ஐஞ்சு கரத்தானின் அடியிணையைப் போற்றிசெய்து
நெஞ்சிற் பொருந்தி நிலைபெறுவ தெக்காலம்?"


- பத்ரகிரியார் -

இவற்றை எல்லாம் விட, பகுத்தறிவுக் கருத்துக்களை முகத்தில் அறைந்தாற் போல பாடியவரும், உருவ வழிபாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தவருமான சிவவாக்கியாரும் கூட தனது "சிவவாக்கியம்" என்னும் நூலை ஆரம்பிக்கும் போது விநாயகர் வணக்கத்தை முன்வைத்தே பாடியிருப்பதும் இங்கு குறிப்பிடதக்கது..

"கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே"


- சிவவாக்கியார் -

இது போன்று விநாயக வணக்கதின் முக்கியதுவத்தும் சித்தர் இலக்கியங்களில் விரவிக் கிடக்கிறது. இந்த நல்ல நாளில் இப்படி விநாயகப் பெருமானை நினைவு கூர்வதன் மூலம் அவரது பாதத் திருவடிகளைப் பணிந்து வணங்கிடுவோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

My Mobile Studio said...

விநாயகர் சதுர்த்தி சிறப்பு அருமை ......வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

என் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் அனைவருக்கும்...

டி.கே.தீரன்சாமி. said...

சித்தர்கள் ராஜ்ஜியம் நான் தேடிய சரியான் வலைப்பதிவுவாழ்த்துக்கள் இதோ ஒரு ஓட்டு!வாங்க எங்க பக்கம்!
தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு-theeranchinnamalai.blogspot.com-.

tamilvirumbi said...

Dear thozi,
Thanks.I wish to quote the following information found in Tamil newspaper available in Singapore.
நமது பிள்ளையார் வழிப்பாடு இந்தியாவில் மட்டுமல்ல இன்று வரை இந்தோனேசியா,சீனா,ஜப்பான் போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது இஸ்லாமிய மதம் உருவாவதற்கு முன்பு ஈரான்,ஈராக் போன்ற அரபு நாடுகளிலும் ரஷ்யாவிலும் கூட புகழ் பெற்று இருந்திருக்கிறது கால சூழலால் இன்று அங்கே விநாயகர் வழிப்பாடு இல்லை என்றாலும் புதைபொருள் ஆய்வில் பல பிள்ளையார் சிலைகள் கிடைகின்றன

teenmoon5 said...

இந்து மதம் என்ற ஒரு மதமே இருந்ததில்லை. இந்து என்பது அனைவரையும் கட்டுப்படுத்த சில பேரால் உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையே.

அம்பலத்தார் said...

இன்றுவரை இந்துமதம் சைவம் வைஸ்ணவம் என இரு பிரிவுகளைகொண்டது என எண்ணியிருந்தேன். இன்றுதான் உங்கள் பதிவைப் படித்ததில் புரிகிறது ஆறு பிரிவுகள் காணப்பட்டவிடயம். அரிய பல தகவல்களத் தொடர்ந்து எழுதிவரும் உங்களிற்கு வாழ்த்துக்கள்

Lingeswaran said...

Ya...Its right. Vinayakar is one of the very excellent symbolic representations of god in Indian philosophy.

THIRUMAL said...

uyaramaha valara ethum marunthu erunthal sollungal

சிவனேசு said...

மங்களம் பொங்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள் தோழி...!

Post a Comment