அமாவாசையும், அகத்தியரின் கேள்வியும்!!

Author: தோழி / Labels:

இந்து மரபியலில் அமாவாசை முக்கியமான ஒரு தினமாக கருதப் படுகிறது. அம்மாவாசை தினங்களில் முன்னோருக்கு எள்ளும், தண்ணீரும் தர்ப்பணமாய் கொடுக்கப் படுகிறது. அபிராமி பட்டரின் கதையும் சிலருக்கு நினைவுக்கு வரலாம். பஞ்சாங்கத்தில் அமாவாசை முக்கியமான திதிகளில் ஒன்றாகவும் கருதப் படுகிறது. இதைப் பற்றி முந்தைய பதிவில் விரிவாக பகிர்ந்திருக்கிறேன்.

நவீன ஆறிவியலின் அமாவாசை விளக்கம் நீங்கள் அறிந்ததே, மேலும் இந்த நாட்களில் உருவாகும் கூடுதல் ஈர்ப்புவிசையின் காரணமாய் கடலில் அலைகள் அதிகரிப்பதையும், இதே காரணத்தினால் மனிதனின் உடலிலும் கூட மாற்றங்கள் ஏற்படும் என்கிற தகவல்கள் நாம் அறிந்தவையே.. ஆனால் நமது இன்றைய பதிவு இதைப் பற்றியதல்ல!

அமாவாசை பற்றி அகத்தியர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பற்றியே பார்க்க இருக்கிறோம்.

பிறக்கமது வன்றியே யெழுதோற்றத்துள்ளும்
பேராக நாலுவகை யோனிக்குள்ளும்
பிறக்குமது பொறிஐந்தால் கோடாகோடி
பிணமாகிப் பிறக்கமட்டும் மாய்கையாலே
திறக்குமிது மேல்வாசல் சங்குமூச்சு
செல்லயிலே விந்துள்ளாய் ஆத்துமாச்செல்லும்
மறக்குமிது வரைகளிலே செனிப்பதில்லை
மணஞ்சென்ற யிடங்கயிலே பிறப்புண்டாமே.

உண்டான மாதாவும் பிதாவுமாண்டால்
உத்தமனே தற்பனங்கள் செய்வோமென்பார்
பற்றான கிரியையொடு சரியைக்கெல்லாம்
பரிசுகெட்ட நினைவாலே நீரிறைத்துத்தானும்
கொண்டாடித் தற்பனங்கள் செய்வோமென்பார்
குரும்பாரப்பா யெள்ளோடு தண்ணீர்வார்ப்பார்
தென்டனிடு வார்கோயில் தோறுஞ் சென்று
தெளிவற்றே தெளியார்கள் அலைவார்தானே.

அலைவார்கள் அவரவர்கள் தேசவாழ்க்கை
அமாவாசை விரதமென்பார் திதிகள்செய்வார்
உலைவார்கள் வேதியற்கு அன்னமீய்ந்து
உறுதியாய்ப் பிண்டமிட்டு பிதிர்க்குப் பூஜை
மலையாமற் கொடுப்பார்கள் யெள்ளுந்தண்ணீர்
வார்ப்பார்கள் வேதமுறை வளப்பமாக
நிலையான விந்துகெட்டுப் பிணமாய்ப்போனால்
நீயார்க்குத் தற்பனங்கள் செய்யும்வாரே.

வாரான பிதுர்கன்மம் யோகிதீர்ப்பான்
மற்றவர்க்கு வாராது லுத்தமாண்பர்
நீறான பிணத்துக்குப் பிண்டமேது
நீதிகெட்ட யெள்ளுநீர் வார்ப்பதேது
தூறான வேதநூல் பார்த்துவாசி
சுழன்றலைவார் உலகமெல்லாம் சுத்தமாடு
தேறாத பசுக்களப்பா மாய்கைக்குள்ளே
சிக்கினாற் பிறப்பிறப்பிற் சிக்கினாரே.


அமாவாசை அன்று இறந்து போன தம் தாய், தந்தையருக்கு திதி செய்வதாகக் கூறி விரதம் இருந்து பிராமணர்களுக்கு விருந்து படைத்து, பிண்டம் போட்டு பிதுர் பூசை செய்து எள்ளும் தண்ணீரும் வார்த்து கோவில் கோவிலாய் சுற்றுகிறவர்களை தெளிவற்றவர்கள் என்கிறார்.

தன் முன்னோரின் கர்மங்களை தீர்க்கும் வேதமுறை எனச் சொல்லி இந்த திதி சடங்குகளைச் செய்வோரை நோக்கி பின் வரும் கேள்விகளையும் வைக்கிறார் அகத்தியர்.

பிணமாக போய் எரித்து சாம்பலும் ஆகிவிட்ட பின்னர் அதற்கு ஏன் பிண்டம்?

உடலே அழிந்து சாம்பலாகிப் போன பின்னர் எதை நினைத்து தர்பணம் செய்கிறாய்?

நீ கொட்டும் எள்ளும் தண்ணீரும் எதற்கு போய்ச் சேரும்?

இன்றைய பகுத்தறிவாளர்கள் மற்றும் கடவுளை மறுப்போர் கேட்கும் கேள்விகளை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே முகத்தில் அறைகிற மாதிரி அகத்தியர் கேட்கிறார்.

அப்படியானால் இந்த பிதுர் கர்மங்களை எப்படி தீர்ப்பது?

அமாவாசை அன்று என்னதான் செய்ய வேண்டும்?

இதற்கான அகத்தியரின் தெளிவுகள் நாளைய பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

arul said...

waiting for the next post about agathiars explanation about cleaning pithru karma

naveenkumar said...

Anbana Thozhiku,

oru vendukol,Ovoru pakuthiyaga vilakkam tharuvathrku pathilaga, oru puthakathin aarambam muthal iruthi varai varisayaga vilakam tharalame... Nantri

Entrum Anbudan,
Naveen

குருவருள் said...

தோழி,
அவர்களுக்கு வணக்கம்,
மிகவும் அருமையான பதிவு,
இது பற்றி நிறைய சந்தேகங்கள் இருக்கிறது.
உங்களுடைய நாளைய பதிவில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

குருவருள் காக்க,
சரவணன்,
நன்றி,

tamilvirumbi said...

Dear Thozi,
You have brought out this blog in the right time.The thoughts given by Siththar Agathiar
are rationalizing ones.How one can expiate his pithur thosham?.I am looking forward to get you.

அம்பலத்தார் said...

நமது வாழ்வின் வேர்களத் தேடும் பதிவுகளிற்கு நன்றிகள்

Anonymous said...

அடுத்த பதிவில் அகத்தியரின் விளக்கங்களை ஆவலுடன் எதிர் பார்கிறேன்


ப்ரவீன் குமார்

Unknown said...

Arumai thozhi. Thodarungal.

Unknown said...

Arumai. Thozhi Thodarungal.

Kumaran said...

மிகச்சிறப்பு

Unknown said...

தோழி இதை ஒரு அருமையான கருத்து பறிமாற்றம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு இந்திய ருபாய் ஐநூறு அனுப்புகிறேன் என்று வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு அது கிடைக்கும்போது இலங்கை சதம் ஆயிரம் ஆக கிடைக்கும். நீங்கள் இல்லாத போது உங்கள் வாரிசு வாங்கி கொள்ளும்.
வாழ்வியலில் வைதீகம் அவைதீகம் என இரண்டு வகை உண்டு. வைதீகம் சாஸ்திரம் சொல்லும் படி நடப்பது. அதன் படி நடப்பவர்க்கு அவைதீகம் என்ற, சாஸ்திரம் சடங்கு தாண்டி இறை நிலைக்கு போக வழி காட்டும்.
வைதீக முறை படி வாழ்பவர்கள் செய்யும் சடங்குகள், அது நீத்தார் கடன் ஆக இருந்தாலும், அவார்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு பொய் சேரும் அண்ட் வேதம் சொல்கிறது.

வேதம் சாதாரண மனிதர்கள் குற்ற உணர்ச்சியுடன் வாழாமல் இருக்க இத்தகைய சடங்குகளை ஏற்பாடு செய்து இருக்கிறது. வாழும்போது கவனிக்காமல் விட்டு விட்டோமே என்ற குற்ற உணர்வு பாதிக்காமல் நிம்மதியாக வாழ வழி செய்கிறது. இது தன்னை உணர்தல் அல்லது இறை உணர்வு பெற தேவை இல்லாமல் இருக்கலாம். அனால் மனிதன் வாழ்நாள் நிம்மதியாக ஓடுமே.

சித்தர்கள் எடுத்த உடனேய நாம் நல்ல நிலைக்கு உயர எழுதி வைத்தார்கள். எல்லோரும் புத்திசாலி இல்லையே. அவரகளுக்கு இது நிம்மதி தரும் என்றல் அனுமதிப்பதில் தவறு என்ன.

அவைதீகம் , குரு என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பின் பற்றி நடந்து சீக்கிரம் ஆன்மீக முன்னேற்றம் தரும் வழி.

இரண்டும் கலந்து மனித வாழ்க்கை இருப்பது தவறில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

Unknown said...

@Srinivasan Rajagopalan
Miga arumaiyana pagirvu Mr.Srinivasan Rajagopalan

Post a Comment