அகத்தியர் ஆரூடம் - நிறைவுப் பகுதியும்,மின்னூலும்.

Author: தோழி / Labels: , ,

அகத்தியர் ஆரூடத்தில் கடைசி ஆறு எண்களுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.

௫௯.(59) வந்தால்..

அஞ்சாதே கேளமப்பா ஆரூடத்தை
அனுதினமும் தோத்தரிப்பாய் நவக்கிரகத்தை
சஞ்சலங்கள் விலகுமப்பா தனமேசேரும்
தட்டாது உன்வார்த்தை மேன்மையாகும்
கொஞ்சநாள் இதுவரையில் கஷ்டப்பட்டாய்
கோபத்தால் பலபொருளும் நஷ்டப்பட்டாய்
வஞ்சகக் காரர்களால் வருத்தமுற்றாய்
வழுத்தினேன் இவ்வாரம் கழியத்தானே.


ஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்பது வந்திருப்பதால், கடந்த சில நாட்களாக துன்பப்பட்டாய், நட்டமும் அடைந்தாய். கோபத்தால் பல பொருட்களை இழந்தாய். ஏமாற்றுக் காரர்களால் ஏமாற்றப்பட்டு கவலை அடைந்தாய். இனி பயப்பட தேவையில்லை. தினமும் நவக்கிரகங்களை வணங்கிவர உனக்கு நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். இந்த வாரம் கழிந்த பிறகு உனக்கு நன்மையாக அமையும் என்கிறார் அகத்தியர்.

௬o. (60) வந்தால்..

வருத்தமே யுந்தனுக்கு அதிகமாகும்
வையகத்தில் நினைப்பதெல்லாம் அபலமாகும்
பொருத்தமுடன் செய்தொழிலில் நஷ்டமாகும்
புவிதனிலே மனைவிமக்கள் பகையதாகும்
கன்னியால் மனைதனிலே கலகமாகும்
கச்சிதமாய் வைத்தபொருள் களவுபோகும்
தரித்திரமே மேலோங்கும் சினேகம் நீங்கும்
தணியுமப்பா நாளுக்குநாள் தான்பாரே.


ஆரூடத்தில் அறுபது வந்திருப்பதால், உனக்கு மனக்கவலையே அதிகமாகும். செய்யும் தொழிலில் நட்டமே கிட்டும். மனைவி மக்களும் பகையாவார்கள். ஓரு பெண்ணினால் குடும்பத்தில் கலகம் ஏற்படும். வீட்டில் களவு போகும். நல்லவர்கள் நட்பு இல்லாது போகும். இந்த பிரச்சினைகளெல்லாம் படிப்படியாக குறைந்து பின் முற்றாக நீங்கும் என்கிறார் அகத்தியர்.

௬௧. (61) வந்தால்..

யோகதிசை உந்தனக்கு வந்ததாலே
ஒன்பதிலே குருபகவான் பார்வையாச்சு
தோகையரால் லாபமண்டு துயரம் பொச்சு
துரைத்தனத்தி லுந்தனக்கு தொழிலுண்டாச்சு
பாகமாய் வந்தபிணி பதங்கலாச்சு
பலவூர்கள் செய்தியதால் பாக்கியமாச்ச
ஆகமத்தின் மொழியிதுதான் உண்மையாச்சு
அறிவித்தேன் அருள்வாக்கை அறிகுவாயே.


ஆரூடத்தில் அறுபத்து ஒன்று வந்திருப்பது, ஒன்பதாமிடத்தில் குருபார்வையும் யோக திசையும் வந்திருப்பதை குறிக்கிறது. பெண்களால் லாபம் உண்டு. கவலைகள் எல்லாம் நீங்கும். மிகுந்த செல்வாக்கான இடத்தில் தொழில் வாய்க்கும். உனக்கு வந்த நோய்கள் எல்லாம் நீங்கும். பல இடங்களிலும் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். இந்த ஆரூடம் உண்மையாகும். இது அருளால் சொல்லும் வாக்கு என்கிறார் அகத்தியர்.

௬௨. (62) வந்தால்..

பனிரெண்டில் சூரியனும் உதித்ததாலே
பலபேர்களா லுனக்கு உதவியுண்டு
பணியணிகள் சேருமப்பா பலத்தலாபம்
பாவையர்க்கு கோபமதில் பாலனாகும்
துணிந்து நீ எத்தொழில் செய்தபோதும்
தொல்லையின்றி விர்த்திகர மாகுமப்பா
தணியுமப்பா உந்தனுடகஷ்ட மல்லாம்
தட்டாமல் ஒன்பதுநாள் கழிந்திடவே.


ஆரூடத்தில் அறுபத்து இரண்டு வந்திருப்பது, பன்னிரெண்டில் சூரியன் இருப்பதை குறிக்கும். பலர் உனக்கு உதவுவார்கள். நல்ல தொழிலும், ஆடை ஆபரணங்களும் சேரும். பலவித லாபம் உண்டாகும். உன் மனைவிக்கு ஆண்குழந்தை தரிக்கும். எந்த தொழிலை செய்தாலும் எந்த தடையும் இல்லாமல் விருத்தியாகும். இன்னும் ஒன்பது நாளில் உனக்கு இருக்கும் துன்பம் எல்லாம் விலகிவிடும் என்கிறார் அகதியர்.

௬௩. (63) வந்தால்..

பொல்லலாத சனி ராகு பகையினாலே
போகுமொரு காரியங்கள் தடங்கலாகும்
நில்லாது பலவிதமாய் அலையச்செய்யும்
நிஷ்டூரம் சினேகதிரால் கவலையாகும்
நல்லதைச் சொன்னாலம் பொல்லாப்பாகும்
நஷ்டமப்பா தொழில் முதறைநான் விந்தையுண்டு
சொல்லவே நாற்பத்தி மூன்று நாளில்
சுகமுண்டு பருதிகண்ட பனிபோலே.


ஆரூடத்தில் அறுபத்து மூன்று வந்திருப்பது, சனியும் ராகுவும் பகை பெற்றிருப்பதைக் குறிக்கும். எந்த செயலை செய்தாலும் அது தடங்கலாகும். அலைச்சல் அதிகமாகும். நண்பர்களால் கவலையடைய நேரும். நல்லதை சொன்னாலும் அது தீமையாகவே முடியும். தொழிலும் நட்டமடையும். இவை எல்லாம் நாற்பத்தி மூன்று நாளில் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும் என்கிறார் அகத்தியர்.

௬௪. (64) வந்தால்..

அகஸ்தியானர் கூறியதோர் வாக்கியத்தை
யாருமே நம்பிமோசம் போனதில்லை
சுகத்தைத்தரும் குடும்பத்தின் கஷ்டந்தீரும்
சுபக்கிரக பார்வையினால் லாபமுண்டாம்
மகப்பெறும் சுகவாழ்வும் பகையம் நீங்கும்
மண்ணதனை எடுத்தாலும் பொன்னதாகும்
ஜெகந்தன்னிலே எதிரியின்றி செழித்து வாழ்வாய்.
தியாகராஜன் குகனருளால் செப்பினேனே.


ஆரூடத்தில் அறுபத்தி நான்கு வந்திருப்பது, சுபக் கிரகங்களின் பார்வை கிடைத்திருப்பதை குறிக்கும். அதனால் குடும்பக் கவலை நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுகமான வாழ்வு அமையும். பகை கொண்டவர்கள் அதை மறந்து உன்னிடம் நட்பு கொள்வார்கள். நீ மண்ணை தொட்டாலும் பொன்னாகும் காலம் இது. உனக்கு எதிரி என்று யாருமே இனி இருக்க மாட்டார்கள். இந்த ஆரூடத்தை நம்பிய எவரும் மோசம் போனதில்லை. ஏன் என்றால் இந்த ஆருடத்தை சிவனின் அருளாலும், முருகனின் அருளாலும் பாடியிருக்கிறேன் என்கிறார் அகத்தியர்.

அகத்தியர் அருளிய அகத்தியர் ஆரூடம் இத்துடன் முற்றிற்று.

நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த பத்து நாட்களாய் தொடராக வந்த இந்த ஆரூடத் தகவல்களை ஒரே மின்னூலாக உருவாக்கி பகிர்ந்திருக்கிறேன்.தேவையுள்ளோர் இந்த இணைப்பில் இருந்து அந்த நூலை தரவிரக்கிக் கொள்ளலாம்.தேவையுள்ள் பிற நண்பர்களுக்கு இந்த இணைப்பினைக் கொடுத்து உதவிடுமாறும் வேண்டுகிறேன்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

15 comments:

Netrikkan said...

THANK YOU VERY MUCH FOR GIVING e-book.

REGARDS,

azhageri

M.R said...

உபயோகமான பதிவு தந்தமைக்கு நன்றி சகோதரி

M.R said...

மின்நூலாக தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி .

கோகுல் said...

சிரத்தையெடுத்து தொகுத்துள்ளீர்கள்!
மின்னூல் பகிர்வுக்கு நன்றி!

tamilvirumbi said...

Dear Thozi,

Thanks a lot for your unbounded magnanimity.

Shiva said...

மிக்க நன்றி .

B.Mahadevan said...

I am 77.for needs aarudam.D/B 24-03-1934 22.00Hr

Anonymous said...

நன்றி. உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.சித்தர்கள் முனீஸ்வர வழிபாடு பற்றி ஏதேனும் சொல்லியிருந்தால் அதைப்பற்றியும் தாங்கள் பகிர்ந்து கொள்ளலாமே.தேடுங்கள் கிடைக்கும்.

வாழ்க வளமுடன்,
அகமுதலி.

Anonymous said...

நன்று தோழி .


பிரவீன் குமார்

Unknown said...

சிரமம் பாராமல் மின்னூல் தந்தமைக்கு நன்றிகள்!

என்றும் அன்புடன்
ச.ரஜ்ரேந்திரன்
பெங்களூர்.

it said...

அகத்தியர் ஆருடத்தில் எல்லாம் நன்மையாகவே முடிகிறது.இந்த ஆருடம் பார்க்கும் எவருக்கும் தீமையே ஏற்படாத?

hema said...

Thanks for every thing

hema said...

Thanks for your wonderfull work

suresh said...

i am happy to see this page

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

Post a comment