ஆரூடம்!... அகத்தியரின் ஆரூடம்!

Author: தோழி / Labels: ,

ஆரூடம் என்பது என்ன?

எதிர்வு கூறல் கலையின் ஒரு அங்கமே ஆரூடம். இதனைப் பற்றி ஏற்கனவே அகத்தியர் அருளிய “பாய்ச்சிகை” ஆரூடம் என்ற தொடரில் விரிவாக பார்த்திருக்கிறோம். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று ஆரூடம் பற்றி வாசித்த பின்னர் இந்த பதிவினை தொடர வேண்டுகிறேன்.

பாய்ச்சிகை ஆரூடத்தில் பாய்ச்சிகையை உருட்டி அதில் வரும் எண்களை வைத்து பலன் சொன்ன அகத்தியர், இந்த முறையிலும் எண்களை வைத்தே ஆரூடம் சொல்லியிருக்கிறார். முறைதான் கொஞ்சம் தனித்துவமானது. இன்று பல இடங்களில் அகத்தியர் ஆரூடம் என்கிற பெயர் பலகைகளை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அவர்கள் இந்த முறைகளைத்தான் பயன் படுத்தி ஆரூடம் கூறுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

இந்த ஆரூட முறைக்கு ஒரு யந்திரம் அவசியமாகிறது. அறுபத்திநாலு கட்டங்களை கொண்ட இந்த யந்திரம் இல்லாமல் இதனை செயல் படுத்த முடியாது. இந்த யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில்கீறிக் கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த யந்திரத்தை பயன் படுத்தவும் சில நிபந்தனைகளும் உண்டு. அதில் மிக முக்கியமானது சூரிய ஒளி இல்லாத சமயத்தில் இதனை பயன்படுத்தி ஆரூடம் பார்க்கக் கூடாது என்பதாகும்.

இந்த யந்திரத்தின் அமைப்பு மிகவும் எளிமையானதாகும். எட்டுக்கு எட்டு அளவிலான சதுரத்தில் 64 கட்டங்களாக பிரிக்கப் பட்ட எளிய அமைப்புடையது. இந்த கட்டங்கள் முழுவதும் எண்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். பெரிதான சிக்கலோ, சிரமமோ இல்லாத எளிய ஆரூட முறை இது.
இந்த ஆரூட யந்திரத்தை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தனக்கும் பார்த்துக் கொள்ளலாம், மற்றவர்களுக்கும் பலன் சொல்லலாம்.

இந்த யந்திரத்தை வைத்து எப்படி ஆரூடம் பார்ப்பது?

ஆரூட யந்திரத்தை தங்களின் இஷ்ட தெய்வத்தின் முன்னர் வைத்து வணங்கிய பின்னர், குருவருளை மனதில் தியானித்து தனது தேவைகளை மனதில் நினைத்து யந்திரத்தில் உள்ள எண்களில் ஏதேனும் ஒன்றினை தொட வேண்டும். அந்த எண்ணைக் குறித்துக் கொண்டு பின்னர் அந்த குறிப்பிட்ட எண்ணுக்கு அகத்தியர் அருளிய பாடலைப் படித்து பலனை அறிய வேண்டும். எத்தனை எளிது!

இதே முறையில் மற்றவர்களுக்கும் செய்யலாம். கண்களை மூடி இஷ்ட தெய்வத்தை வணங்கி, பிரச்சினைகளை மனதில் நினைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு எண்ணை தொடச்சொல்லி பலன் சொல்லலாம். சிலர் மணதில் ஒரு எண்ணை நினைத்து அதைக் கூறும்படிக் கூறி அதற்கு பலன் சொல்வதுமுண்டு.

எல்லாம் சரிதான்!, இந்த ஆரூட யந்திரத்தை எப்படி தயார் செய்வது?

விவரங்கள் நாளைய பதிவில்....

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

arul said...

mailerindia.com provides this

Ram said...

நாளைய பதிவ படிச்சுட்டு எதுவா இருந்தாலும் முடிவு பண்ணுறேன்....

எந்திரத்த ரெடி பண்ணிட்டா நானும் ஒரு போர்டு மாட்டிப்பேன்...

tamilvirumbi said...

Dear Thozi,
Thanks a lot.Normally,this theory will look
abstract for the new ones.You are giving it in a simple and understandable way.

rajsteadfast said...

Hello Thozhi,
Nanru. Waiting for aaruda yenthiram...

maniajith007 said...

super i am also waiting for that yantra making

Karthikeyan Rajendran said...

அருமையான பதிவு , அடுத்த பகிர்வை எதிர் நோக்குகிறேன்.

இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

govind said...

is this thotukuri sastra

dhana said...

good

kaleappan said...

அன்பான தோலியே, வணக்கம்
இரசமணி கட்டி முடிந்தவுடன் எப்படி அதை செயல் படும் படி வைப்பது?
எந்த மந்திரம் சொல்லி எந்த இரசமணிக்கு உருவேற்றூவது?
அந்த மந்திரம் எவ்வளவு முறை சொல்வது?

மலெசியாவில் இருக்கும் எனக்கு இது ஒரு புது அனுபவம். சித்தர்கள் பற்றி தெரிய வேண்டும் என்ற ஆவல் சிறிய வயதில் தோன்றியது. சித்தர்களை பற்றி பல விஷ்சியங்களை படிதிருகிரென். ஆனால் உங்கள் வலைப்பூவில் தெரிந்து படித்தவை பல. இந்த விஷ்சியங்களை தெரிய வலிவகுத உங்கலுக்கு எனது மனமார்ந்த நன்றி.
நன்றி,

தோழி

kimu said...

THANKS

RAVINDRAN said...

நன்றி

Post a comment