வசியக் காப்பு!

Author: தோழி / Labels: ,

வசியம் பற்றி ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் இம்மாதிரி வசியம் மற்றும் வசிய தாயத்துக்கள், வசிய காப்புகளுக்கென எத்தனை பணம் வேண்டுமானாலும் செலவழிக்க நம்மில் பலர் தயாராக இருக்கின்றனர். இம்மாதிரியான வசிய பொருட்கள் பற்றி பல தகவல்கள் சித்தர்களின் நூல்களிலும், மலையாள மாந்திரிக நூல்களிலும் காணக் கிடைக்கின்றன. அப்படியான ஒரு வசிய காப்பு பற்றி அகத்தியரும் கூறியிருக்கிறார்.

இந்த தகவல் அகத்தியரின் “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஆமென்ற வசியம் ஒன்று சொல்லக்கேளு
ஆதிமுதலான கொடியறுகு வாங்கி
ஓமென்ற கண்டித்து மதுவில் போட்டு
உரிமையுடன் மண்டலம் சென்றெடுத்துப்பாரு
நாமென்ற நீரதுவும் நன்றாய்வற்றி
நடுவான கொடியதுவும் பதமாய் நிற்கும்
தாமென்றதன் பதமாய் வந்த மூலம்
தருவான மூலமதின் தன்மைகேளே.

தன்மையுடைய வெள்ளியுடன் செம்பு சேர்த்து
தருவான தங்கமது மூன்றும் ஒன்றாய்
உண்மையுடன் தானுருக்கி தகடுதட்டி
உறுதியுள்ள மூலமதை வைத்துருட்டி
செம்மைபெற ரவி வளையம் போலே செய்து
தெரியாமல் பொருந்தினவாய் சேர்த்துக்கொண்டு
நன்மைபெற சற்குருவை தியானம் செய்து
நலமாக ஞாயிறுமுன் வைத்துப் போற்றே.

வைத்ததொரு ரவி வளையம் வளவு தன்னை
வலது கையில்தான் பூட்டி மனதாய் நின்றால்
மைதொடுத்த விழியாளும் மன்னர்தானும்
மகத்தான மிருகம் முதல் வசியமாகும்
மெய்த்ததொரு இம்முறைதான் அதீத வித்தை
வேதாந்த வேதியர்தான் சொன்ன மார்க்கம்
உத்ததொரு வித்தைதனை உலகத்தோர்க்கு
ரையாதே உரைத்ததினால் உறுதிபோமே.

கொடி அறுகம் புல்லை வேருடன் பிடிங்கிக் கொண்டு வந்து அதை பிரணவ மந்திரமான ஓம் என்பதுபோல் வளைத்து தேனில் போட்டு ஒரு மண்டல காலம் வைக்கவேண்டுமாம். பின் அதை எடுத்தப் பார்க்க, நீரெல்லாம் வற்றிப் பதமாக இருக்குமாம்.

வெள்ளி, செம்பு, தங்கம் ஆகிய மூன்று உலோகங்களையும் சம எடையாக எடுத்து ஒனறாகச் சேர்த்து உருக்கி தகடாகத் தட்டிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த தகட்டில் தேனில் உறவைத்து எடுக்கப் பட்ட பதமான அந்த கொடியறுகை வைத்து சுருட்டவேண்டுமாம். பின்னர் சூரியனைப் போன்று வளையமாகச் செய்து கொண்டு இரு முனையையும் இணைத்து ஒட்டிக் கொள்ள வேண்டுமாம். அதன் பின்னர் இந்த வளையத்தை சூரிய ஒளி படும்படியான இடத்தில் வைத்து வணங்கிக் கொள்ள வேண்டுமாம்.

இப்போது இந்த வளையத்தினை வலது கையில் அணிந்து கொள்ளவேண்டுமாம். அப்படி வளையத்தை அணிந்து கொண்டு சென்றால், பெண்கள் துவங்கி மன்னாதி மன்னர்கள், விலங்குகள் என அனைவரையும் வசியமாக்குமாம்.

இந்த வித்தையை வேதாந்த வேதியரான சிவனார் தமக்குக் கூறியது என்றும் இத்தனை சிறப்பான இந்த வித்தையை உலக மக்களுக்கு சொல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார். அப்படிச் சொன்னால் இது பொய்த்துப் பலிக்காது போய்விடும் என்கிறார் அகத்தியர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

24 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

வசியத்தை பற்றி நல்லதொரு தகவல்......
தோழி!

tamilvirumbi said...

Dear Thozi,
Thanks a lot.Ultimately,if its secret is exposed to public,it will not become succeeded.This will pave a good work.otherwise, cheating will be a prevalent one.

BABYS said...

tholi engaluku innim pala thagaval gal thevai ennidal pala kalvigal ullana neegan enthu email ku oru mail anupugan nan kakuran my email in vitiinfotech@gmail.com

Rathnavel said...

நல்ல பதிவு.

த. ஜார்ஜ் said...

அப்ப இனி அது பலிக்காதா..?

தோழி said...

@த. ஜார்ஜ்

:)

ஜீவா (Jeeva Venkataraman) said...

//உறையாதே...//
என்பதில் வல்லின 'ற' அல்லவா உள்ளது. அப்படியானால் உரைக்காதே என்ற பொருள்வர வாய்ப்பில்லையே...?

தம்பி கூர்மதியன் said...

இது எனக்கு யூஸ் ஆகாது.. இனி யாருக்கும் யூஸ் ஆகாது...

இப்போ அகத்தியருக்கும் யூஸ் ஆகாது... குட்..

Jeyamaran $Nila Rasigan$ said...

நல்ல பதிவு தோழி.............
ரூம் போட்டு யோசிப்பின்களோ இப்படி எழுதுறதுக்கு.................
நிலாரசிகன்

தோழி said...

@ஜீவா (Jeeva Venkataraman)

தட்டச்சும் போது ஏற்பட்டதவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

Rajakumaran said...

thanks , nice..

Ashvinji said...

வணக்கம். விருப்பு வெறுப்பற்ற ஞானியருக்கு நல்லதோ செயலை உலக நன்மைக்காக வேண்டி செய்தால் வசியம் போன்றவை அவர்களுக்கு கைகூடும். உலகியல் மாந்தர் (லவுகீக காரணங்களுக்காக, தீய நோக்கங்களுக்காக, சுயநல காரியங்களுக்காக) இந்த வழி முறைகளைப் பயன்படுத்த நினைத்தால் அவ்வமயம் வசியம் கைகூடாது" என்று பொருள் கொள்ளலாமா?

இன்பம் துன்பம் said...

நல்லதோர் அறிய தகவலை பதிந்துள்ள எனது அருமை தோழிக்கு பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்

ஜீவன்சிவம் said...

சொல்ல தேவையில்லாத விஷயங்களை சொல்லாமல் விடுவதே சிறப்பு.
சொல்ல எத்தனையோ விஷயங்கள் இருக்க, வசிய காப்பு, வசிய தாயத்து - இதெல்லாம் சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்று கடை விரிப்பது சித்தர்களே கூட ஏற்றுகொள்ள மாட்டார்கள். உங்கள் பணி தொடரட்டும் ஆரோகியமான, அவசியமான கருத்துகளோடு, பாடல்களோடு.

Inquiring Mind said...

/** இந்த வித்தையை வேதாந்த வேதியரான சிவனார் தமக்குக் கூறியது என்றும் இத்தனை சிறப்பான இந்த வித்தையை உலக மக்களுக்கு சொல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார். அப்படிச் சொன்னால் இது பொய்த்துப் பலிக்காது போய்விடும் என்கிறார் அகத்தியர்.
**/

சொல்கிறவர்களுக்கு பலிக்காமல் போய்விடுமா, இல்லை அணிந்தவர்களுக்கு பலிக்காமல் போய்விடுமா?

இப்பொழுது நீங்கள் உலகத்துக்கு சொல்லிவிட்டீர்களே.. இனி யாருக்குமே பலிக்காதா?

Geetha6 said...

good post

sruti pradha said...

இது பொய்த்துப் பலிக்காது போய்விடும் ...!

D.MEENAKSHI SUNDARAM said...

pls reply my mail

D.MEENAKSHI SUNDARAM said...

pls rep my mail

ANANTH KRISH said...

@''இறைவனடி யுவராஜா''

ANANTH KRISH said...

mooga parukkai eppai neekuvathu enpathai pattri sollungal

ANANTH KRISH said...

muoga parukkalai eppadi neekkuvathu enpathi patti vivaramaga sollungal

siva said...

saiva sittanandam sollungal

Elangovan Hariesh said...

kodiyarugu enpathu thavarathai kuripathu alla athu jeeva vagupil oru porul.
elango 9367650514, 9655923397.

Post a Comment