எப்படி தூங்குவது?

Author: தோழி / Labels: , ,

மனித உடலின் அடிப்படை ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியமான ஒன்று. ஒரு நாளின் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நாம் தூங்குவதில்தான் செலவழிக்கிறோம். நவீன அறிவியலும் கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. தூங்குவதன் மூலம் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஓய்வும், அமைதியும் கிடைக்கிறது.

சித்தர் பெருமக்களும் தூக்கம் பற்றி நிறையவே கூறியிருக்கின்றனர். தூக்கம் என்பது மனிதனுக்கு மிக அவசியமானது என்றாலும் கூட சித்தர்களின் தளத்தில் தூக்கம் என்பது உடல் தளர்வாகவும் உள்ளம் ஒரு முகமாகவும் இருக்கும் ஒரு நிலையையே குறிப்பிடுகின்றனர். இதனை தூங்காமல் தூங்கும் நிலை என்கின்றனர். பத்திரகிரியார் கூட இதனை பின்வருமாறு குறிப்பிடுகிறார்

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்?


தூங்காமல் தூங்கியிருக்கும் நிலை உயர்வான விழிப்பு நிலை. இந்த நிலையில் பிரபஞ்ச ஆற்றலோடு இணைந்து நிறைந்து இருக்கும் நிலை என்கின்றனர். மேலும் நாம் தூங்கும் போது நம்முடைய மூச்சு விரயமாவதாகவும் சித்தர்களின் பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அகத்தியரும் கூட தனது பாடல் ஒன்றில் உண்ணும் போதும், உறங்கும் போதும், உறவு கொள்ளும் போதும் மூச்சை விரயமாக்கலாகாது என்கிறார். சித்தர்கள் கூறிடும் இத்தகைய உறக்க நிலை மிக உயர்வான நிலையாகும். முயற்சியும் பயிற்சியும் உள்ள எவரும் இத்தகைய நிலையை அடைய முடியும்.

யோகப் பயிற்சியின் போதே தூக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற குறிப்பும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. அதுவும் பகலில் தூங்கவே கூடாது என்று வலியுறுத்தப் படுகிறது. சரி, இரவில் எப்படி தூங்குவதாம்?, அதற்கும் ஒரு சூட்சும முறையை தேரையர் தனது “மருத்துவ காவியம்”என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.

பாரப்பா சிவயோகம் பண்ணும்பேர்க்கு
பரிவாக நித்திரைதான் வேண்டாமப்பா
நேரப்பா ராக்கால நித்திரைதான்பண்ண
நிலையாகச் சூட்சமொன்று நிகழ்த்துறேன்கேள்
வாரப்பா வரிசையாய்க் கால்தான்னீட்டி
வகையாக நித்திரைதான் பண்ணவேண்டாம்
ஓரப்பா ஒருபக்க மாகச்சாய்ந்து
உத்தமனே மேற்கையை மேற்கொள்வாயே.

கொள்ளப்பா ஒன்றின்மேல் சாய்ந்துகொண்டு
குறிப்பா நித்திரை செய்துநீங்க
அள்ளப்பா அஷ்டாங்க யோகம்பாரு
அப்பனே சிவயோகம் வாசியோகம்
நள்ளப்பா பிராணாய மவுனயோகம்
நலமான கவுனத்தின் யோகம்பாரு
வள்ளப்பா வாசியது கீழ்நோக்காது
வகையாக மேனோக்கி யேறும்பாரே.


பொதுவில் நாம் எல்லோரும் தூங்குவதைப் போல மட்ட மல்லாந்து கால்களை நீட்டி நிமிர்ந்து உறங்கக் கூடாதாம். ஒரு பக்கமாக சாய்ந்து கையை தலைக்கு கீழாக வைத்து அதன்மேல் தலையை வைத்து உறங்கவேண்டுமாம். அப்படி உறங்குவதால் வாசி கீழ் நோக்கி செல்லாமல் மேல்நோக்கி ஏறுமாம். இதனால் சிவ யோகம், வாசி யோகம், பிரணாயாமம், மவுன யோகம், கெவுன யோகம் அனைத்தும் இலகுவாக சித்திக்குமாம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் இதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு நிச்சயம் வந்திருக்கும். இதன் சாத்திய அசாத்தியங்களை விவாதிப்பதை விட தூக்கம் பற்றி இப்படியான தகவல்கள் நம் முன்னோர்களினால் அருளப் பட்டிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்வதே இந்த பதிவின் நோக்கம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

26 comments:

குணசேகரன்... said...

Very informative.thanks

kaleappan said...

அன்பான தோலியே, வணக்கம்
இரசமணி எப்படி இலகுவாக கட்டுவது? எதேனும் வலிமுரை இருகிறதா?
நன்றி

kimu said...

TRY PANREN :)

சின்னமனூர் தமிழன் said...

அருமையான பதிப்பு

Karthikeyan Rajendran said...

நம் முன்னோர்கள் அருளிய இது போல பல இருக்கிறது, அதை போற்றி பாதுகாத்து அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்ப்பது நமது தலையாய கடமை........

சின்னமனூர் தமிழன் said...

அருமையான பதிவு

தோழி said...

@kaleappan

உங்கள் கேள்விகளுக்கான விடைகள் எனது பழைய பதிவுகளில் விரிவாகவே இருக்கிறது. தேடினால் கிடைக்கும்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

ப.கந்தசாமி said...

நல்ல பதிவு.

tamilvirumbi said...

Dear thozi,
Sleeping is an indispensable thing irrespective of human and animals.you have explained in well stead.

Sasikumar C said...

Very nice info...thanks thozhi

RAVINDRAN said...

நனறி

sruti pradha said...

இந்த தூக்கத்தின் அனுபவம் எனக்கு உண்டு ... இது உண்மைதான்

sruti pradha said...

இந்த தூக்கத்தின் அனுபவம் எனக்கு உண்டு ... இது உண்மைதான்

Anonymous said...

நல்ல தகவல் தோழி

ப்ரவீன் குமார் ........

Unknown said...

:)

நல்ல விடயம்

இப்படித்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உறங்கி காண்பித்தார்கள் ...

Jaleela Kamal said...

சகோ ஜமால் சொல்லுவது சரியே

மிக அருமையான பதிவு

ஆன்மீக உலகம் said...

பின் பற்றுகிறேன் தோழி

Dr.V.K.Kanniappan said...

அன்புள்ள தோழி,
எப்படித் தூங்குவது? என தேரையர் கூறுவது அருமையான யோசனை. மல்லாந்து தூங்கக் கூடாது. அப்படித் தூங்கினால் வாய் திறந்து வாய்வழி சுவாசமும், வாய் உலர்ந்தும் விடுகிறது. எனவே ஒரு பக்கம் திரும்பி, கையை மடித்து அதன் மேல் தலை வைத்துத் தூங்க வேண்டும் எனத் தெரிந்து கொண்டேன்.

anandbluestar said...

தோழி அவர்களே , உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி . ஒருபக்கமாக தூங்க வேண்டும் என்று சொன்னீர்கள் .அவை இடது பக்கமாக படுக்க வேண்டுமா இல்லை வலது பக்கமாக படுக்க வேண்டுமா . ஆனந்த்

Unknown said...

Hello friend, Really a good one. My suggestion is that it would be of great benefit to the readers, if they could get the nuances involved in your description. For instance, the word VASI above refers what we call SIVA. VASI is a word to denote the life breath. What they are speaking about is for the facilitation of enlightenment process.

HHH said...

should sleep turning to left side, so then the vaasi runs in surya kalai....

Prakash said...

Nice blog, very useful

sathish kumar said...

good very true line

sathish kumar said...

hello sister how to made vembu kayakalpam

sathish kumar said...

good very true line

Post a comment