தேமலுக்கு ஒரு நிரந்தர தீர்வு!

Author: தோழி / Labels: ,

இன்று ஒரு மருத்துவக் குறிப்பு, அதுவும் ஒரு அழகுக் குறிப்பு!

ஆணோ,பெண்ணோ முக அழகை பராமரிக்கவும், அதை மேலும் மெருகூட்டவும் தங்களால் ஆன மட்டில், என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள். இதில் யாரும் விதிவிலக்கில்லை.இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆழகு சாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் காலம் காலமாய் கொழித்துக் கொண்டிருக்கின்றனர். மிகச் சாதாரணமான கிடைக்கக் கூடிய நமது இயற்கை பராமரிப்பு முறைகளுக்கு இன்று மதிப்பில்லை. அதனையே அழகாய் ஒரு பொட்டலமாய் போட்டு சந்தைப் படுத்தினால் கண்னை மூடிக் கொண்டு வாங்கி பயன் படுத்துகிறோம்.

நமது தோலில் நிறமாற்றம் உண்டாவதை பொதுவாக தேமல் என்கிறோம்.இதற்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. அலோபதி மருத்துவம் இதற்கு பல்வேறு தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தோடு ஒப்பிடுகையில் செலவு பிடித்தவை. தேமலை போக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு தீர்வுகள் இதற்கு முன் வைக்கப் பட்டிருக்கிறது. இவை எல்லாம் கைவைத்தியம், பாட்டி வைத்தியம் என முந்தைய தலைமுறையோடு பெயரில் முடங்கிப் போய் விட்டது. இதனால் நம்மில் பலருக்கு இதன் மகத்துவமே தெரியாமல் போய்விட்டது.

இந்த தேமலை தமிழ் வைத்தியத்தில் “மங்கு” என அழைக்கின்றனர். இதனை போக்கிட ஒரு எளிய மருத்துவ குறிப்பு தேரையரின் பாடலில் காணக் கிடைக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு...

கொள்ளவே யரிதாரப் பளிங்கு மாகுங்
குறையாமல் பலமரைதான் நிறையோர் கட்டி
உள்ளவே நற்கோவை ரசத்தை வாங்கி
உறவாக யிழைத்து வழித்தெடுத்துக் கொண்டு
மெள்ளவே ஐந்திருநாள் யிருபோதுந் தான்
விளங்கவே அடுத்தடுத்துப் பூசும்போது
துள்ளவே திருமுகத்தில் படரும் வங்கும்
தொந்தித்து நில்லரிது துலைந்து போமே.


இந்தப் பாடல் தேரையரின் மருத்துவ காவியம் என்கிற நூலில் இருந்து எடுக்கப் பட்டது. இதன் படி சருமத்தில் உண்டாகும் தேமல், தழும்புகள், அடையாளங்கள் நீங்கிட இந்த குறிப்பைத் தருகிறார்.

அரிதாரம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஒரு பொருள். பளிங்கு போல தோற்றமளிக்கும் இது கட்டியாகவும் தூளாகவும் கிடைக்கும். இதில் கட்டியான அரிதாரம் ஒரு அரைப் பலம் அளவு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் கோவைக்காயின் சாறு விட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அதனை ஒரு நாளைக்கு இரண்டு தடவை (காலை, மாலை) என பத்து நாட்களுக்கு பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து பூசி வர அவை அனைத்தும் மறைந்து சருமம் அழகாயிருக்கும் என்கிறார்.

பாதிப்புள்ளவர்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்... தேவையுள்ளோருக்கு பரிந்துரைக்கவும் செய்யலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

tamilvirumbi said...

Dear Thozi,
Regarding skin ailment,whatever the medicines
recommended by allopathy,are having acute side effects.Nowadays,most of the Skin ailments are being cured by Ayurvedic successfully.I am making one appeal to you.
One of my colleague has been suffering from fungal infection for the past three years.Till now, he has not been cured.His skin colour got tanned.He is experiencing untolerable itching if he goes in the scorching sun.If you find any suitable medicine,Please blog it in the forum.It will be highly useful to others.Thanks a lot.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

venkat said...

அன்பு தோழி,
தங்களது சித்தர்கள் தளத்தை தற்செயலாக பார்த்தேன். அருமையான பதிவு. அதில் காயகற்பம் சப்பிடும் முறை பார்த்தேன்.
மிகமிக எளிமையான முறைகளை கூறியுள்ளிர்கள். மிக்க நன்றி.மேலும் சில எளிய முறைகளை கூறினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் .
இரண்டு காயகற்பம முறைகளை ஒரே சமயத்தில் சாப்பிடலாமா

தோழி said...

@venkat

ஒரே நேரத்தில் இரண்டு கற்பஙக்ளை உண்ணலாம் என்பது மாதிரி குறிப்பு நான் பார்த்த வரையில் எங்கேயும் காணக் கிடைக்கவில்லை. மேலும் காய கற்பம் என்பது ஒவ்வொருவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கவேண்டிய ஒன்று எனவே தகுந்த அனுபவமும், மருத்துவ தேர்ச்சியும் உடைவர்களின் ஆலோசனை மற்றும் வழி காட்டுதலில் முயற்சிக்கவும். நீங்களாக விஷப் பரிட்சையில் இறங்க வேண்டாம்.

அரட்டை அகிலன் said...

உங்கள் மருத்துவ சேவை தொடர வாழ்த்துக்கள் ...நல்ல பதிவு ... நன்றி ......

Unknown said...

:)

Unknown said...

எளிய மருத்துவ முறைகளின் பதிவுக்கு ஒரு தனி மவுசு உண்டு :)

ram said...

முகத்தில் உள்ள பரு மற்றும் தழும்புகளுக்கும் இதை உபயோகப்படுத்தலாமா?

verycute said...

i have hyperpigmentation ...no improvement in using hydroquinone..

Unknown said...

Super

Unknown said...

FANTASTIC AND SIMPLE MEDICINES ARE OUR HAND BUT NOT USED PEOPLES ARE GO TO READYMADE ITEMS ONLY THERE RE LAZY......

Unknown said...

thank u

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நல்ல பதிவு, அரிதாரம் சுத்தி ? பளிங்கு என்பது பளிங்கு சாம்பிராணி யா ?

BALA KUMAR said...

Superb..... Thanks a lot en thozhi ...

Post a comment