உடற்கூறியலில் சித்தர் பெருமக்கள் முன் வைக்கும் முதல் ஆச்சர்யமான தெளிவு,எந்த ஒரு மனிதனின் உடம்பும் அவரது கையால் அளக்க எட்டு சாண் உயரமும், நான்கு சாண் பருமனும், தொன்னூற்றி ஆறு விரற்கடை பிரமாணமும் கொண்டதாக இருக்குமாம்.இது வேறெந்த மருத்துவ முறையின் உடற்கூறியலும் சொல்லாத ஒரு செய்தி.
வாருங்கள், இன்றைய பதிவில் நமது உடற்கூறில் அடங்கியிருக்கும் தொன்னூற்றி ஆறு கூறுகளைப் பற்றி பார்ப்போம்.இவை அனைத்தும் இருபது வகைகளில் அடங்கி இருக்கிறது.
அறிவு (1)
இருவினை(2)
நல்வினைதீவினை
மூவாசைகள்(3)
மண்பொன்பெண்
அந்தக் கரணங்கள்(4)
மனம்புத்திசித்தம்அகங்காரம்
பஞ்சபூதங்கள்(5)
பிருதிவி - (பூமி - நிலம் - மண்)அப்பு - (ஜலம் - நீர் - புனல்)தேயு - (அக்னி - நெருப்பு - அனல்)வாயு - (கால் - காற்று - கனல்)ஆகாயம் ( வெளி - வானம் - விசும்பு)
பஞ்ச ஞானேந்திரியங்கள்(5)
மெய்வாய்கண்மூக்குசெவி
பஞ்ச கன்மேந்திரியங்கள்(5)
வாக்கு (வாய்)பாணி (கை)பாதம் (கால்)பாயுரு (மலவாய்)உபஸ்தம்(கருவாய்)
பஞ்ச தன் மாத்திரைகள்(5)
சுவை (ரசம்)ஒளி (ரூபம்)ஊறு (ஸ்பரிசம்)ஓசை (சப்தம்)நாற்றம் (கந்தம்)
பஞ்ச கோசங்கள்(5)
அன்னமய கோசம்பிராணமய கோசம்மனோமய கோசம்விஞ்ஞானமய கோசம்ஆனந்தமய கோசம்
மூன்று மண்டலங்கள்(3)
அக்னி மண்டலம்சூரிய மண்டலம்சந்திர மண்டலம்
குணங்கள்(3)
ராஜஸம்தாமசம்ஸாத்வீகம்
மலங்கள்(3)
ஆணவம்கன்மம்மாயை
பிணிகள்(3)
வாதம்பித்தம்சிலேத்துமம்
ஏடனை(3)
லோக ஏடனைஅர்த்த ஏடனைபுத்திர எடனை
ஆதாரங்கள்(6)
மூலாதாரம்சுவாதிஷ்டானம்மணிபூரகம்அனாகதம்விசுத்திஆஞ்ஞா
அவஸ்தைகள்(5)
சாக்கிரம் (நனவு)சொப்பனம் ( கனவு)சுழுத்தி (உறக்கம்)துரியம் ( நிஷ்டை)துரியாதீதம் (உயிர்ப்படக்கம்)
தாதுக்கள்(7)
இரசம்இரத்தம்மாமிசம்மேதஸ்அஸ்திமச்சைசுக்கிலம் அல்லது சுரோணிதம்
ராகங்கள்(8)
காமம்குரோதம்லோபம்மோகம்மதம்மாச்சரியம்இடம்பம்அகங்காரம்
தச நாடிகள்(10)
இடைகலை - (இடப்பக்க நரம்பு)பிங்கலை - (வலப்பக்க நரம்பு)சுமுழுனை - (நடுநரம்பு)சிகுவை - (உள்நாக்கு நரம்பு)புருடன் - (வலக்கண் நரம்பு)காந்தாரி - (இடக்கண் நரம்பு)அத்தி - ( வலச்செவி நரம்பு)அலம்புடை - (இடச்செவி நரம்பு)சங்கினி - (கருவாய் நரம்பு)குகு - (மலவாய் நரம்பு)
தசவாயுக்கள்(10)
பிராணன் - உயிர்க்காற்றுஅபாணன் - மலக் காற்றுவியானன் - தொழிற்காற்றுஉதானன் - ஒலிக்காற்றுசமானன் - நிரவுக்காற்றுநாகன் - விழிக்காற்றுகூர்மன் - இமைக்காற்றுகிருகரன் - தும்மற் காற்றுதேவதத்தன் - கொட்டாவிக் காற்றுதனஞ்செயன் - வீங்கல் காற்று
ஆக மொத்தம் தொண்ணூற்றாறு கூறுகளைக் கொண்டது நமது உடல். பிரிதொரு சந்தர்ப்பத்தில் இவை பற்றி விரிவாக எழுதிட முயற்சிக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



7 comments:
good work
Super!
அங்கொன்றும் இங்கொன்றுமாய் இவைகளை படித்திருக்கிறேன். மொத்தமாய், பறவை பார்வையில்.... அற்புதமான முயற்சி. வாழ்த்துக்கள்.
Dear Thozi,
What siththars described about human constitution is perfectly alright while dealing with science.In some areas, science
is giving vague ideas.
is there any remedy for psoriasis in our siththarkal medicine
Fantastic thozhi...
This only the human nature...
Post a Comment