திரிசங்கு ராஜன் திரவியம்..

Author: தோழி / Labels: ,

கோவில்களில் திரவியங்களை இருப்புச் செய்து அதன் மீது சிலைகளையும், மண்டபங்களையும் நிர்மாணிக்கும் பழக்கம் தமிழகத்தில் பன்னெடுங் காலமாய் வழக்கத்தில் இருந்து வருகிறது. இன்றைக்கும் கூட புதிய கட்டிடங்களைக் கட்டும்போது நவரத்தினங்களை பூமியில்போட்டு அதன் மீது முதல் கல்லை வைக்கும் மரபு இந்த பண்டைய மரபின் தொடர்சியே...

இந்த வகையில் இன்று திரிசங்கு ராஜன் என்ற மன்னன் மறைத்து வைத்த திரவியம் பற்றி அகத்தியர் கூறுவதைப் பார்ப்போம். இந்த தகவல் அகத்தியர்12000 என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

ஆமேதான் வனந்தன்னிலே கெருடரிடியார்தாமும்
அங்ஙனமே யாசீர்மந் தன்னிலப்பா
தாமேதான் சீடவர்க்க மாயிரம்பேர்
தாக்கான கூட்டமுடன் கொலுவிருப்பார்
நாமேதான் சொன்னபடி யாசீர்மத்தின்வடக்கே
நலமான கணபதி கோவிலுண்டு
போமேதான் கோவிலின் கீழதாக
பொங்கமுடன் கிடாரவைப்பு சொல்லக்கேளே.

கேளப்பா திருசங்கு ராசன் வைத்த
கெடியான நவகோடி திரவியங்கள்
நாளப்பா வரைகோடி சென்றகாலம்
நாதாக்கள் முன்பாக வைத்தவைப்பு
மாளப்பா ராசனது தேகந்தானும்
மண்மீதிற் சமாதியது பூணுமுன்னே
நீளப்பா வைத்ததொரு திரவியங்கள்
நீலணித்தில் கண்டவர்களில்லைதானே.

தானான திரவியங்களிருக்கும்ஸ்தானம்
தாக்கான கெருடரிடி யாச்சிரமபக்கம்
கோனான கணபதியின் கோவிலின்
காணாத நிலவறையில் வைத்ததாமே
தேனான திரவியங்க ளெடுப்பதற்கு
தெரியவே சூட்மசுமகணபதியின் பாதம்கீழே
கோனா யெனதையர் சொன்னவாக்கு
குவலயத்தில்பொய்யாது மெய்யதாமே.


கருடரிஷி வனத்தில் கருடரிஷி அவர்களின் ஆசிரமம் இருக்கின்றதாம். அங்கே அவர் தனது சீடர்களுடன் வசித்திருந்தாராம். அந்த ஆச்சிரமத்தின் வடக்குப் பக்கதில் கணபதி கோவில் ஒன்று அமைந்திருக்கிறதாம். அந்த கோவிலின் கீழ்ப் பகுதியில் பெருமளவு பொக்கிஷம் வைக்கப்பட்டிருக்கிறதாம்.

திரிசங்கு ராஜன் தான் சமாதி அடைவதற்கு முன்பாக சித்தர்களின் முன்னால் நவகோடி நிதியங்களையும் இங்கே வைப்புச் செய்தானாம்.இந்த வைப்பு நிதிகளை சித்தர்களைத் தவிர வேறு எவரும் அறிந்தவர் இல்லை என்கிறார். மேலும் இந்த பொக்கிஷத்தை திறக்கும் சூட்சுமம் ஒன்று இருக்கிறதென்றும், அது அங்கிருக்கும் விநாயகர் சிலையின் பாதங்களின் கீழ்புறத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த தகவல்களை தனக்கு தன் குருநாதர் கூறியதாகவும், இவை முற்றிலும் உண்மையான தகவல் என்று அருளியிருக்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

http://machamuni.blogspot.com/ said...

அன்புள்ள தோழி அவர்களுக்கு,
சித்தர்களின் பாடல்களின் மேல் ஈற்பு ஏற்பட்டு,சித்தர்களின் பற்பல பாடல்களைப் படித்து அவற்றை முழுதாக ஞாபகம் வைத்து,சித்தர்களின் பாடல்களுக்கு பொருள் அறியும் நிகண்டு முதலானவற்றை கற்று,அவற்றுக்கு பொருள் கூறும் திறமும் உள்ள நபர்கள் இக்கால இளைஞர்,இளைஞிகளிடம் தேடித்தான் காண வேண்டும்.அப்படியுள்ள கால கட்டத்தில் உங்களைப் போல உள்ள நபர்கள் அவற்றை படித்து பாஷாணக் கட்டு,களங்கு போன்றவற்றை முயற்சித்து சாதிப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.நல்ல நூலறிவையும் உங்கள் வாதத் திறனில்(வானவன் யோகியுடன்)காணுகிறேன். உங்களுக்கு ஒரு நல்ல குருவானவர் வாய்த்து இருக்கிறார்.அவரால்தான் உங்களை பாஷாணக் கட்டு போடும் அளவிற்கு திறனுள்ள சிஷ்யையாக உருவாக்க முடிந்திருக்கிறது.பாஷாணக் கட்டை,விஷத் தன்மை முறிந்திருக்கிறதா என்று சோதிப்பதற்கு சில பல வழிகள் உள்ளன.உங்கள் குருநாதரிடம் அந்த வழிகளையும் கற்று, அவற்றால் சோதித்துப் பார்த்துக் கொண்ட பின் அந்த பாஷாணக் கட்டை மருந்துக்கு பயன் படுத்தவும்.மதிப்பு மிக்க பாராட்டுதல்களுடன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

vv9994013539@gmail.com said...

சாமீ அழகப்பன். உங்கள் வாழ்த்துக்கள் அனுபுவ புர்ருவமானது.

Shiva said...

அருமையான செய்திகள். அகத்தியர் 12000 நூலில் நிறைய புதையல் ரகசியங்கள் இருக்கிறது போலும். இவைகள் எப்போது யாரால் வெளிப்படும் என்ற தகவல்கள் இருந்தால் அதையும் கூட சொல்லலாமே

kimu said...

அருமையான பதிவுகள் தோழி.

தோழியுடன் வரும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:
தினமும் கலையில் மக்கள் தொலைகாட்சில் காலை 7 : 30 க்கு
டாக்டர் அன்பு கணபதி என்பவர் சித்தமருத்துவம்
பற்றி அருமையாக நாம் பின்பற்றும்படி
விளக்குகிறார். பார்த்து
கேட்டு பயன்பெறவும்.

மற்றும் தேரையர் காப்பியம் என்னும் நூலை வலைத்தளத்தில் கண்டேன்.
அதையும் பதிவு இறைக்கி பயன்பெறவும்.

சுட்டி:
http://dl.dropbox.com/u/28601693/TheraiyarKaapiyam.pdf

-கிமூ-

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

மிகவும் அறியதகவல்,அறிய பதிவாகிவிட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

மிகவும் அறியதகவல்,அறிய பதிவாகிவிட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

pulanampakirvukal said...

Thozi,
Is there any post related to sithar kakaapujandar ? I couldn't find it in this website .

Thanks,
Muthukumar

tamilvirumbi said...

Dear thozi,
Persipcuously, you have explained well about
thirisangu rajan's treasure.Thanks a lot

Rajakumaran said...

very nice..

Post a Comment