ஸ்ரீரங்க திரவியம்..

Author: தோழி / Labels:

சோழவள நாட்டில் காவிரி சூழ்ந்த ஒரு தீவில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற வைணவ திருத்தலம்தான் அருள் மிகு அரங்கநாதர் ஆலயம். தற்போது இந்த இடம் திருவரங்கம், ஸ்ரீரங்கம் என்ற பெயர்களால் அழைக்கப் படுகிறது. பழமையும், சிறப்பும் வாய்ந்த பிரம்மாண்டமான இந்த கோவில் பல்வேறு சோழ மன்னர்களால் கட்டி எழுப்பப் பட்டது. இதன் வரலாறு காலத்தே மிகப் பழமையானது. பல்வேறு படையெடுப்புகளையும், கொள்ளை சம்பவங்களையும் இந்த கோவில் சந்தித்திருப்பதாக வரலாறு கூறுகிறது.

இத்தனை சிறப்பும் வாய்ந்த இந்த கோவிலில் திரளான நிதிக் குவியல்கள் இருப்பதாக செவிவழிச் செய்திகள் பல இருந்தாலும் இன்று நாம் அகத்தியர் தனது அகத்தியர் 12000 என்னும் நூலில் தன் மாணவரான புலத்தியருக்கு கூறுவதாக வரும் பாடல்களில் இந்த கோவிலில் மறைந்திருக்கும் செல்வங்களைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


ஏகவே யினன்மொரு மர்மங்கூர்வேன்
னெழிலான புலத்தியனே தம்பிரானே
சாகவே நெடுங்காலந் தன்னிலப்பா
சட்டமுட னரசுமகா செய்யுங்காலம்
ஆகமத்தின் படியாக நேமஸ்தானம்
அப்பனே தானமைத்தார் சிற்பிமாணபர்
பாகமுடன் விதிபாடு முறைமையாக
பாவித்த ஸ்ரீரங்கரருள் பாலித்தாரே.

பாலிக்க சதுர்முகமாங் கோயிலப்பா
பாங்கான வறுகோண நிலவறையுமாகும்
வேலியா மைவேலி நிலமுமாகும்
வேதாந்தர் தாயினது மாளியாகும்
சாலியா மூலவர்கள் சிலைகள்தோறும்
சாங்கமுடன் சிலைகள்தோறும்
கோலியே பாதாளம் குழிபறித்து
கொற்றவனே தானமைத்த கதைதான்கேளே.

கேளப்பா மூலவர் ரங்கநாயகன்
கெணிதமுள்ள சிலையதுவு மடிவாரத்தில்
தாளவே நிதிகளப்பா குறுணியாஷ்ட்டம்
தாக்கான செம்பொன்னாம் விராகனாகும்
நீளவே கொட்டியல்லோ சமாதிசெய்து
நிட்களங்க மாகவல்லோ ரங்கர் தம்மை
மீளவே சமாதியது மிகவாய்ச்செய்து
மிக்கவுமே கற்சிலையும் செய்திட்டாரே.

இட்டாரே ரங்கருமே தேவஸ்தான
மெழிலுடனே நெடுங்கால மிருப்பார்தாமும்
சட்டமுட னொவ்வொரு சிலையின்கீழே
சாங்கமுடன் திரவியங்கள் லக்கோயில்லை
திட்டமுடன் மகாநிதிகள் சொல்வதற்கு
தீர்க்கமுடன் யாராலு முடியாதப்பா
விட்டகுறை யிருந்ததுவு மெய்யேயானால்
வீறுடனே தரிசனைக்கு வாளாவாரே.

ஆவாரே யின்னமோர் மார்க்கங்கூர்வேன்
அப்பனே புலத்தியனே அன்புள்ளானே
தாவான மண்டபங்கள் தடாகங்களப்பா
தகைமையுடன் கோபுரங்கள் மாபுரங்கள்
சதுருடனே நிதியனைத்தும் கீழேஅடைத்து
சாவாம லிருப்பதங்கு முன்னதாக
சமர்செய்யவே போவதற்கு முன்னதாய்
சோழராஜன் செலுத்திவிட்ட நிதியுமாமே.


சோழ அரசர்களின் நெடுங்கால் அரசாட்சியில் சிற்பிகள் பலரைக் கொண்டு ரங்கநாதர் கோவிலைக் கட்டுவித்தார்களாம். சதுர அமைப்பில் கோவிலைக் கட்டி அதன்கீழ் அறுகோண நிலவறையையும் அமைத்தார்களாம். மேலும் கோவிலில் உள்ள மூலவர்கள் சிலைகளுக்குக் கீழே குழிதோண்டி வைத்த கதையை சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார் அகத்தியர்....

மூலவர் ரங்கநாதர் சிலை இருக்கும் இடத்தில் பாதாளக் குழி தோண்டி,அதில் குறுணியால்ஸ்டக நிதி மற்றும் செம்பொன்னும் கொட்டி பின் குழியை மூடி அதன் மேல் மதில்போல் செய்து அதன் மேல் கல்லிலே ரங்கநாதர் சிலையையும் வடித்து வைத்தார்களாம்.

ரங்கநாதர் அந்தக் கோவிலில் அழகு துலங்கிட நெடுங்காலமாக இருப்பாராம். அத்துடன் அந்தக் கோவிலில் உள்ள சிலைகளுக்குக் கீழே இருக்கும் திரவியங்களை, நிதிகளை துல்லியமாகக் கணிப்பிட்டுச் சொல்ல யாராலும் முடியாது என்கிறார் அகத்தியர்.

மேலும் இந்தக் கோவிலில் இருக்கும் தடாகம், மண்டபங்கள், கோபுரங்கள் அனைத்திற்கும் கீழே பல வகையான நிதிகளை வைத்து அடைத்து அதன் மேலேதான் இவை கட்டப் பட்டதையும், எதனால் இவ்வாறு அடைக்கப்பட்டது என்பதையும் விவரிக்கிறார். இவை எல்லாம் சோழ மன்னர் யுத்தத்திற்குச் சென்று மரணமடைய முன்னர் வைத்தவைகளே என்ற தகவலும் இந்த பாடல்வழியே நமக்கு கிடைக்கிறது.

ஆச்சர்யமான தகவல்தானே!

நாளைய பதிவில் மற்றொரு வைணவத் தலமான அருள் மிகு கள்ளழகர் கோவிலில் உள்ள புதையலைப் பற்றிய அகத்தியரின் செய்திகளைப் பார்ப்போம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

Unknown said...

Ariya Thagavalkal!

Sankar Gurusamy said...

பாவம் ரங்கநாதர்.. சிவனேன்னு இருந்தவரை இப்பிடி சிக்கல்ல மாட்டி விட்டு விட்டீர்களே... இது நியாயமா???

அதுவும் அடுத்து அழகர் கோயிலையும் மாட்டி விடப் போறீங்க... பாவம்... இனிமேல் இவங்கள எல்லாம் வேற எங்கியாவது அறநிலையத்துறை மாத்தீரப் போகுது...

http://anubhudhi.blogspot.com/

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Kumar said...

பொக்கிஷம் வெளிப்படனும் , அதனால் கடவுளும் இடம் பெயரனும்னா அதை யாரால மாத்தமுடியும்... ரங்கனுக்கே சோதனை ஆரம்பிடுசுனு நினைக்கறேன்....

நீச்சல்காரன் said...

அரங்கநாதரே பெரும் புதையல் அங்கே சிற்சில தங்க புதையல்வேறு உள்ளதா! பிரம்மிப்பாகவுள்ளது

chinnu said...

arputfam nalla thagaval

KP's takes said...

தோழி, அமரோலி, அமரி, அமுரி என்றெல்லாம் குறிப்பிடப் பெரும் யோகவித்தையைச் சித்தர்கள் எவ்வாறு அணுகுகின்றனர்? தயவு செய்து விவரங்கள் தரமுடியுமா?

tamilvirumbi said...

Dear thozi,
You have given out very interesting topic.
Please give more topics about kaliyuga.When kaliyuga is going to end?.Who is going to take incarnation at the end of Kaliyuga?.If you find it in Siththar verses, Please share it with us.

Post a comment