பொக்கிஷம்... புதையல்... சித்தர்களின் குறிப்புகள்.

Author: தோழி / Labels:

திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலில் கண்டெடுக்கப் பட்ட பொற்குவியலைப் பற்றியும், அதன் அளவிலா மதிப்புப் பற்றியும்தான் சமீப காலமாய் நாமெல்லோரும் பரபரப்பாய் பேசிக் கொண்டிருக்கிறோம்.இதுதான் சமயமென தமிழகத்திலும் கூட இம்மாதிரி பொற் குவியல்கள் மறைந்திருக்கின்றன என ஆளாளுக்கு பட்டியல் வாசித்துக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் அங்கு இம்மாதிரி நிதிக் குவியல்கள் இருக்குமா?, இல்லையா?, என்பது வேறு விஷயம். ஆனாலும் கூட இத்தகைய தகவல்கள் நமக்கு பேராவலையும் கிளர்ச்சியையும் உருவாக்குகின்றன. நமது முன்னோர்கள் யாருக்கும் தெரியக் கூடாதென பரம ரகசியமாய் மறைத்து வைத்த புதையலை நாம் கண்டு பிடிக்கிறோமென்றால் சும்மாவா!!

கடந்த காலங்களில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் சைவமும், வைணவமும்தான் செல்வாக்கான மதங்களாய் தழைத்தோங்கி இருந்திருக்கின்றன. இடைப்பட்ட காலங்களில் சமணமும், பௌத்தமும் வளர்ந்து பின்னர் அழிந்திருப்பதை வரலாற்றின் ஊடே நாம் அறிந்திட முடிகிறது. இந்த மதங்களின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது அப்போது ஆட்சியில் இருந்த மன்னர்களின் ஆதரவினைப் பொறுத்தே அமைந்திருக்கிறது. மன்னர்களும் கோவில்களை தங்களுடைய ஆளுமையின் சின்னமாக கருதியிருக்கின்றனர். தன் தந்தையை விட பெரிய்ய பிரம்மாண்டமான கோவில்களை மகன்கள் கட்டியது எல்லாம் இந்த வகையில்தான் சேர்கிறது.

மன்னர்கள் போர்க் காலங்களில் தங்களுடைய பொக்கிஷங்களை இம்மாதிரியான கோவில்களின் நிலவறைகளில் பத்திரப் படுத்தியதாகவும், போரில் வெற்றி பெற்றவர்கள் எதிரியின் பொக்கிஷங்களைத் தேடி இம்மாதிரியான கோவில்களை சூறையாடிய செய்திகள் நிறைய கிடைத்திருக்கின்றன. எதிரியின் பொக்கிஷங்களை கவர்ந்து வந்த வெற்றிக் களிப்பில் கோவிலில் மறைத்து வைத்த தங்களுடைய பொக்கிஷங்களை இறைவனுக்கே காணிக்கையாக்கிடும் ஒரு மரபும் இருந்திருக்கிறது.

இந்த பொக்கிஷங்களைப் பற்றிய தகவல்கள் பரம ரகசியமாய் காக்கப் பட்டதனால், ஒரு காலகட்டத்திற்குப் பின்னர் யாருக்கும் இது தொடர்பாய் எதுவுமே தெரியாமல், போய்விட்டது. ஆனாலும் கூட செவிவழிக் கதைகளாய் அங்கே புதையல் இருக்கிறது, இங்கே புதையல் இருக்கிறது.புதையலை பூதம் காக்கிறது என்பது மாதிரியான கதைகளை சொல்லியும்,கேட்டும் மகிழ்ந்ததோடு அவை முடிந்து போய்விட்டன.

அரிதாய் சில சுவடிக் குறிப்புகள் மற்றும் கல்வெட்டுத் தகவல்கள் மூலமாக ஒரு சில பொக்கிஷ விவரங்கள் நமக்கு தெரியவந்திருக்கின்றன. பெரும்பாலும் அவை கூட அவற்றை யாரும் சரிபார்த்ததாக தெரியவில்லை. சமீபத்தில் ஸ்ரீபத்ம நாப சுவாமியின் கோவில் பொக்கிஷ விவரங்கள் கூட ஒரு நூல் குறிப்பில் இருந்துதான் பெறப் பட்டிருக்கிறது. அதை அடுத்து நம்மைப் போல நிறைய பேர் ஆளாளுக்கு ஆதாரங்களோடு கிளம்பியிருக்கிறார்கள். அதன் விளைவாக இப்போது கோவிலில் குடியிருக்கும் தெய்வத்தை விட அங்கே மறைந்திருக்கும் புதையலைப் பற்றிய ஆர்வமும், அவசியமும்தான் நமக்கு பிரதானமாய் படுகிறது.

சமீபத்தில் கூட தமிழகத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான குடவாயில் பாலசுப்பிரமணியன் புதையல் பற்றிய தனது அனுமானங்களை அரசுக்கு அனுப்பியிருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. அதிலும் திருவாரூரில் இருக்கும் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவில் குறித்த தனது ஆய்வின் தெளிவுகளாய் சுட்டிக் காட்டியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களைக் கூட தனது மனுவில் இனைத்திருப்பதாக கூறியிருக்கிறார். இந்த தகவலைப் பற்றிய செய்திக் குறிப்பினை இங்கே காணலாம். இனி இதனை சரிபார்ப்பது அரசின் கைகளில் இருக்கிறது.

எல்லாம் சரிதான்... புதையலுக்கும் நமது பதிவுக்கும் என்ன தொடர்பு என்கிற நியாயமான சந்தேகம் இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கும்.

தொடர்பு இருக்கிறது!,

ஆம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புதையல் இருப்பதை அகத்தியரே சொல்கிறார். அதுவும் எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது என்கிற தகவலையும் அகத்தியர் சொல்லி இருக்கிறார். அந்த விவரங்கள்....

நாளைய பதிவில்....!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

Ramesh said...

வேண்டாம், வம்ப விலை கொடுத்து வாங்க வேணாம்.....

சேலம் தேவா said...

நாளைய பதிவை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

kimu said...

:( namaku yen vambu!!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

vv9994013539@gmail.com said...

உண்மைய சொல்ல எதற்கு பயம்.

''இறைவனடி யுவராஜா'' said...

நல்ல பதிவுகள் தோழி...........

S.Puvi said...

தகவல் இனிதானவையே.
இருப்பினும்
புதையல் மனிதர்களை ஆசையின்பால் இட்டுச்செல்லும் என்பதை மறந்துவிடாதீர்கள்

சின்னமனூர் தமிழன் said...

மிக ஆவலாக உள்ளோம்

rajsteadfast said...

Athu Arasaangathin kaigalil kidaipathaivida...
Kovil il irupathey sirappu...Nanri Thozhi.

tamilvirumbi said...

Dear thozi,
Thanks a lot for your today's blog.In Padmanabasamy temple,6th chamber is not yet opened.It is in dispute.It is being debated in the court.But, wealth accumilated in the 6th
chamber is pertaining to Tamilnadu which has been told by some tamils.In 1750,Ramanathan varma had ruled southern region.His palace is built in Kalakkad which is presently situated
in Tirunelveli District.During his regime, he has sent more tamil ministers to Padmanaba temple to maintain and safeguard the treasury.In addition to this, the gopuram has been built in Tamil temple Style.Sculptures are also there, I have heard about.It is true
or not,Sri padmanabaswamy knows.

Unknown said...

want to know did sriranganathar temple built during agathiyar survival period if not how come he would have said there is a treasure

Post a comment