நவபாஷாணம் சில விளக்கங்கள்..

Author: தோழி / Labels: , ,

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி திருக்கோவிலில் கண்டெடுக்கப் பட்ட பொக்கிஷங்களைப் பார்த்து உலகே வாய்பிளந்து அதிசயித்திருக்கையில், அதே மாதிரியான பொக்கிஷங்களின் தகவல்கள் சித்தர்களின் பாடல்களிலும் காணக் கிடைக்கிறது. அந்தத் தகவல்களையே இன்று முதல் வலையேற்ற உத்தேசித்திருந்தேன்.

ஆனால்...

முந்தைய பஞ்சலிங்க பாஷாண பதிவில் பின்னூட்டமிட்டிருந்த திரு.வானவன்யோகி என்பார், பாராட்டுதல்களோடு சில விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார். அதற்கான பதிலை அங்கேயே பின்னூட்டத்தில் பதிந்து விட்டாலும் கூட, அவரது பின்னூட்டத்தில் ஒரு வரி தந்த தாக்கத்தின் பொருட்டே இன்று இந்த பதிவினை எழுத நேரிட்டது.

அந்த வரி இதுதான்... “முதலில் நவபாஷாணம் ஒன்பது பாஷாணம் என்பதே பாமரர் வார்த்தை என அறியவும் ”,

நவபாஷாணம் பற்றி பண்டிதர்களின் புரிதல்கள் ஒரு பக்கமிருக்கட்டும். பாமரர்களிடையே பிறந்து பரமநிலையை அடைந்த சித்தர் பெருமக்கள் இது பற்றி என்ன அருளியிருக்கின்றனர் என்று பார்ப்போம். இந்த பதிவில் இடம்பெறும் தகவல்கள் எல்லாம போகர் நிகண்டு, போகர் வைத்திய காவியம், போகர் 7000 மற்றும் புலிப்பாணி பூஜாவிதி 116 ஆகிய நூல்களில் இருந்து சேகரிக்கப் பட்டவை.

போகரின் இந்த பாடல் தனது சீடரான புலிப்பாணிச் சித்தருக்கு நவபாஷாண சிலை செய்ததன் காரண காரியத்தை பின்வருமாறு விளக்குகிறார்.

மண்ணான தேகமது இருந்துமென்ன
மகிதலத்தில் நெடுங்காலம் வாழ்ந்துமென்ன
வண்ணமுடன் கலியுகத்தில் அனியாயங்கள்
வாகுடனே சதாகாலம் நடக்கும்பாரு
நடக்கவே கலியுகத்தார் பிழைக்கவேண்டி
நாமான மனோன்மணியாள் கிருபையாலே
உள்ளபடி பாடாணம் ஒன்பதும்தான்
உருக்கிச் சாய்த்தேன் சிலையாய்தானே


- போகர் -

இந்த உடம்பானது பூமியில் நெடுங்காலம் வாழ்ந்தாலும் பலன் இல்லயாம். ஏன் என்றால் கலியுகத்தில் எப்போதும் அநியாயங்களே நடக்குமாம். அதனால் கலியுக மக்கள் பிழைத்திருப்பதற்காக மனோன்மணி அம்மனின் அனுக்கிரகத்தால் ஒன்பது வகையான பாஷாணங்களைக் கொண்டு விக்கிரகம் செய்ததாகக் கூறுகிறார் போகர். இங்கே போகர் சொல்லும் ஒன்பது பாஷாணம் என்பது எதைக் குறிக்கிறது என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

புலிப்பாணி சித்தரின் இன்னொரு பாடலைக் கவனியுங்கள்...

பாரப்பா மலையதுவின் உச்சியிலே
பாங்கான போகருட சமாதியருகே
கட்டான பாடாணவகை எட்டுடனொன்று
காணவே சேர்த்துவார்த்த சிலைதானும்
நண்ணவே பிரதிட்டைதான் செய்து
நவிலுவேன் பூசைசோ டசமுஞ்செய்ய
ஆற்றினேன் பூசைவிதிகள் தானும்
ஆரப்பா அறிவார்க ளாருமில்லை.


- புலிப்பாணிச் சித்தர் -

மலையின் உச்சியிலே போகரின் சமாதிக்கு அருகிலேயே பாஷாண வகைகளான எட்டும் அத்துடன் இன்னும் ஒரு வகையும் சேர்த்து ஒன்பது வகையான பாஷாணங்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறதாக சொல்கிறார். அதற்கான பூசை மற்றும் சோடசங்கள் செய்ய தகுதியானவர்கள் இல்லை என்பதால் அந்த விதி முறை மற்றும் வழிமுறைகளைச் சொல்கிறேன் என்று தொடர்கிறார். இங்கே புலிப்பாணி சொல்லும் ஒன்பது பாஷாணங்களின் கட்டு என்பது எதைக் குறிக்கிறது என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இப்போது இன்னொரு பாடல், போகர் அருளிய பாடல்...

"பாங்கான பாடாணம் ஒன்பதினும்
பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி கெந்திச்சீலைமால் தேவி
கொடு வீரம்கச்சால் வெள்ளை
பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு
பூரணமாய் நிறைந்த சிவசக்தி
நலமான மனோம்மணி கடாட்சதாலே
நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு"


- போகர் -

ஒன்பது பாஷாணங்கள் எவை எவை என பட்டியல் போடுகிறார் போகர்.கௌரிப் பாஷாணம், கெந்தகப் பாஷாணம், சீலைப் பாஷாணம், வீரப் பாஷாணம், கச்சாலப் பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், தொட்டிப் பாஷாணம், சூதப் பாஷாணம், சங்குப் பாஷாணம் ஆகிய ஒன்பது பாஷாணங்களையும் பூரணமாய் நிறைந்த சிவசக்தியினதும், மனோன்மணி அம்மனுடைய கடாட்சமும் வேண்டி கட்டவேண்டும் என்கிறார் போகர். இந்த ஒன்பது பாஷாணக் கலவைக்கு என்ன பெயர் சொல்லி அழைப்பது என்பதையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

இப்படி இன்னமும் நாலைந்து பாடல்களை இதற்கு உதாரணம் காட்டிட முடியும். பாமரர்களின் புரிதல் என்கிற வார்த்தையாடல் தந்த தாக்கத்தின் பொருட்டே இந்த பதிவினை எழுதிட நேர்ந்தது. வேறெந்த தப்பர்த்தமும் செய்து கொள்ள வேண்டாமென பணிவுடன் வேண்டுகிறேன்.

இப்படி ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த திரு.வானவன் யோகி அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தோடு இந்த பதிவினை சமர்ப்பிக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

17 comments:

திவாண்ணா said...

பூக்கள் விழும்போது கற்களும் விழும். உதாசீனம் செய்ய பழகணும்!

Unknown said...

good article

http://astrovanakam.blogspot.com/

RAVINDRAN said...

நன்றி

மாய உலகம் said...

உங்கள் பதிவினை படிக்கும் போது சித்தர் வாழ்ந்த காலத்திற்கே சென்ற பிரமை ஏற்படுத்துகிறது...இது போன்ற பதிவுகளை சாதாரன நிலைமையில் படித்து கற்பது என்பது இயலாத காரியம் ஆகிறது தோழி...எனவே ஆரம்ப பதிவுகளிலிருந்து படிக்க முனைகிறேன் நன்றி

tamilvirumbi said...

Dear thozi,

Thanks a lot for your detailed explanation about
Baashanam.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

சித்தர்கள் உண்மைகளை மறைத்து விட்டார்கள் என்பது உண்மைதானே.ஏன்மறைத்தார்கள்அவரர்களால் என்ன பயன் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.அவர்களால் வந்த குழப்பம்தான் மக்கள் படும் வேதனைக்குக் காரணம் என்கிறார் வள்ளலார் .உங்கள் பதில் என்ன?

நானும் தமிழன் said...

very nice thought.

Meena said...

தோழி

நல்லதொரு படைப்பு
உங்கள் போன்றோர் சேவை தொடர வாழ்த்தும்
அன்புத்தோழி / மீனா

Meena said...

தோழி

நல்லதொரு படைப்பு
உங்கள் போன்றோர் சேவை தொடர வாழ்த்தும்
அன்புத்தோழி / மீனா

Meena said...
This comment has been removed by the author.
PAATTIVAITHIYAM said...

@செ.கதிர்வேலு
ஐயா,
சித்தர்கள் எல்லாவற்றையும் மறைபொருளாகவே கூறியுள்ளனர். காரணம் அவை பாவிகளிடம் சேர்ந்து விடக்கூடாது என்பது தான். குருவருள், திருவருள் இருந்தால்தான் அவை சித்தியாகும்.

PAATTIVAITHIYAM said...

உங்களுக்கு குருவருள், திருவருள் இருப்பதால் பாஷாணக் கட்டு சாத்தியமாகி உள்ளது. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ஆன்மீகப் பயிற்சி ஒன்று கூறுகிறேன். அதனை செய்து பார்த்து அதன் பலனை இணைய தளத்தில் வெளியிடுங்கள்.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

நவ பாஷாணம் என்பது ஒன்பது கூட்டு உலோகங்கலாகும்.இந்த ஒன்பது வகை பாஷானங்கள் மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகும்,நாம் உண்ணும உணவினால் நமது ஒன்பது துவாரங்கள் இடைவிடாது வேலைசெய்து பழுது அடைந்து வேலை செய்ய முடியாமல் நின்று விடுகிறது,அதனால் மரணம் வந்து விடுகிறது ,இந்த துவாரங்களை பழுது பார்த்து மேலும் இயங்க வைக்கிறது.இந்த நவ பாஷானத்தை முறையாக செய்து ஒரு நாளைக்கு ஒரு கடுகு அளவு உண்டு வந்தால் தேகம் நீடிக்கும் .இப்படி நாற்பத்து எட்டு நாளைக்கு உட்கொள்ள வேண்டும்,இந்த நவ பாஷானத்தை பசும்பாலில் ஊறவைக்க வேண்டும் ,பின் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.,இப்படி உட்கொண்டு வந்தால் நவ கிரகங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.இதை உண்பவர்கள் மாமிசம் போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது.தேகம் நூறு,ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் வாழலாம் என்பது சித்தர்களின் கணிப்பாகும்,மேலும் நிறைய உண்மைகள் உண்டு.இதற்கு பரிகாரம்,இல்லறத்தில் ஈடுபடக்கூடாது.

snthlkmr said...

@செ.கதிர்வேலு "மேலும் நிறைய உண்மைகள் உண்டு" ??

snthlkmr said...

@செ.கதிர்வேலு
"மேலும் நிறைய உண்மைகள் உண்டு"" ??

babu said...

கச்சை தீவு ......கூர்மம், கச்சாலம், கச்சபம் எல்லாமே ஆமையோட சம்ஸ்கிருதப் பேரு. விஷ்ணு கூர்ம அவதாரத்துல சிவபெருமானை வழிபட்ட

babu said...

dear thozhi avarkaluku vanakam ,nane navapashanam patri 36 varudankal research seithu varukirane .thiru vanavan yogi avarkallum thankal karuthuku maruthu koorum attral ullavarkalum sirithu siddha maruthuvam
arinthavarkal thane thozhi avarkalayee.enathu sitrarivil pilai irunthal manithu thiruthi arulungal allathu yar siddha purusar kalaga irunthallum karuthu teriviyunkal
1.gouri(arsenic penta sulphide) 2.kenthi seelai(sakasthra vedi vaipu -pari pashai athaliyin pal,erukkampal,venkaru,each 1 ser venkaram-borax5palam,sulphur4palam,turisi -copper sulphate palam3,thalakam-arsenic sulphide palam 2 pal vitu araithu pandreenei 2 ser aya chattiyil ittu varuthu 8 samamvedai vitu duvala araithu vilai katti ulaiyil vaithu utha muthu pola vellai niramkidaikum = cobalt arsenic iron sulphide -mineral cobaltite,silvery white to white colour )3.mal devi(haritharam yellow tri sulphide of arsenic) 4.kachaalam(malachite green-copper carbonate hydroxideCu2CO3(OH)2)ammai oodu pola-kachaalam
5.vellai pashanam(arsenic tri oxide) vellai pathangam (long procedure)-6. thotti pashanam(nagam-zinc,ven vangam-white lead- velliyum,lingam-cinnabar mercuric redsulphide,thalakam-mono clinic arsenic sulphide,vediyuppu -kno3 pottasium nitrate strong oxidiser,alum-seenam ,ayeeyuda natham -sulphur,mercury,kantham-magnetic iron oxide all ven karuval atti ithu maraiporul all melted togetherin a closed seelai pudam and forms thotti)7.sutha pashanam-red oxide of mercury 8.sangu pashanam-manikaram,nimilai,pooneeru-,abiragam,karpoora alathee sudan-rasa karpooram,navacharam -NH4cl4 Ammonium chloride,vediyuppu,seenam all guru jeya neeral araithu
equal amount add white arsenic -vellai pashanam merpadi araitha viluthil kavasam itu uppu serthu closed containeril seelai man seithu yerika mattu elumbu pola katti kidaikum.all the eight material we should take as per panchabootha serkai allavukal then sathruval kondru mithruval ellupi kollungal ,that means all sulphides and metals are killed by magha thiravagam nitric acid and sulphate oxide formation taken place see no metals and no sulphides in the mixtures all converted to mavulike pasmam like salt nature .then ettutan ondru that is 9.siljithu -sila chathu it is a resinous material having more than 81 minerals inside it all 8 parts of mixtured killed salt we should add one equalpart of silachathu it is tar like binder it forms an amalgam of all the salt and start melts like tar road making then after pouring on a mold to make , making a statue structure it is hardened like a stone .navapashanakattu.
may i suggest you dear thozhi you can watch it in guru chalapathy siddhas video in you tube how he is making thiruvalluvar gnanavettiya "navaloga boobathy"pls watch linkbelow
https://www.youtube.com/watch?v=cx38UcwCR04
https://www.youtube.com/watch?v=vFrK0OryiIY
dear thozhi i may be wrong alsoif any suitable siddha pursa kan correct me may be further improve this.pls please read pashanam oonpathumayee urukiyee silayai varthu in boghars song and in pulipani song ettutane ondrum serthu in tha ondru mithru 8 sathru
i have strong belife pulipani only made navapashana silai on boghars samathi his song says that read it again still
13 sucessors of pulipanimath is in palani.
any controversialobjection any one can rise on my comments imay be very wrong alsobut i apreciate thozhi and her efforts to searching real navapashanam!!!!.regards,babu,sivakasi,tamilnadu, dgbabu_68@yahoo.co.in my skype pls add dgbabu

Post a Comment