பஞ்சபாஷாண லிங்கம்.

Author: தோழி / Labels: ,

பாஷாணங்களை சுத்தி செய்ததைப் பற்றி நேற்றைய பதிவில் பார்த்தோம். மிகவும் சிரமமான இந்த கட்டத்தில் தேறிவிட்டால் பாஷாணம் கட்டுவது அத்தனை சிரமமான காரியமில்லை. சுத்தி செய்யும் போது பாஷாணங்களின் எடையில் பெருமளவில் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. பரிசோதனையின் ஆரம்பத்தில் தலா நூறு கிராம் வீதம் ஐந்து பாஷாணங்களின் நிகர எடை ஐநூறு கிராம் இருந்தது. பரிசோதனையின் இறுதியில் முன்னூறு கிராம் அளவிலான பாஷாண லிங்கத்தினையே கட்ட முடிந்தது.

பாஷாணங்களின் விஷம் நீக்கி சுத்தி செய்து சேகரித்தாயிற்று.இனி அடுத்த கட்டமாய் சுத்தி செய்த இந்த பாஷாணங்களை குழம்பாக்குவதுதான். நவீன வேதி இயல் திடப் பொருள் ஒன்றை திரவமாக்க இரண்டு வழிகளை கூறுகிறது. ஒன்று திடப் பொருளை உருக்குவதன் மூலம் குழம்பாக்குவது, மற்றது ஏதேனும் ஒரு நீர்மத்தில் கரைப்பதன் மூலம் குழம்பாக்குவது.

போகரோ பாஷாணங்களை குழம்பாக்க பின்வரும் வழியைச் சொல்கிறார்.

"கண்டுபார் பாடாணக் குழம்பதனை
கனமான சதுரக்கள் ளிப்பாலிற்போட்டு
விண்டுபார் சாமந்தான் மூடிவைக்க
விடுபட்ட சுத்தசலம் போலேயாகும்
கொண்டுபார் சிறப்பான பாடாணந்தான்
கொடிதான அயச்சட்டிக் குள்ளேவைத்து
மண்டுபார் நாற்சாமம் சுருக்குப்போட
மகத்தான பாடாணம் குழம்பாமே."


- போகர் -

சதுரக்கள்ளிப் பாலில் பாஷாணத்தை போட்டு ஒரு சாமம் மூடிவைக்க பாஷாணமானது தெளிந்த நீர்மமாகும். பின்னர் அதனை அயச் சட்டியில் வைத்து நான்கு சாமம் சுருக்கு போட பாஷாணம் குழம்பாகும் என்கிறார்.

நானும் இந்த முறையில்தான் ஐந்து பாஷாணங்களையும் தனித் தனியே குழம்பாக்கிக் கொண்டேன். ஒரு வழியாக ஐந்து பாஷாணங்களையும் குழம்பாக்கிக் கொண்ட பின்னர், இவை ஒவ்வொன்றின் எடையினை சரி பார்த்து அதற்கேற்ப ஒவ்வொன்றிலும் இருந்து சம அளவு எடுத்து அவற்றை கலந்து பஞ்ச பாஷாண குழம்பினை உருவாக்கிக் கொண்டேன்.

இனி இந்த குழம்பை மெழுகு அச்சில் வார்த்து இறுக்குவது இறுதிக் கட்டம். கொழும்பு - 11ல் இருக்கும் செட்டி தெருவில்தான் இந்த மெழுகு அச்சு வாங்கினேன். அங்கே நிறைய தெய்வ வடிவங்களின் மெழுகு அச்சுகள் கிடைக்கின்றன. எதை வாங்குவதென திகைத்து கடைசியில் சிவலிங்க அச்சினை வாங்கி வந்திருந்தேன். அத்தனை வடிவான அச்சுக்கள் அங்கே கிடைக்கிறது.

இந்த அச்சில் பஞ்சபாஷாண குழம்பை வார்த்து சூரிய புடம் போட குழம்பானது இறுகி பாறை போலாகிவிட்டது. இப்போது நமது பஞ்சபாஷாண கட்டு கொண்டு உருவாக்கிய லிங்கம் தயார். கீழே படத்தில் இருப்பதுதான் இரண்டு மாத முயற்சியில் நான் உருவாக்கிய பஞ்சபாஷாண லிங்கம். சிறிய அளவில் இருக்கும் இந்த லிங்கத்தின் மகத்துவம் பெரியது.


இதனை வீட்டில் பிரதிஷ்டை செய்து வழிபடலாம். பெரிய அளவில் தயாரித்தால் கோவில்களில் பிரதிஷ்டை செய்யலாம். நமது பல கோவில்களில் உள்ள மூலவர்கள் இம்மாதிரியான மூலிகை மற்றும் பாஷாண கட்டுகளால் உருவாக்கப் பட்டவையே. அவற்றின் தகவல்கள் காலப் போக்கில் மறைந்து போய் விட்டதால் அவற்றின் சிறப்புகள் நமக்கு தெரியாமல் போய்விட்டது.

குறிப்பிட்ட ஊரில் உள்ள குறிப்பிட்ட கோவிலில் போய் வணங்கினால் குறிப்பிட்ட நோய்கள் தீரும் என்று சொல்வதன் பின்னனியில் இருப்பது இத்தகைய மருத்துவ தகவல்தான். அந்த மூலவரை அபிஷேகம் செய்த நீரையோ, பாலையோ பருகினால் நோய் தீரும் என்கிற அறிவியல் தகவல்கள் காலப் போக்கில் சடங்குகளாய், சம்பிரதாயங்களாய் தேய்ந்து போய்விட்டது.

அந்த வகையில் நாம் உருவாக்கிய இந்த பஞ்சபாஷாண லிங்கத்தையும் தினம் தோறும் அபிஷேகம் செய்து வழிபடலாம். அந்த அபிஷேக நீர்தான் மருத்துவ குணங்களை கொண்டது.தொடர்ந்து இந்த நீரை பருகி வந்தால் நமது உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலைப் பட்டு பிணிகள் அண்டாமல் வாழலாம் என்கிறார் உரோம ரிஷி.

இந்த லிங்கத்தை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் வைத்து வழிபடலாமாம். தூய இடத்தில் வைத்து “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை சொல்லி வழிபட்டு வந்தால் மன அமைதியும், கவனக் குவிப்பும் சித்திக்கும் என்கிறார் போகர்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

38 comments:

Shiva said...

குருவருளால் தங்களின் கடின முயற்சி வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் !
பஞ்ச பாஷணக் கட்டின் வெற்றியானது , அடுத்த முயற்சியான நவ பாஷாணக் கட்டின் துவக்கமாகட்டும்.
உங்களுக்கு வேண்டிய வசதி வாய்ப்புக்களும், உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டு , மேலான குருவின் அனுமதியும் கிடைக்குமானால் ,
உங்களால் நவ பாஷாணச் சிலையும் வடிக்க இயலும்.

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

கோவைக்கு அருகில் உள்ள வெள்ளளூரில் நவ்பாஷாண லிங்கக்கோவில் பிரபலமானது. அருமையான இயற்கைசூழலில் அமைந்துள்ளது.

தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Vijayakumar Venkatachalam said...

இந்த லிங்கம் அனைவருக்கு அருள் புரியட்டும்.

arul said...

excellent work friend

R.Puratchimani said...

அருமை....
இன்று முதல் நீங்கள் தோழிச்சித்தர் என்று அழைக்கப்படுவீராக :)

இன்பம் துன்பம் said...

தோழி மிகவும் அறிய தகவல்களை பதிவு செய்துள்ளிர்கள் பாரட்டுக்கள்.முடிந்ததால் எனக்கு ஒரு லிங்கம் கிடைக்குமா ? வாழ்க வளமுடன்,மென் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்

Kathir said...

மிக்க மகிழ்ச்சி தோழி . சிததர்கள் பதிவுகளுக்கு ஓர் நீரூபணம்.

" தெய்வதால் ஆகாதெனினும் முயற்ச்சி மேய் வருத்த கூலி தரும் "

தங்களது இந்த வெற்றி முதற் படிக்கட்டாகட்டும். தொடரட்டும் உன்களது ஆய்வு.

S.Puvi said...

ஆபத்தான முயற்சிகள்
ஆக்கபூர்வமான வெற்றிகள்
அனைத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

உங்க பதிவு சங்க காலத்துக்கே அழைத்து சென்ற பிரமை ஏற்படுத்துகிறது.. பகிர்வுக்கு நன்றி

SRIRAM said...

MY HEARTFUL WISHES FOR DHARSI GOD BLESS YOU

Inquiring Mind said...

உங்கள் எல்லா பதிவுகளுமே அருமை ஆகையால், இதை மட்டும் பாராட்டினால் பத்தாது.. உங்கள் முயற்சி பெரிய மாற்றங்களை உண்டு பண்ண போவது உறுதி.. இன்று எத்தனை பேருக்கு செய்முறை ஞானம் இருக்கிறது என்று தெரியவில்லை..

எப்பவும் போல், எனக்கு ஒரு சந்தேகம்.. சித்த வைத்தியத்தில், வழிபாட்டின் பங்கு என்ன.. உதாரணத்துக்கு, லிங்கமாக செய்து அபிஷேகம் பண்ணி, அதில் கலக்கும் பாஷாணங்களின் மூலம் குணமடைகிறோம் என்கிறீர்கள்.. லிங்கமால செய்யாமல், பொடியாக பண்ணி சிறிதளவு பாஷாணம் தினமும் சாப்பிட்டால், அதே பலன் கிடைக்குமா? இல்லை, பூஜை செய்யும் பொழுது, லிங்கத்தில் இருக்கும் மருந்தின் தன்மை மாறுமா?

tamilvirumbi said...

Dear thozi,

What a majestic look you have made in Pancha pashana Lingam!.While seeing,it creates
compassionate feelings in the heart.please do regular pooja with enchanting of Om Namachivaayaa.Thanks a lot.

வானவன் யோகி said...

அன்புத் தோழி,....
தங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கும் அதே நேரத்தில்...

தாங்கள் கொண்டிருக்கும் வாசகர் வட்டத்தில் நாம் சொல்வது தான் வேதம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளீர்களோ எனவொரு ஐயம்.

உதாரணமாக உரோமரிஷி மருத்துவ வாகடம் காட்டிய வழியில் செல்லாமல் தங்களுக்கு/தங்கள் குருவிற்குச் சரியெனத் தெரிந்த வழிகளில் தான் சென்றிருக்கிறீர்களே அல்லாது வாகடம் காட்டிய வழியில் செல்லவில்லை என்பது துணிபு..

முதலில் மேலே சொன்ன வழிமுறைகள் பரிபாசையாகக் கூறப்பட்டுள்ளது.
அதன் அர்த்தம் காணக் கிஞ்சித்தும் முயலாதது வருத்தத்திற்குரியது.

வாகடம் சொன்ன காமப்பால் கலசத்தில் வாங்கி,கருவான பூரணத்தையும் பூரத்தையும்,குருமருந்தாகிய முப்பூவையும் கலக்கி அதில் தோலயந்திரமாக எரித்து சுத்திக்கச் சொன்னதை மனம் போனபடி செய்து இதுதான் உண்மை எனக் காட்ட முயல்வதாகத் தெரிகிறது.

சுத்தியே சரியில்லாதபோது அதைக் குழம்பாக்கும் வழியும் தவறே என்பது துணிபு..

ஏனெனில் சதுரக்கள்ளிப் பால் என்பதும் பரிபாசையே தவிர கள்ளிப் பால் அல்ல என்பதும் துணிபு..

முதலில் நவபாஷாணம் ஒன்பது பாஷாணம் என்பதே பாமரர் வார்த்தை என அறியவும்

நவபாஷாணம் என்பது ஒன்பது பாஷாணங்களின் கலவை அல்ல என்பதை அகத்தியரின் பரிபாடைத்திரட்டு 500ஐ படித்துத் தெரிந்து கொண்டு எது நவபாஷாணம் என வாசகர்களுக்குச் சொல்லவும்..

மற்றபடி இதற்கு மேல் சொல்வது இயல்புக்கு மாறானது....

தங்களின் பல இடுகைகள் பாராட்டுக்குறியது எனினும்.....

நாம் கண்டதைத் தான் சித்தர்களும் சொல்லியுள்ளார்கள் என நினைப்பது நகைப்புக்குறியது...

உண்மையைக் கண்டறியும் நோக்கம் கொண்டவர் சித்தர்களின் மெய்ப்பொருளை உணராமல்/தேடாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம்
என நினைக்கும் சில குருக்களின் வழிச் செல்லாமல் உணமையான/மெய்ப் பொருளைப் பெற அகக் கண் திறந்து அருளாளன் அருள வாழ்த்துக்கள்.....

நீச்சல்காரன் said...

மரபு முறைகளை அறியத் தந்தமைக்கும், மூர்த்தியை தரிசிக்க செய்தமைக்கும் நன்றிகள்

தோழி said...

@வானவன் யோகி

அன்புடையீர்,

பாஷாணம் கட்டிய பரிசோதனைத் தொடரினை வாசித்து கருத்தெழுதியமைக்கு மிக்க நன்றி.மிக நீண்ட தகவல் சேகரிப்புக்குப் பின்னர், ஒன்றை மற்றதுடன் சரி பார்த்து தகவல்களையும், தேவையான சரக்குகளையும், செய்முறையினையும் ஒரு கோர்வையாக்கிய பின்னரே இந்த் முயற்சியில் இறங்கினேன்.

இந்த ஒன்பது மாத கால தகவல் சேகரிப்பை எல்லாம் நான்கு பதிவில் எழுதிக் காட்டி விளக்கிட முடியாது. அதற்கு எனக்கு அனுமதியும் இல்லை. உரோமரிஷி மருத்துவ வாகட நூலினை இந்த முயற்சியில் பயன் படுத்தியமையை சுட்டிக் காட்டிடவே அந்த பாடலை பதிவில் இடம் பெறச் செய்திருக்கிறேன்.

மற்றபடி உங்களுடைய அத்தனை துணிபுகளுக்கும் என்னிடம் பதிலிருக்கிறது. நுணுக்கமான அந்த விவரங்களை பொதுவில் வைக்கவோ அல்லது உங்களுடன் பகிரவோ எனக்கு அனுமதியில்லை.நான் எடுத்தாண்ட நூல்களின் பெயர்களை பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

மேலும் எனது பதிவில் எந்த இடத்திலும் இதுதான் முழுமையான பஞ்சபாஷாண லிங்கம் என மார்தட்டிக் கொள்ளவில்லை. என்னுடைய பரிசோதனை முயற்சி என்பதாகவே மொத்த செயல் முறையினையும் விளக்கியிருக்கிறேன்.

போகர் நிகண்டு, போகர் வைத்திய காவியம், போகர் 7000 நூலில் நவபாஷாணம் பற்றிய தெளிவான குறிப்புகள் இருப்பதை தாங்கள் மறந்து விட்டிருக்கக் கூடும். எந்தெந்த பாடல்களில் அவை இருக்கின்றன என்பதைக் கூட என்னால் சுட்டிக் காட்டிட முடியும். இருப்பினும் அதை தாங்களே தேடியுணர்ந்தால் மெய்ப்பொருள் விளங்கும்.

மேலும் அகத்தியர் பரிபாஷை 500 என்கிற நூலில் எந்த இடத்திலும் பாஷாணங்களைப் பற்றிய தகவல் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வேண்டுமானால் அகத்தியர் பரிபாஷை300 என்கிற நூலில் சில பாஷாணங்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன என்கிற தகவலையும் தங்களின் மேலான பார்வைக்கு வைத்திட விரும்புகிறேன்.

மீண்டும் ஒரு முறை தங்களின் மேலான அறிவுரைகளுக்கும்,கனிவான பாராட்டுதலுக்கும், அங்கதமான நகைப்புக்கும் மிக்க நன்றி.

Ashvinji said...

*அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்.*
மஹா கவி பாரதி சொன்ன புதுமைப் பெண்ணாக ஒரு சாதனைப் பெண்ணாக விளங்கும் தோழிக்கு வாழ்த்துக்கள். தோழி சமைத்த பஞ்சபாஷாண லிங்கத் திருமேனி தரிசனம் கண்டு மெய் சிலிர்த்தேன்.

ηίαפּάʞиίнτ ™ said...

வாழ்த்துக்கள் தர்ஷி.

Lingeswaran said...

கலக்கிபுட்டிங்க......எப்படி இருக்கீங்க?

Anonymous said...

தங்களின் பஞ்ச பாஷாண லிங்கமும், இரச லிங்கமும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எனினும் இறைவன் திருவருளும், இடைவிடா முயற்சியும் கொண்ட தங்களுக்கு எல்லாம் சாத்தியமே. சித்தர்கள் கூறிய மரணமிலாப் பெருவாழ்வுக்கும் முயற்சிக்கவும்.

வாழ்த்துக்கள் தோழி.

Rathnavel said...

வாழ்த்துக்கள்.

Jeyamaran $Nila Rasigan$ said...

நல்ல பதிவு தோழியே
Tecnoupdates

நிகழ்காலத்தில்... said...

இது இதுதான் தேவை.,

உங்களின் தொடர்ந்த முயற்சிக்கு பாராட்டுகள்.

வாழ்த்துகள் தோழி

இர.கருணாகரன் said...

அன்பு தோழிக்கு, வணக்கங்கள், வாழ்த்துகள்.

மேலதிக சாதனை ஸ்ரீ ஸ்ரீ பஞ்சபாஷாண லிங்கம் உருவாக்கம்.

இறையருளும் , மகாஸ்ரீ சித்தர்களின் பேரருளும் , அனுமதியும் இருந்தாலேயொழிய சித்திக்கும் வாய்ப்பே இல்லாத ஒன்றை உங்களால் செய்ய முடிந்துள்ளது எனில் இறையருளின் திருவருளின்றி வேறென்ன!!

தங்களின் பணி இனிதே சிறக்க இறைவனின் பேரருள் துணை..


அன்புடன்

Ramana.S said...

ellamvalla eraiyarulum, guruvarulum thunai nirka ventukenran..gurubhabam

Jeeva said...

Excellent! Please go ahead for next try.

Jeeva said...

Kindly Please try Navapaazhana Maariamman. Ohm sakthi.

கிருஷ்ணமூர்த்தி said...

மிகவும் அபூர்வ தொகுப்பு .
மிக பலரும் அறிய முடியாத இன்னும் சொல்லி புரிய முடியாத நுணுக்கங்களை சாதாரண வார்த்தைகளை கொண்டு தெளிவு படுத்தும் உங்கள் ஆசிவதிக்க பட்ட எழுத்துக்கு வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன் ,
சுகி ...

Kay said...

வாழ்த்துகள் தோழி! தங்கள் முயற்சி மேன்மேலும் வளர எனது வாழ்த்துகள்!

JILLU-nu ORU YUVA said...

VALTHUKKAL THOZLI :)

Ashok Kumar said...

@தோழி@வானவன் யோகி

நெத்தியடிதான் ..........

karurkirukkan said...

rare information , thx
http://www.facebook.com/karur.india

poomalai palani said...

அரிய பெரிய முயற்சி பஞ்ச பாசான லிங்கம் தயாரிப்பு பாராட்டுதலுக்குரியது. தங்களின் அரியசெயலால் பழனி முருகன் சிலைதான் ஞாபகம் வருகிறது
அன்பன்.வை.பூமாலை

nivash said...

unbelievable things.really super.thanks for your effort.
srinivasan

nivash said...

really super.thanks for your effort.

nivash said...

good

Mohanraj G said...

Hello Sir, Please refer to the following link to know about a Pashana Lingam temple in Vellore District, TN.
http://samiappapalanivelan.wordpress.com/2012/12/30/pashana-lingeswarar-thimiri/

Mohanraj G said...

http://samiappapalanivelan.wordpress.com/2012/12/30/pashana-lingeswarar-thimiri/

Thina Karan said...

அன்பு தோழிக்கு வணக்கங்கள்.

எனக்கும் சிவலிங்கம் வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனவே, தாங்ளால் தயாரிக்கப்படும் பஞ்சபாஷாண லிங்கம் கிடைக்குமா?

Post a Comment