கடுமையான விஷத் தன்மையுடைய பாஷாணங்களை சுத்தி செய்து அவற்றின் விஷத் தன்மையை நீக்குதலே இந்த பரிசோதனையின் முதல் கட்டம். இதுதான் மிகவும் கடினமானதும், கூட நிறைய நேரம் பிடிக்கிற செயல், அவசரத்தில் எதையும் செய்ய முடியாது. அவசரம் காட்டினால் முதலுக்கே மோசம் வந்து விடும். எனக்கு இந்த ஐந்து பாஷாணங்களை சுத்தி செய்து முடிக்க இரண்டு மாதம் பிடித்தது.
இந்த பாஷாண சுத்தி பற்றி உரோம ரிஷி அருளிய "உரோம ரிஷி மருத்துவ வாகடம்" நூலில் விரிவாக கூறப் பட்டிருக்கிறது. இதில் குறிப்பிட்டுள்ள முறைகளின் படியே பாஷாணங்களை சுத்தி செய்தேன்.
"ஆமப்பா இன்னமொரு கருவைக் கேளு
ஆதியென்ற பாசாணஞ் சுத்தி சொல்வேன்
சாமப்பால் ஒருகலசந் தன்னில் வாங்கி
கருவான பூரணமும் பூரஞ் செர்த்து
தாமப்பா குருவதனைக் கரைத்து நல்ல
தருவான பாசாணந் தன்னை வாங்கி
போமப்பா தோலாந்திர மாகக் கட்டிப்
பூரணமாஞ் சலந்தனிலே தூக்கி டாயே
தூக்கிடுவாய் நீர்வற்ற எரித்து நல்ல
சுத்தமுள்ள பாசாணஞ் சுத்தியாமே"
- மருத்துவ வாகடம்.
இனி ஒவ்வொரு பாஷாணமாய் சுத்தி செய்த முறையைப் பார்ப்போம்.
எலுமிச்சம் பழத்தின் உள்ளே கொள்ளும் அளவுக்கு அபிரக பாஷாணத்தை அடைத்து ஒரு புடமிட்டு எடுக்க அது சுத்தியாகியது. இந்த முறையில் தேவைக்கு ஏற்ப நிறைய எலுமிச்சம்பழங்கள் தேவைப் படும்.
கற் பாஷாணத்தை வேப்பங்காய்ப் பால், எருக்கம் பால் ஆகிய இரண்டையும் சம அளவில் கலந்து சுருக்கு கொடுக்க சுத்தியாகியது. இந்த முறையில் அளவுகள் சரியாக கவனிக்க வேண்டும்.
சூதப் பாஷாணத்தை வெள்ளெருக்கன் பாலில் ஒரு நாளும், அதன் பின் எலுமிச்சம் பழச்சாற்றில் ஒரு நாளும் ஊற வைத்து எடுத்து, காடி விட்டுக் கழுவி எடுத்து காய வைத்துக் கொண்டு, பின்னர் மெருக்கன் கிழங்கைத் துளைத்து அந்த துளையினுள் பாஷாணத்தை போட்டு அந்த கிழங்குத் துண்டாலேயே துவாரத்தை மூடி அதன் பின் பசுஞ் சாணத்தால் கவசம் போட்டு இலகு புடமிட்டு ஆறவைத்து எடுக்க சுத்தியாகியது. மிகப் பொறுமையும், நேரமும் எடுத்துக் கொள்ளும் செயல் இது.
சுண்ணாம்புக் கல்லின் நடுவில் குழியாக தோண்டி துத்தப் பாஷாணத்தை துணியில் முடிந்து குழியில் வைத்து மேலே சுண்ணாம்புக் கல்லால் மூடி, பனங்கள்ளு விட்டு ஒரு சாமம் இரு சாதி விறகால் எரித்து எடுக்க துத்தப் பாஷாணம் சுத்தியாகியது. இதில் நேரக் கணக்கும், மிதமான தீயில் விறகு எரிவதும் முக்கியம்.
ஒரு மண்சட்டியில் காடி, எலுமிச்சம் பழச்சாறு, புளிச்சக் கீரைச்சாறு இவை சமமாக கலந்து விட்டு, இதனுள் சீலைப் பாஷாணத்தை பட்டுதுணியால் சுற்றி முடிந்து போட்டு சிறுதீயில் எரித்து சுருக்கு கொடுக்க சீலை பாஷாணம் சுத்தியாகியது.
இப்படியாக ஐந்து பாஷாணங்களும் சுத்தி செய்து அவற்றின் விஷத் தன்மையை நீக்கி சேகரித்து பத்திரப் படுத்துவதற்குள் இரண்டு மாத காலம் ஓடி விட்டிருந்தது. இனி இவற்றை குழம்பாக்கி, மெழுகு அச்சில் வார்த்து இறுகச் செய்தால் பாஷாண கட்டு தயாராகி விடும்.
இந்த பரிசோதனையை செய்யும் போது அதனை இணையத்தில் வலையேற்றும் எண்ணம் இல்லாததினால் புகைப் படங்கள் ஏதும் எடுக்கவில்லை. இருப்பினும் பஞ்சபாஷாண கலவையைக் கொண்டு நான் கட்டிய பஞ்சபாஷாண சிவலிங்கத்தின் படத்தினை நாளைய பதிவில் வலையேற்றுகிறேன்.
Post a Comment



13 comments:
தரிசெனம் செய்வதற்கு ஆவலாக இருக்கோம்.
பகிர்வுக்கு நன்றி தோழி .
சிவ லிங்கம் பார்க்க நாளை வருகிறேன் தோழி .
தங்களின் செயல் பாராட்டத்தக்கது .
வெற்றி உண்டாக என் வாழ்த்துக்கள்
Dear thozi,
Really, you have done multiple processes to make
pancha pashanam.The way you have explained process is highly hazardous. I welcome your daring attempt. Thanks a lot.
பஞ்சபாஷாண சிவலிங்கம் காண ஆவலாதகத்தான் உள்ளது. எதிர்பார்க்கிறோம் நாளை?
ஆபுர்வமான தகவளினை பகிர்ந்து கொள்வதர்க்கு மிகவும் நன்றி...
நன்றி தோழி,
கொஞ்சம் ரிஸ்க உள்ள விளையாட்டுத்தான் - வெற்றிபெற்றுவிட்டிர்கள் . - வாழ்த்துக்கள்.
எலுமிச்சம் உள்ள கொள்ளும் அளவுக்கு ?
சுருக்கு கொடுக்க - என்றால் என்ன ?
முயற்ச்சியின் தொடர்ச்சி பதிவுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்
விவரணைகள் சுவாரஸ்யமாக உள்ளன. நவபாஷாணத்தில் சமைத்த சிவலிங்கத்தை காண ஆவலாக இருக்கிறேன்.
உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்
குருவருள் இருப்பின் கோடி நம்மையும் கூடி வரும் ...
congrats.
to continue
Post a Comment