கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் எழுதிய இந்த பதிவுதான் இந்த சோதனை முயற்சியின் ஆரம்பப் புள்ளி. எத்தனை நாளைக்குத்தான் வெறுமனே வாசிக்கவும் அவற்றை குறிப்பெடுத்து வலையில் பகிர்வதுமாய் இருப்பது, நாமும் நம்மாலான ஏதேனும் பரிசோதனைகளை செய்து பார்த்தாலென்ன என்று தோன்றியதன் விளைவே இந்த முயற்சி. நிச்சயமாக இது ஒரு தற்பெருமை பதிவல்ல... ஆர்வமிகுதி அல்லது ஆர்வக் கோளாறில் செய்து பார்த்த ஒரு பரிட்சார்த்த முயற்சி.
பாஷாணங்க்ள் என்பவை கடுமையான விஷத் தன்மை உடைய மூலகங்கள் என்றும் அவை இரண்டு வகைப் படும் எனவும் அந்த பதிவுகளில் பார்த்தோம். மேலும் விளக்கம் வேண்டுமெனில் அந்த பதிவுகளை வாசித்து விட்டு தொடரவும்.
சித்தர் பெருமக்கள் கடுமையான விஷத் தன்மையுடைய இந்த மூலகங்களை சுத்தி செய்து விஷம் நீக்கி அவற்றை மருந்தாக தயாரித்து பயன் படுத்தினர். தற்போதைய நவீன அறிவியலும் கூட இப்படி விஷத்தை மருந்தாக மாற்றி பயன்படுத்துகிறது. இந்த பாஷாணங்களை சுத்தி செய்து அவற்றின் விஷத் தன்மையை நீக்கி அவற்றை ஒன்றோடு ஒன்றாக இணைப்பதையே பாஷாணம் கட்டுதல் என்கின்றனர். இப்படி செய்யும் போது உருவாகும் பாஷாண கட்டு மிகுந்த மருத்துவ குணமுடையதாகிறது.
பழனியில் உள்ள மூலவர் தண்டாயுதபாணியின் சிலை ஒன்பது வகையான பாஷாணங்களினால் கட்டப் பட்டது என்பது நாம் அறிந்ததே. அந்த சிலையின் அபிஷேக நீர் பல மருத்துவ குணங்களைக் கொண்டது என்பதன் பொருட்டே அந்த மூலவரின் பின் புறம் சுரண்டப் பட்டு விட்டதால் தற்போது அந்த மூலவருக்கு அபிஷேகம் எதுவும் செய்வதில்லை.
சரி நாமும் பாஷாணம் கட்டிப் பார்ப்போம் என கடந்த வருடம் அக்டோபர் மாதமே குருநாதரிடம் கோரிக்கை வைத்தும் அவரின் ஒப்புதல் இந்த வருட மே மாத இறுதியில்தான் கிடைத்தது. இதற்கிடையில் எனது தேர்வுகள் வேறு முடிந்திருந்தன. இது ஒரு புறமிருந்தாலும் வீட்டில் அம்மாவிடம் அனுமதி வாங்குவதற்குள்தான் போதும் போதுமென்றாகி விட்டது. அம்மாவின் தயக்கத்திற்கு காரணங்கள் உண்டு. தன் சிறு வயதில், எனது பாட்டனார் மருத்துவ தேவைக்காக பாஷாணங்களை வீட்டில் புடமிடுவதை நேரில் பார்த்தவர் அவர். பாஷாணஙகளை புடமிடும் போது அவற்றில் இருந்து தீவிரமான நச்சு வாயுக்கள் வெளியேறும். அது புடமிடுபவரை கடுமையான மயக்கத்துக்கு ஆட்படுத்தி விடுமாம். இந்த எதிர்மறையான விளைவுகளை நினைத்தே அம்மா தயங்கினார்.
மருத்துவ கல்லூரியின் பரிசோதனைக் கூடங்களில் நாங்கள் பயன்படுத்தும் நச்சுவாயு தடுப்புக்கவசம் (Face Gas Mask) ஒன்றினை கொண்டு வந்து காட்டி அதன் அமைப்பு பயன்பாடு பற்றி எல்லாம் அம்மாவிற்க்கு விளக்கிய பின்னர் அரைகுறை மனதுடன் சம்மதித்தார். அதன் பிறகே மளமளவென தகவல் சேகரிப்பினை ஆரம்பித்தேன். இரண்டு வகையான பாஷாணங்கள் இருப்பதைப் பற்றி முனன்ரே கூறியிருக்கிறேன். ஒன்று இயற்கையாக கிடைக்கக் கூடியது “பிறவிப் பாஷாணம்” மற்றது செயற்கையாக உருவாக்குவது “வைப்புப் பாஷாணம்”. செயற்கையாக உருவாக்குவதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் இயற்கையான பாஷாணங்களை பயன் படுத்துவது என தீர்மானித்தேன். அதிலும் எந்த பாஷாணஙக்ளை தெரிவு செய்வது என்பதில் குழப்பம் வந்தது. ஏனெனில் 32 வகையான பிறவிப் பாஷாணங்கள் இருக்கின்றன.
இதற்கு “உரோமரிஷி மருத்துவ வாகடம்” என்ற நூல் துணைக்கு வந்தது. சிலை செய்வதற்கு பயன் படும் சிறப்பான ஐந்து பாஷாணங்களின் தகவலை இங்கிருந்தே பெற்றேன். ஆக நாம் இப்போது ஐந்து பாஷாணஙக்ளை கட்டுவது என தீர்மானத்திற்கு வந்தாயிற்று. அந்த ஐந்து பாஷாணஙக்ள் இவைதான்...
அபிரகப் பாஷாணம்.
கற் பாஷாணம்.
சூதப் பாஷாணம்.
துத்தப் பாஷாணம்.
சீலைப் பாஷாணம்.
இவற்றில் சூதப் பாஷாணமும், துத்த பாஷாணமும் எங்கள் கல்லூரி மருத்துவ கூடத்திலேயே இருக்கிறதால், அதன் பொறுப்பாளரை கேட்டு என் தேவைக்கு கொஞ்சம் வாங்கிக் கொள்வதில் சிரமம் இருக்கவில்லை. மற்ற மூன்று பாஷாணங்களை திரட்டுவதற்குள் தலைசுற்றி கிறுகிறுத்தே போயிற்று. குருவருளின் துணையினால் கற்பாஷாணத்தை மட்டக்களப்பில் இருக்கும் என் தோழி ஒருத்தியின் மூலம் பெற்றுக்கொண்டேன்.
அபிரகப் பாஷாணம் மற்றும் சீலைப் பாஷாணம் கடையில் வாங்க வேண்டியிருந்தது. இதில் அபிரகப் பாஷாணம் ஒரு கிராம் 60/= ரூபாய்க்கும், சீலைப் பாஷாணம் ஒரு கிராம் 54/= க்கும் என தலா 100 கிராம்கள் வாங்கி கொண்டேன். இதற்கே மொத்தமாக 11400/= ரூபாய் ஆயிற்று. தலை சுற்றலுக்கான காரணம் இதுதான்.
ஒரு வழியாக ஐந்து பிறவிப் பாஷாணங்களை சேகரித்தாயிற்று. இனி இவற்றை ஒவ்வொன்றாக சுத்தி செய்து அவற்றின் விஷத் தன்மையை நீக்க வேண்டும். அதன் பின்னர் இந்த பாஷாணஙக்ளை தனித் தனியே குழம்பாக்கி சம அளவில் கலந்து மெழுகு அச்சில் வார்த்து இறுகச் செய்தால் பஞ்சபாஷாண கட்டு தயார்.
இத்தனை எளிதாய் சொல்லிவிட்ட இந்த செயல்முறைகளை எப்படி செய்தேன் என்பதை நாளைய பதிவில் பார்ப்போம்..
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
28 comments:
களத்தில் இறங்கிவிட்டீர்கள்.
சித்தர்கள் அருளினால் கிடைத்த வெற்றியை காண காத்திருக்கிறேன்...
வாழ்த்துகள் தோழி
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி
முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி..
உங்கள் முயற்சி வெற்றி பெற
இறைவனை வேண்டுகிறேன் ....
தோழி !!
ஆஹா. அருமை. பாஷாணக் கட்டை, படத்துடன் போடுங்க. முடிஞ்சா உங்க படமும் போடுங்க. :)
சபாஷ் !!
உங்கள் ஆர்வத்துக்கு நன்றிகள் பல. வெற்றி தொடரட்டும்.
செய்முறையெல்லாம் செய்றீங்க, நல்லது. வீட்டுல ஆய்வு சாலை வைச்சுருக்கீங்க போல.
Hi Thozhi...
Really wonderfull :)
Definitely you have siththrgal blessings, without that you cannot even do this.. Some super power would have stopped you if not.. amazing... You are really really blessed. Even i feel jealous of you ;) I wish even all of the readers of this blog, would get blessings like you. Congradulations :)
பாஷாணக் பற்றி அருமையாக சொன்னீர்கள் விலை தான் அதிகமோ.... பதிவு அருமை வாழ்த்துக்கள் தோழி...
Hi Thozhi...
I have a doubt... Nowadays there are lot of people who teach Yoga with different maharishi name... Are they all the true yoga?
Have any siththargal told about the actual yoga.... ?
Hi Thozhi...
I have another doubt... Why can't a women be a siththar? If they are there, why they are not famous as male siththargal?
Hi Siththargal...
If they live in forest only they can be siththargal or what? Can't a normal person be a siththar? Then all should be in forest only... Or God expects like that only? If so the present forests, mountains will not be enough...
Hi Thozhi...
I have more other doubts too... If you come across any answer for these questions i mentioned earlier plz let us know...
Hi Thozhi...
Convey my wishes to your parents too... Because without their support you could have not achieved this PASHANA KATTU test. Your whole family is really blessed...
@jagadeesh ஒரே நேரத்துல ரெண்டு பாஷாண படம் கேக்காதீங்க.
உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள் :)
தயக்கம் / சிரமம் எல்லாம் எதிலும் ஆரம்பத்தில் தான் வரும் .
ஒன்றினைப் பரிசோதித்து வெற்றி கண்டு விட்டால், இனி அடுத்தடுத்த பரிசோதனைகள்
செய்யவே நம்மைத் தூண்டும். தங்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துக்கள்
super sister!!
சித்தர்கள் அருள் இருந்தால் அனைத்தும் சாத்தியமே ..................
உங்கள் முயற்சி வெற்றி பெற்றதை அறிய ஆவலாய் இருக்கிறோம்.....
ஒரு கல்லூரி மாணவிக்கு சித்தர்கள் நூல்களில் ஈடுபாடு வந்ததே பெரிய விஷயம். இதில் ஆராய்ச்சி வேறா? அருமை தோழி. நல்ல வேலை நீங்கள் தமிழ் நாட்டில் பிறக்கவில்லை. இங்கே இருந்திருந்தால் இந்த ஈடுபாடு வந்திருக்கமா என்பது சந்தேகமே.
அரிய முயற்சிக்குப் பாராட்டுக்கள். வெற்றி பெற் வாழ்த்துக்கள்.
செயற்கரிய செய்வார் பெரியர்.
செயற்கரிய செய்யும் தோழி உங்களைப் பாராட்டி வணங்குகிறேன்.
Dear thozi,
You have been blessed in disguise.I pray the Al-mighty to show His blessings upon to succeed in your attempts.Thanks a lot.
அருமை ,கடின முயற்சி .
தளரா முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழி
தங்கள் எடுத்து கொண்ட முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.
சித்த மருந்துவம் நமக்கு மறுபடி முழுமையாக கிடைத்தால் அது மனித குலத்திற்கு கிடைத்த மிக பெரிய வரபிரசாதம்
Guru Arun Unakku paripooram panja paasaam mattum alla nava paasanamum unakku vasappadum magale
anbudan
paramasivam
paripoorana aasigal
தோழி இங்கே தமிழ் நாட்டில் எல்லாம் நீங்கள் கேட்கும் பாசானம் விலை குறைவு தான் , யாராவது வந்தால் நான் கொடுத்து அனுப்ப தயார் நீங்கள் விரும்பும் பட்சத்தில்
Post a Comment