நன்றி நண்பர்களே!

Author: தோழி / Labels:

சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவின் ஐநூறாவது பதிவு இது. பதினெட்டு மாதங்களில் இந்த எண்ணிக்கை நமக்கு வாய்த்திருக்கிறது. ஆயிரத்தி இருநூறுக்கும் மேற்பட்ட நண்பர்கள் உடன் வர,ஆயிரம் பேருக்கு மேல் தினமும் வாசிக்கிற ஒரு தளமாக நமது வலைப்பதிவு வளர்ந்திருக்கிறது. தொடர்ச்சியாக நீங்கள் அளித்து வரும் அக்கறையினாலும், ஆதரவினாலும், ஆர்வத்தினாலுமே இத்தனையும் சாத்தியமாற்று.

அத்தனைக்கும் நன்றி நண்பர்களே!

இந்த பதிவின் மூலமாய் என்னுடைய தனிப்பட்ட சில எண்ணங்களை, விளக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முதலில், பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் உங்களில் பலரும் குறிப்பிடுகிற மாதிரி, நான் சித்தரியலில் ஊறித் திளைத்த பண்டிதை எல்லாம் இல்லை. இன்னமும் நேராய்ச் சொல்வதானால் கடந்த மாதம் மருத்துவ கல்லூரி படிப்பை முடித்து, இப்போது பயிற்சி மருத்துவராய் பணியாற்றத் துவங்கி இருக்கும் சிறு பெண். நீங்கள் எனக்கு அளிக்கும் அத்தனை பாராட்டுதலுக்கும் சொந்தமானவர் எனது மேலான குரு அகத்தியர் மட்டுமே.

இங்கே பகிரப்படும் தகவல்கள் தங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பயனளித்திருப்பதாக பலரும் மின்னஞ்சல் மூலமாய் நன்றி தெரிவித்திருந்தனர். அதிலும் குறிப்பாக இரண்டு சகோதரிகள் சித்தர் பெருமக்களின் வழிமுறைகளை கடை பிடித்ததன் மூலமாய் தாய்மைப் பேறு அடைந்ததாய் குறிப்பிட்டிருந்தனர். மிகவும் பெருமிதமாய் உணர்ந்த தருணங்கள் அவை. நம் முன்னோரின் தகவல்களை தேடித் திரட்டி பகிர்வது மட்டுமே எனது செயல், அதன் உள்ளார்ந்த பெருமையும் புகழும் அவர்களுக்கேயானது. நேரமின்மையினால் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கவில்லையே தவிர வேறொன்றும் காரணமில்லை.

ஒரு சிலர் இங்கு பகிரப்படும் தொடர்களில் தகவல்கள் முழுமையாக இல்லாததைப் போல தோற்றம் தருவதாக கூறியிருந்தனர். அவற்றை நான் மறுக்கப் போவதில்லை. ஏனெனில் நான் சேகரித்த தகவல் குறிப்புககளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக மட்டுமே இந்த வலைப் பதிவினை துவங்கினேன். இந்த தகவல்களின் மீது தீர்க்கமாய் ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிட நிறைய உழைப்பும், நேரமும் தேவைப்படும். தற்போதைய எனது படிப்புச் சூழலில் அது சாத்தியமே இல்லை. இருந்த போதிலும் படிப்பின் ஊடாக எஞ்சுகிற மேலதிக நேரத்தில் தொடர்களை முடிந்தவரையில் முழுமையாகவும் சிறப்பாகவும் தர முயற்சித்திருக்கிறேன். குருவருளின் துணையோடு தொடர்ந்தும் முயற்சிப்பேன்.

மேலும் இதுவரை எழுதிய எல்லா தொடர்களிலும் உள்ள தகவல்கள் எந்த நூலில், எந்த பாடலில் இருந்து எடுத்தாண்டிருக்கிறேன் என்ற தகவலை விரிவாகவே தந்திருக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் குறிப்பிட்ட அந்த நூலினை வாங்கி வாசித்தோ அல்லது தொடர்புடைய தகவல்களை தேடிப் பெற்றோ தெளிய வாய்ப்பிருக்கிறது. சித்தர் பெருமக்களின் பல ஆயிரம் பாடல்களின் ஊடே பயணித்து தகவல்களைத் திரட்டுவது என்பது தன்முனைப்பும், கவனக் குவிப்பும், மிகுதியான நேரமும் எடுத்துக் கொள்கிற கடினமான வேலை என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

என்னை விட பெரியவர்கள் எல்லாம் இங்கே இனையத்தில் சித்தர்களின் அருமை பெருமைகளை தொடர்ந்து எழுதி வருகின்றனர். ஐயா திரு.ஞானவெட்டியான், திருமிகு.சாமி அழகப்பன் போன்றவர்களின் அறிவு, திறமை மற்றும் அனுபவத்தை ஒப்பிடுகையில் நான் அவர்களின் பேத்தி/மகளுக்கு இணையானவள்தான். தொடர்களில் உள்ள தகவல்களின் மீது மேலதிக விளக்கங்கள் தேவைப் பட்டால் இம்மாதிரியான பெரியவர்களை அணுகிப் பணிந்து விளக்கமும், தெளிவும் கேட்டுப் பெறலாம். சித்த நெறியில் தம்மை அர்ப்பணித்து வாழும் இந்த பெரியவர்கள், தங்களுக்கு நேரமிருந்தால் நிச்சயமாய் தேவையானவர்களுக்கு உதவிடுவார்கள்.

முழுமையான தகவல்கள் இல்லை எனச் சிலர் குறைபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இன்னொரு பக்கம் இந்த தகவல்களை எல்லாம் இப்படி பொதுவில் வெளியிடக் கூடாது. ஏன் வெளியிட்டாய்?, யாரைக் கேட்டு வெளியிட்டாய்?, இவை எல்லாம் பரம ரகசியம் உனக்கு சாபம்தான் கிடைக்கும் என கண்டிப்பும், மிரட்டலும் காட்டுகிற பலரை எதிர் கொள்ள வேண்டியிருப்பதையும் நான் இங்கே சொல்லியாக வேண்டும்.

அதிலும் இவர்களில் சிலர் தங்களைத் தாங்களே சித்தராக பிரகடனப் படுத்திக் கொண்டு மிரட்டலும், உருட்டலும் செய்வதுதான் வேடிக்கை. முப்பத்தி ஆறு வகையான தத்துவங்களை உணர்ந்து தெளிவதே சித்த நிலை. இத்தகைய மேலான சித்த நிலையை அடைந்தவர் எவரும் தங்களை சித்தனென சொல்லிக் கொள்வதுமில்லை. அடுத்தவர்கள் தம்மை அப்படி அழைக்க வேண்டுமென விலாச அட்டை வைத்துக் கொண்டு திரிவதுமில்லை. இந்த அடிப்படையைக் கூடத் தெரியாத பல அருட் சித்தர்கள் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கொடுமையிலும் கொடுமை.

காவியும், கமண்டலமும் தரித்து மொட்டைத் தலையோடு தன்னை சுவாமி என்று கூறிக் கொள்கிறவர்களுக்கே இன்று மரியாதையும், மாலையும் கிடைக்கிறது. அத்தகையவர்கள் சொல்வதைக் கேட்கவும், அவர் பின்னால் நின்று தங்களை தூய்மையானவர்களாய் காட்டிக் கொள்ள பிரியப் படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவர்களைப் பற்றியும், இவர்கள் என்ன ஆவார்கள் என்பதைப் பற்றியும் சிவவாக்கியர் இப்படிச் சொல்கிறார்.

யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.


இத்தனை கடுமையான வார்த்தை பிரயோகத்தில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. எனினும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில்தான் நமது ஆதங்கங்களை இறக்கி வைத்திடமுடியும் என்பதால் மற்றவர்கள் பொருத்தருள வேண்டுகிறேன்.

மீண்டும் ஒரு தடவை அந்த நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்... நான் எதை எழுதுவது, எதை விலக்குவது என்பதை எனது மேலான குருநாதர் மட்டுமே தீர்மானிக்கிறார். எனது ஒவ்வொரு இடுகையும் குருநாதரின் மேலான கவனத்தில் வைக்கப் பட்ட பின்னரே வலையேறுகிறது. சமயங்களில் ஆர்வ மிகுதியினால் சிலவற்றை வலையேற்ற நான் முனைந்தும் அவை முடியாமல் போயிருக்கிறது. இதற்கு சமீபத்தைய உதாரணம் காந்தங்களைப் பற்றிய தொடர். மிகுந்த சிரமங்களின் ஊடே திரட்டிய தகவல்களை என்னால் பகிர முடியாமல் போனது. இது மாதிரி பல அனுபவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

காலத்தே மறைந்து போன பல அரிய நூல்களை இனி நாம் திரும்ப பெற முடியாதுதான். ஆனால் நம் கையில் எஞ்சியிருக்கும் நூல்களையாவது இம் மாதிரியான ஊடகத்தில் பகிர்வதன் மூலம் சித்தரியல் மீதான விழிப்புணர்வினை உண்டாக்க முடியும். இதை அரசும், நிறுவனங்களும்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. நம்மைப் போல சாமான்யரும் கூட செய்திட முடியும்.அந்த பயணத்தில் ஒரு சிறு முயற்சிதான் இந்த சித்தர்கள் இராச்சியம். இதன் வளர்ச்சி அல்லது பரவல் இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம்தான் இருக்கிறது. ஆர்வமுள்ள மற்றவர்களோடு இந்த தகவல்களை பகிர்வதன் மூலம் நம் முன்னோர்களின் அறிவையும், தெளிவையும் சக மனிதரின் வாழ்க்கைக்கு பயனாக்கக் கூடிய வாய்ப்பினை உருவாக்கிடலாம்.

எனது மொழியில், கருத்தில், புரிதலில் பிழையேதும் இருந்தால் அவற்றைத் திருத்தி என்னை நல்வழி நடத்திடுமாறு வேண்டுகிறேன். தொடரும் ஆதரவிற்கும், அக்கறைக்கும் மிகுந்த நன்றிகளை மீண்டும் ஒரு தடவை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளைய பதிவில் என்னுடைய சோதனை முயற்சி ஒன்றினை பகிர்ந்து கொள்ள் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாய் செய்த பரிசோதனை அது, விஷத்தோடு விளையாடிய விளையாட்டு என்று கூடச் சொல்லலாம்.

விவரங்கள் நாளைய பதிவில்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

51 comments:

நிகழ்காலத்தில்... said...

மனமார்ந்த வாழ்த்துகள் தங்களின் ஆர்வம் சாதரணமானதல்ல. ஏதோ விட்ட குறை, தொட்ட குறை என்று சொல்வார்களே அதுபோலத்தான்.,

சகோ.சித்தர்களின் கருத்துகளை புரிந்து கொண்டு பகிர்வதே பெரிய விசயம்தான். இந்த அரிய பணியை செய்து வரும் தங்களை மனமார வாழ்த்துகிறேன்.

பணி தொடரும்.

Vijayakumar Venkatachalam said...

உங்களது பயணம் இனிதே தொடரட்டும். வாழ்த்துக்கள்.

சின்னப்பயல் said...

உங்கள் பணி தொடர குருவருளை வேண்டுகிறேன்..

Nandha said...

500 பதிவுகள் கண்ட சித்தர்கள் ராஜ்ஜியம் தளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .எல்லாம் வல்ல குருவின் அருள் என்றும் என் தோழிக்கு துணை நிற்கும்

R.Puratchimani said...

உங்கள் சித்தர் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழி

karpagamravi said...

தோழி தாங்கள் சில வேதனைகளை
பகிர்ந்து கொண்டீர்கள்.
சித்தர்கள் பலரும் கடுமையான
இன்னல்களுக்கு பின்னர்தான்
சித்திபெற்றார்கள்.ஆனால்நமக்குஅது
கடுகலவுதான்.இறைவன்அருள்
நமக்கு கிடைக்கும் பணிதொடரட்டும்
வாழ்த்துக்கள்.
ரவி

karpagamravi said...

@R.Puratchimani

karpagamravi said...

தோழி தாங்கள் சில வேதனைகளை
பகிர்ந்து கொண்டீர்கள்.
சித்தர்கள் பலரும் கடுமையான
இன்னல்களுக்கு பின்னர்தான்
சித்திபெற்றார்கள்.ஆனால்நமக்குஅது
கடுகலவுதான்.இறைவன்அருள்
நமக்கு கிடைக்கும் பணிதொடரட்டும்
வாழ்த்துக்கள்.
ரவி

chandru2110 said...

மக்களுக்கு தாங்கள் அளித்த சேவைக்கு பாராட்டுக்கள். தன்னலமில்லா, செருக்கில்லா சேவையை தொடர வாழ்த்துக்கள்.

agamudali said...

நன்றி தோழி,

தங்கள் பணி மேலும் தொடர ஐயன் அகத்தியர் அருளட்டும்.

வாழ்க வளமுடன்,
அகமுதலி.

Netrikkan said...

வாழ்க! வளமுடன்!!.

என்றும் அன்புடன்,
அழகிரி........

சி.பி.செந்தில்குமார் said...

500 க்கு வாழ்த்துக்கள்.. விஷப்பரீட்சைன்னா என்ன? பிளாக்கை க்ளோஸ்? ஹி ஹி

Rathnavel said...

மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
நான் தற்போது தான் படிக்க ஆரம்பித்தேன்.
பழைய பதிவுகளை தேடிப் படிக்கிறேன்.
நன்றி அம்மா.

சி.பி.செந்தில்குமார் said...

இந்தப்பதிவுல பல உள் குத்துக்கள் இருக்கே? ம் ம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த டெம்ப்ளேட் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு!

ஈஸ்வரி said...

//விஷ‌த்தோடு விளையாடிய விளையாட்டு//
படிக்க காத்திருக்கிறோம்.

திருமாறன் said...

தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். இறையருள் துணை நிற்கும்.

T. SUMANENTHIRAN said...

நல்லது சகோதரி, நீங்கள் கூறியது போல் சித்தர்கள் ஆசியில்லாது இவற்றை வெளியிட இயலாது, தங்களது மேலான சமூக அக்கறை சித்தர்களாலேயே வழி நடாத்தப்படுகிறது என்பதற்கு தங்களது இவ்வளவு வாசகர் வட்டமும், 500 பதிவுகளுமே சான்று, சித்தர்களிடம் சரண் புகுந்தவர்களது சித்தம் சித்தர்களாளேயே வழி நடாத்தப்படும். எல்லாம் வல்ல குருதேவர் அகத்தீசரின் அருளாசியோடு வாலைத்தாய் உங்களுக்கு சித்தர் வழி நின்று இவ்வுலகிற்கு சேவை செய்ய அருளாசி வழங்கட்டும். பணி தொடரட்டும்!

kiruba said...

நல்வாழ்த்துக்கள் தோழி :))

Shiva said...

தங்களின் தன்னிலை விளக்கம் சிறப்பாக உள்ளது. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

-கிமூ- said...

குறள் 611:

" அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்."

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

உங்களிடம் தளராத முயற்சி இருக்கிறது + சித்தர்களின் ஆசியும் இருக்கிறது .

வாலை பெண் துணையாக வர வேண்டிகொள்கிறேன் .

நீங்கள் வளர - வலைபூ மேலும் மலர என் வாழ்த்துக்கள் .

மாய உலகம் said...

தங்களது 500வது வெற்றிகரமான தரமான ஆன்மீக பதிவிற்கு நன்ற்ளுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

மச்சவல்லவன் said...

வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

இந்த பதிவில் தாங்களைப்பற்றி சிறு குறிப்பு வெளியிட்டு உண்மையான பகிர்வுகளை வெளியிட்டமைக்கு நன்றி... தங்களது இந்த சிறந்த தேவையினை தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க எல்லாம் வல்ல இறைசக்தி துணையிருக்கட்டும் கூட இந்த சாதாரண வாசகனின் நன்றியுணர்வோடு வாழ்த்துக்கள்.....

Ashvinji said...

திருவருளும் குருவருளும் மேலும் பல செய்திகளை பதிவிட தோழிக்கு துணை நிற்க பிரார்த்திக்கிறேன். வாழி நலம் சூழ. சிவனருள் பொலிக.

Praveen Kumar said...

அகத்தியர் துணை

viswam said...

வணக்கம். மருத்துவப் படிப்பை நல்லமுறையில் முடித்து பயிற்சி மருத்துவராய் ஆனதற்கு முதலில் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சின்ன வயதில் இவ்வளவு தூரம் சித்தர்கள் பற்றி ஆராய்ந்து மிக எளிமையாக பதிவுகள் இட்டமைக்கு கடவுள் அனுக்கிரகம் பூரணமாக இருந்தால் மட்டுமே சாத்தியம். தாங்கள் மேன்மேலும் பேரும் புகழும் அடைந்து சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.

M.R said...

500 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் தோழி .

தங்களின் பதிவின் பயணம் தொடர வாழ்த்துக்கள் .

காத்திருக்கிறோம் பல தகவல் அறிய .

நன்றி தோழி

சாமீ அழகப்பன் said...

அன்புள்ள தோழி அவர்களுக்கு,
எனது வலைப்பூவின் பார்வையாளர்கள் எண்ணிக்கை திடீரென உயர்ந்துவிட்டதன் காரணம் உங்கள் வலைப்பூவை பார்த்தவுடன்தான் தெரிந்து கொண்டேன்.உங்கள் பாராட்டு என்னை வெட்கி தலைகுனிய வைத்துவிட்டது. என்னைவிட திறம் வாய்ந்தவர்களும் இருக்கிறார்கள் குடத்தில் இட்ட விளக்காக.

///வணக்கம் சாமீ உங்களை பற்றி தோழி பதிவில் படித்தேன். வாழ்த்துக்கள் எனக்கு சில தெளிவுகள் வேண்டும் உதவ முடியுமா///

என்று ஒரு அநாதி எனது வலைப் பூவில் கருத்துரையிட்டிருந்தார். அதன்மூலமும் எனது வலைப்பூ இணைப்பை வெளியிட்டிருக்கிறீர்கள் என்று நான் புரிந்து கொண்டேன்.

உங்கள் 500 ஆவது பதிவு ஒரு இமாலய சாதனை.
உங்கள் விடாத முயற்சியின் மூலம் எதுதான் ஜெயம் ஆகாது.பல குப்பை வலைப்பூக்களுக்கு இடையே அருமையான நவரத்தினங்களும் கிடக்கத்தான் செய்கின்றன.அது போன்ற உயர்ந்த ரத்தினம் உங்கள் வலைப்பூ.
இது போன்று வேறெதிலும் கவனம் சிதறாது சித்தர்கள் நூல்களையே கொடுத்து வரும் உங்கள் பணி பாராட்டத் தக்கது.வாழ்க உங்கள் தொண்டு.வளர்க உங்கள் புகழ்.இறையருள் பொங்கட்டும்.மக்கள் தொண்டே மஹேசன் தொண்டு.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Right Angle said...

/** யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே
**/

எனக்கு இங்கு ஒரு சந்தேகம்.. சித்தர்கள் காமமே கூடாது என்று சொல்கிறார்களா? இந்த பாடல் யாரை குறிப்பாக சாடுகிறது? பொது மக்களையா, இல்லை, சித்து ரகசியங்களை தவறாக பயன்படுத்துவர்களையா?

கருவூரார் சித்தர், தாசியிடம் அடிக்கடி சென்று வருவார் என்று ஒரு சித்தர் வரலாறில் படித்துள்ளேன்.. பேண் கூடலே கூடாது என்று நீங்கள் குறிப்பிட்ட சிவவாக்கியரின் பாடல் சொல்லும்போது, கருவூரார் சித்தரின் வரலாறு மட்டும் கொஞ்சம் முரண்பாடா இருக்குதே?

முந்தைய உங்கள் பதிவில், மந்திரம் தந்திரம் யந்திரம் பத்தி படித்தேன்.. இதில், தந்திரம் என்பது, வடக்கில், வங்காளம், அச்சாம் முதலிய பிரதேசங்களில் உள்ள தாந்திரீக முறையை சேர்ந்ததா?

தமிழ் நாட்டில் நிறைய ஆன்மிக வாதிகள், போலி சாமியார் என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்படுவது, ஒரு வேளை அவர்கள் தாந்திரீக முறையை, கடைபிடிக்கிறவர்களாக இருக்குமா?

ரசிகன் said...

தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள். முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

gokul said...

வாழ்த்துக்கள் தோழி. தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்

Mugilan said...

தங்களின் சிறப்பான பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் தோழி!

S.Menaga said...

500க்கு வாழ்த்துக்கள் தோழி!!

மு.சரவணக்குமார் said...

Good job...இன்னிக்கு தமிழின் Number One பெண் வலைப் பதிவர் நீங்கதான்.

கூடிய விரைவில் தமிழின் Number One பதிவராக வாழ்த்துக்கள்...அதற்கான தகுதிகள் உங்களுக்கு நிறையவே இருக்கிறது.

ஐநூறுக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்!

''இறைவனடி யுவராஜா'' said...

வாழ்த்துகள்...
தோழி..
உங்கள் பணி என்றென்றும் தொடர
இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் தோழி......

sekar said...

Dear sister,

Geethaiyil ullathupol "kadamaiyai sei palanai ethir paaraathae" .Thangal pani sirakka vazhthukal

Gangakathiravan said...

தோழி உங்களை என் நண்பராகப் பெற்றதற்கு நானு பெரும் பேறு செய்து இருக்கவேண்டும். நல்லாரைக் காண்புதும் நன்றே நல்லார் சொல் கேட்பதும் நன்றே. அவருடன் இணங்கியிருப்பதும் நன்றே. நன்றி தோழி. இதயம் நிறைந்த அன்புடன் வாழ்த்துகிறேன். உங்கள் தோழி கங்காகதிரவன்.

மகரன் said...

வாழ்த்துக்கள்...தொடருங்கள்...!

மகரன் said...

வாழ்த்துக்கள்...தொடருங்கள்...!

பாவா ஷரீப் said...

500 to 500000

Kathir said...

ஆருமையான பதிவுகள். வெளிபடையான விஸயங்கள்.
வாழ்க தோழி .
யேல்லாம் வல்ல இறையருளும் ,மகத்தான குருவருளும் ஏப்போதும் தன்களுக்கு துனை வர இறைவனை வணங்குகிறேன் .

வாழ்க ஊழிக்காலம் .வளர்க தன்களது சேவை.

tamilvirumbi said...

Dear thozi,
My hearty felicitations on reaching 500th blog.
With such hard effort,you have attained it.It is not an easy way to come this stage.You have given crystal clear explanation to all who are having dubious thoughts about siddhars.Please bear with my belated response to your blog.I don't find sufficient words to describe my gratitude.At this young age, what
a great work you have done! Please keep going
without any stutter.

ip said...

my dear Thozhi, Thangalathu pathivu 500 enbathe mahan Agathiyarin Nool pol ullathu. Mikka Nantri

Kousikan said...

வாழ்த்துக்கள் தோழி. தங்களின் பணி மென்மேலும் உயர எனது உள்ளம்கனிந்த வாழ்த்துக்கள்

Geetha6 said...

congratulations

m said...

congrats sister go ahead

ravi said...

500வது பதிவை அளித்த சித்தர்கள் தளம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ... தோழியின் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்

கயல் said...

வாழ்த்துக்களோடு நன்றிகளும்!

நல்ல முயற்சி தொடருங்கள்!

காத்திருக்கிறோம்!

jayanthicithi said...

nala pathivu thodarthu paniyatrungal kadavul arul nichayam undu avanilamal yathum ila potruvar potratum ungal pani thodara kadavul arul kidaikatum ennai pontra sithargal patri thyrinthu kola ninaipavargaluku ungal thodar oru varaprasatham nantri

Post a Comment