நாத தரிசனம்.

Author: தோழி / Labels: ,

அகத்தியர் அருளிய பதினாறு தரிசனங்களில் இனி வர இருக்கும் தரிசனங்கள் கொஞ்சம் சிக்கலானவை. அவற்றை வார்த்தைகளினால் எந்த அளவுக்கு விவரிக்க முடியுமென தெரியவில்லை. இவை பெரும்பாலும் குருவினால் சீடருக்கு உணர்த்தப் பட வேண்டியவை என்பதால் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இந்த தரிசன விவரங்களை இங்கே பகிர முயற்சிக்கிறேன்.

வாருங்கள், விந்து தரிசனம் பற்றி அகத்தியர் அருளியிருப்பதை பார்ப்போம்.

ஆமப்பா விந்தினிட தெரிசனமுஞ்சொன்னேன்
அருள்பெரு நாதமதின் தெரிசனத்தைக்கேளு
தாமப்பா தன்னிலையை தானேகண்டு
சங்கையுடன் விபூதி தூளிதமேசெய்து
சோமப்பால் கொண்டுபரி பூரணமாய் நின்றால்
சொல்நிறைந்த சுவாசமது பாழ்போகாமல்
நாமப்பா சொல்லுகிறோம் மவுனம்பூட்டி
நாதாந்தத் தமர்வாசல் திரையைநீக்கே.

நீக்கியந்த கேசரியில் மனத்தைநாட்டி
நிலையறிந்து ஓம்வசியென்று மைந்தா
தாக்கிநின்றாய் ரேசகபூரண மாய்நிற்க
தன்மையுடன் வாசியது உண்மையாகும்
போக்குவரத் தாகிநின்ற வாசிமைந்தா
பொருந்தி நின்றதமரதிலே யடங்கினாக்கால்
வாக்குமன தொன்றாகி மனதுகூர்ந்து
மகத்தான கேசரியில் சோதியாமே.


தன் நிலையை தானே கண்டுணர்ந்து தெளிவாக வீபூதி துளிதம் செய்து பின்னர் மனதை பூரணமாக நிலை நிறுத்தினால் சுவாசம் வீணாக போகாது. அப்போது மௌனமாக “ஓம்வசி”என கேசரியில் மனதை நிலை நிறுத்த நாதாந்த தர்ம வாசலின் திரை நீங்கி தரிசனம் காண கிடைக்குமாம்.

அப்படி தரிசனத்தை காணும் போது கேசரியில் சோதி தோன்றுமாம். மேலும் இந்த தரிசனங்கள் படிக்கும் போது புரியாமல் இருந்தாலும் வரிசை முறைப்படி செய்து வரும் போது சிறப்பாக உணரமுடியும் என்றும் சொல்கிறார்.

நாளைய பதிவில் உருவ தரிசனம் மற்றும் அரூப தரிசனம் பற்றி பார்ப்போம்.

Post a Comment

4 comments:

மாய உலகம் said...

முதல் தரிசனம்

M.R said...

சகோதரி முந்தய பதிவில் விந்து தரிசனம் பதிவிட்டீர்கள் ,
இன்று தலைப்பு நாத தரிசனம்

முதல் பாடல் விந்து தரிசனம் இரண்டாம் பாடல் நாத தரிசனமா சகோதரி

M.R said...

விந்து தரிசனத்திற்கு "றீங்"என்றும் ,நாத தரிசனத்திற்கு "ஓம்வசி" என்றும் தானே மனதில் நிலை நிறுத்த வேண்டிய மந்திரம் சகோதரி .

பிழையிருந்தால் மன்னிக்கவும் சகோ...

tamilvirumbi said...

Dear thozi,
As I don't have sufficient time to go through your blogs.Please bear with my excuses.Thanks a lot.

Post a Comment