குருவின் வழி காட்டுதலோடு புருவ மைய தரிசனம் வரை சித்தியடைந்தவர்கள் இந்த பிரம வெளி தரிசனத்தை பயிலலாம். இந்த முறை பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
ஆச்சப்பா புருவநடு தெரிசனமும் சொன்னேன்
அரகரா பிர்மவெளி தெரிசனத்தைக்கேளு
பேச்சப்பா பெருகிநின்ற மூலந்தன்னில்
பிரணவத்தால் வாசிதனை மேலேனோக்கி
பாச்சப்பா மவுனமதில் ரீங்கென்றிருத்தி
பதிவான சுழிமுனையை பத்திப்பார்க்கில்
மூச்சப்பா நிறைந்ததிரு ஆறாதாரம்
முடிவில்லா பரமவெளி காந்தியாச்சே.
காந்தியென்ற பரமவெளி காந்திதன்னை
கனிவான கண்ணறிந்து ஆர்தான்காண்பார்
பாந்தியமாய் பரமவெளியை பதிவாயப்பார்த்தால்
பஞ்சவர்ண அஞ்சுநிலை தானேதோணும்
சாந்தமுடன் அஞ்சுநிலை தன்னைப் பார்த்தால்
தன்மயமும் விண்மயமும் அதுவாய்ப்போச்சு
நேர்ந்துமிக பூரணமாய் மவுனங்கொண்டால்
நிசமான மவுனகுரு னாதனாச்சே.
ஓம் என்ற பிரணவத்தின் உதவியுடன் மூச்சை மேல் நோக்கி செலுத்தி பின் மௌனமாக “ரீங்” என்று சுழுமுனையில் ஊன்றி மனக்கண்ணால் பார்த்தால் இந்த தரிசனம் சித்தியாகுமாம்.
அப்படி இந்த தெரிசனம் சித்தியானால் அப்ஞ்சவர்ணம் தெரிவதுடன், ஐந்து நிலைகளும் தெரியுமாம். அப்போது தன்மயமும் விண் மயமும் தானே என்று உணரும் மௌன நிலை சித்திக்கும் என்கிறார்.
இந்த மௌன நிலை சித்தித்தவர்களே மௌன குருவாக விளங்க முடியும் என்கிறார் அகத்தியர். ஆக, இதன் மூலம் மௌன குரு என்பவர் யார் அவரின் சிறப்பு எத்தகையது என்பதை இந்த தரிசன முறை நமக்கு உணர்த்துகிறது.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



5 comments:
:)
வணக்கம் தோழி..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ - பக்கமும் ஓய்விருந்தால் வாருங்களேன்.
நன்றி..
நல்ல பதிவு.
சகோ ,வணக்கம்.
இன்று தான் தங்கள் பதிவு படிக்க ஆரம்பிக்கிறேன் .
முழுதும் (அனைத்து பதிவுகளும் படித்து புரிந்து கொண்டு கருத்து சொல்கிறேன் சகோ .
பகிர்வுக்கு நன்றி .
இரண்டு தினங்களுக்கு முன்பே தொடர ஆரம்பித்தேன் .
நன்றி
Dear thozi,
In your previous blog,You have seen the people
who have got darshanam.Is it possible to see them if time permits for me?.Can you introduce
me to the sacred people?.Thanks a lot.
Post a Comment