இது வரை நாம் பார்த்த தரிசனங்களில் இருந்து கொஞ்சம் மாறுதலான தரிசனம் ஒன்றை இன்று பார்ப்போம். முந்தைய தரிசனங்களை நமக்கு வசதியான எந்த இடத்திலும் செய்யலாம். ஆனால் இந்த புருவ மைய்ய தரினத்தை சதுரகிரி மலையில்தான் செய்திட வேண்டுமென்கிறார் அகத்தியர். இதற்கான பிண்ணனி குறித்த தகவல்கள் ஏதும் குறிப்பாக இல்லை.
வாருங்கள் இந்த தரிசனம் பற்றி அகத்தியர் சொல்வதை பார்ப்போம்.
பரிவான புருவமய்யத் தெரிசனத்தைக்கேளு
நேரப்பா மனம்நிறுத்தி மவுனம்பூட்டி
நேர்மையடன் சுழினையிலே மனக்கண்சாற்றி
காரப்பா கனிந்தமனங் கொண்டு மைந்தா
கருணையுடன் நின்றுதவம் செய்தாயாகில்
மேரப்பா வளமானசதுரகிரி சென்றுதானே
மெஞ்ஞான சோதிசிவ சோதியாமே.
சோதியென்ற ஆதியடா சுழினைக்கம்பம்
சுயஞ்சோதி யானசிவ ஞானதீபம்
ஆதியென்ற தீபமடா ஆத்துமாவாகும்
நிலையான தீபமடா பரமாய்நிற்கும்
சாதியென்ற வன்னியடா ஆவிதன்னை
தனையறிந்து சோதியாம் தன்னில்சேரே
ஆரப்பா அறிவார்கள் ஆதியந்தம்
அடங்கிநின்ற பரசுரூபம் வெளிதானாச்சே.
சதுரகிரி சென்று மனதை ஒரு நிலைப்படுத்தி சுழிமுனியில் மனதை நிலை நிறுத்தி தவம் செய்திட வேண்டுமாம். அப்போது சிவ சோதி தரிசனம் காணலாமாம். இந்த சோதியுடன் தன்னை அறிந்து ஒரு நிலைப்பட்ட மனதையும் இணைக்க ஆதி அந்தம் தெரிய வருவதுடன், பரசு ரூபமும் தெரியவரும் என்கிறார் அகத்தியர்.
இந்த முறைக்கென மந்திரங்கள் ஏதும் குறிப்பிடப் படவில்லை, மாறாக முந்தைய தரிசனங்களில் கிடைத்த சித்தியானது இந்த தரிசனத்திற்கு உதவும் என கொள்ளலாம்.
நாளைய பதிவில் பிரமவெளி தரிசனம் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



3 comments:
நல்ல பதிவு தோழியே. சரியான நேரத்தில் இந்த பதிவை பார்த்தேன்.
எனக்கு தெரிந்து சதுரகிரி மலைக்கு சென்றால் தான் இந்த தரிசனம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. ஒருவேளை சதுரகிரியில் செய்யும்பொழுது கூடுதல் பலன் கிடைக்கலாம் என நினைக்கின்றேன். இருப்பினும் இந்த தரிசனத்தை வீட்டில் இருந்தும் பெறலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
எந்த மந்திரமும் இதற்க்கு தேவை இல்லை என்றாலும். ஓம் நமசிவாய மந்திரம் இந்த தரிசனத்தை தரலாம் என்று நினைக்கின்றேன்.
நன்றி....தொடரட்டும் உங்கள் தரிசனம்.
வாழ்த்துக்கள்.
நன்றி
Dear thozi,
Thanks a lot for your simplified explanation to get Siva Jothi Darishanam.
Post a Comment