ஆதார தரிசனம்.

Author: தோழி / Labels:

அகத்தியர் அருளிய பதினாறு வகையான தரிசனங்கள் எவையென நேற்றைய பதிவில் பார்த்தோம். இன்று அகத்தியர் அருளிய முதல் தரிசனமான “ஆதார தரிசனம்” பற்றி பார்ப்போம்.

பொதுவில் இந்த தரிசங்களை எப்படி அணுகிட வேண்டும் என்பதைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

குருவின் அருளை வேண்டி, அந்த அந்த நிலையில் உற்று பார்த்து உன் முயற்சியால் உன் நிலையை அதில் உணர்ந்து கொண்டாயானால் இந்த உலகமெல்லாம் பரந்திருக்கும் பிரம்மத்தை மனம் உணர்வதுடன் என்றும் பூரண நிலையாய் வாழ்வாய் என்று சொல்கிறார்.

இப்போது அகத்தியர் அருளிய முதலாவது தரிசனமான ஆதார தரிசம் பற்றி அவரது மொழியில் பார்ப்போம்.

ஊணவே வாசிதனை மூலந்தன்னில்
ஓமென்று தானிறுத்தி உறுதிகொண்டு
பேணவே யிங்கென்று மவுனம்பூட்டி
பெருமையுள்ள ஓங்அங்சிவய நமவென்று
தோணவே தினம்நூறு உருவேசெய்தால்
சுத்தமுள்ள சுழினையிலே நந்திகாணும்
பூணவே நந்தியுட பிரகாசங் கண்டால்
பொருந்திநின்ற ஆதாரஞ் சித்தியாமே.

ஆமப்பா ஆதாரஞ் சித்தியானால்
ஆதார தேவதைகள் அப்போகாணும்
ஓமப்பா வென்றபிரண வத்தினாலே
ஒளிவிளக்காய் நின்றதொரு சோதிகாணும்
வாமப்பால் நிறைந்த பூரணத்திலேதான்
மகத்தான சோதிபஞ்ச வர்ணமாக
தாமப்பா தன்னிலையில் தானேகாணும்
தண்மையுடன் கண்டதெல்லாம் சித்தியாமே.


ஓம் என்று மூச்சை மூலாதாரத்தில் நிறுத்தி “யிங்”என்று மௌனமாக இருந்து "ஓங் அங் சிவய நம" என்று தினமும் நூறு உரு தொடர்ந்து செபித்து வந்தால் சுழிமுனையில் நந்தியினுடைய பிரகாசம் தெரியுமாம். அப்படி தெரிந்தால் அதுவே ஆதார தரிசனம் என்கிறார்.

இந்த ஆதார தரிசனம் சித்தியானால் ஆதார தேவதைகள் கண்களுக்கு தெரிவார்களாம், தனிமையில் இருக்கும் போதெல்லாம் ஒளிவிளக்குப் போல் சோதி தென்படுமாம். அந்த சோதியானது பஞ்ச வர்ண நிறத்திலே இருக்குமாம். இந்த பஞ்சவர்ண ஒளி தென்படத் தொடங்கினாலே இத் தரிசனத்தில் முழுமையாக சித்தியானதாக கொள்ளலாம் என்கிறார் அகத்தியர்.

எதிர் வரும் நாட்களில் மற்றபிற தரிசனஙக்ளை பற்றியும் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

kimu said...

நல்ல அருமையான பதிவு.
நன்றி

-கிமூ-

tamilvirumbi said...

Dear thozi,
The vicarious presentation given by you showed a reality in your explanation.Thanks a lot.

Unknown said...

thozhi thankaludaiya padhivu en ponrorkalukku migavum payanullathaga ullathu,. umathu pani semmaiyaga nadaivera poorana nalvaazhthukkal

குணசேகரன்... said...

நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க..
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க

Gobinath Loganathan said...

மிகவும் அற்புதமான பதிவுகள். நான் தேடும் பல வினாக்களுக்கு விடைகள் இங்குள்ளது. தங்கள் மேன்மையான பணி தொடரட்டும்.

Unknown said...

aarputhamana pathivu nantri

RAVINDRAN said...

நன்றி

Kumar said...

உங்களுக்கு இது ஒரு சாதாரணமான கேள்வி... ஆனால் பதில் எனக்கு தெரியாது... மூலாதாரம் என்பது எது ? சுழிமுனை என்பது எது ?

Karthick said...

wonderful site

Unknown said...

Respected Madam,
Om endry Mooladharathil Mochai niruthuvadhu eppadi and Ying Endry Mownamaga iruppadhu yeppadi? Please reply

Post a Comment