தரிசனங்கள் பதினாறு..!

Author: தோழி / Labels:

பதினாறு வகையான தரிசனங்கள் இருப்பதாக அகத்தியர் அருளியிருக்கும் செய்தியினை நேற்றைய பதிவில் பார்த்தோம். இந்த தரிசனங்கள் ஒவ்வொன்றும் படி நிலையாக அருளப் பட்டிருக்கிறது. அதாவது ஒவ்வொரு தரிசனமாய் அனுபவித்து அறிந்திட வேண்டும் என்கிறார். இவை யாவும் அகத்தியர் தனது சீடரான புலத்தியருக்கு அருளியதாக கூறப்பட்டிருக்கிறது.

முறையான வழி நடத்துதலில் முயற்சிக்கும் எவருக்கும் இந்த தரிசனங்கள் சாத்தியமாகும். வாருங்கள் பதினாறு வகையான தரிசனஙக்ளைப் பற்றி அகத்தியர் கூறுவதை இன்றைய பதிவில் பார்ப்போம்.

பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
பதிவான தெரிசனங்கள் பதினார்தன்னை
முத்தியுள்ள ஆதாரதெரிசனந்தா னொன்று
மூலமென்ற ஆத்துமாவின் தெரிசனந்தானொன்று
சித்தியுள்ள அறிவானதெரிசனந் தானொன்று
சிவசிவாமவுன மென்றதரிசனந்தானொன்று
புத்தியுடன் மனமடங்கு தெரிசனந்தானொன்று
புகழான உள்ளமென்ற தெரிசனந்தானொன்றே.

ஒன்றான பூரணமாந் தெரிசனந்தானென்று
உறுதியுள்ள னாசினுனி தெரிசனந்தானொன்று
பன்றான புருவமய்யந் தெரிசனந்தானொன்று
பார்மகனே வெளியான தெரிசனந்தானொன்று
நன்றாக நின்றஒளி தெரிசனந்தானொன்று
நாடிமனங் கொண்டவிந்து தெரிசனந்தானொன்று
குன்றாத நாதமென்ற தெரிசனந்தானொன்று
குணமான உருவமென்ற தெரிசனந்தான்காணே.

காணவே அரூபமென்ற தெரிசனந்தானொன்று
கைகலாச சாயுட்ச தெரிசனந்தானொன்று
தோணவே தெரிசினங்கள் பதினாருதன்னை
சுத்தமுடன் சற்குருவின் கடாக்ஷத்தாலே
ஊணவே அந்தநிலை ஊணிப்பார்த்து
உண்மையுடன் தன்னிலையாய் தன்னைக் கண்டு
பூணவே யிகபரசாதனத்துக் கெல்லாம்
பொருந்தி மனம்பூரணமாய் வாழ்வாய்பாரே.


ஆதார தரிசனம், ஆத்துமாவின் தரிசனம், அறிவு தரிசனம், மனோ தரிசனம், மௌன தரிசனம், உள்ளமென்ற தரிசனம், பூரண தரிசனம், நாசினுனி தரிசனம், புருவமய்ய தரிசனம், பிரமவெளி தரிசனம், ஒளி தரிசனம், விந்து தரிசனம், நாத தரிசனம், உருவ தரிசனம், அரூப தரிசனம், சாயுச்சிய தரிசனம் என பதினாறு வகையான தரிசனங்கள் இருப்பதாக கூறுகிறார்.

நம்மில் பலருக்கு இது புதிய செய்தியாக இருக்கும். இந்த தரிசனங்களை எவ்வாறு தரிசிப்பது?. அதனால் என்ன விளையும்?

விவரங்கள் நாளைய பதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

5 comments:

tamilvirumbi said...

Dear thozi,
The way you have presented about darshanam is quite clear.Many thanks.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

சூப்பர் இவை புதிதாகத் தான் தெரிகிறது..

நாளைக்காக காத்திருக்கிறோம்.

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

JILLU-nu ORU YUVA said...

eppdi endru vilakkama sollungal plzzzzzzzzzzzzz :)

மசாலா மசாலா said...

சித்தர்கள் நமக்காக விட்டுச்சென்ற அரிய பல விடயங்கள் தேடுவாரற்று அழிந்துவரும் இன்றைய காலகட்டத்தில் நம்மவர் வாழ்வின் ஆதாரங்களை அடுத்த சந்ததிகளுக்கும் எடுத்துச்செல்லும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

RAVINDRAN said...

நன்றி

Post a Comment