தரிசனம் என்பதன் ஆரம்பத் தகவல்களை நேற்றைய பதிவில் பார்த்தோம். நமது ஆன்மீகத்தை பொறுத்த வரை தரிசனம் என்பது கடவுளை காண்பதாகவே சொல்லப் படுகிறது.
நமது புராண கதைகளில் கூட கடவுளின் காட்சி என்பது சிலிர்ப்பினை உண்டாக்கும் வகையில் நயமான வருணனைகளுடன் கூறப் பட்டிருக்கிறது.மனித உருவில் நான்கு கைகளுடன், எடைக்கு எடை தங்க, வைர வைடூரிய நகைகளை அணிந்தவராக, ஒளிவெள்ளத்தில் மிதந்தவாறு அருள் நிறைந்த முகத்தோடு காட்சி தருவார் என்பது மாதிரி பல தரிசனங்கள் கூறப் பட்டிருக்கின்றன.
இதுவா கடவுள் தரிசனம்?
கடவுளின் உருவம் இப்படியானதுதான் என யாருக்காவது உறுதியாக தெரியுமா?
சிற்பிகளின் கற்பனை மற்றும் ஓவியர்களின் ரசனை வழியேதான் நாம் கடவுளை கண்டிருக்கிறோம். அதைத்தான் நம்மில் பலரும் நம்பிக் கொண்டும் இருக்கிறோம்.
உண்மையில் கடவுள் எப்படித்தான் இருப்பார்?.அவரின் அங்க லட்சணங்கள்தான் என்ன?
இந்த கேள்விக்கு அநேக பதில்களை நம் முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்கின்றனர். ஆனால் அவை எல்லாம் வெகுசன வெளியில் விரிவாக சொல்லப் படவில்லை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. நாமும் நம்மையொத்த உருவத்தில் கடவுளை ஏற்றுக் கொண்டு விட்டோம்.
ஒரு உதாரணத்திற்கு வைணவ சமயத்தின் ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் கடவுளின் உருவத்தை எப்படி வரையறுக்கிறார் என்று பார்ப்போம்.
ஆணல்லன் பெண்ணல்லன் அல்லாது அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே.
ஆணுமில்லை, பெண்ணுமில்லை,அலியுமில்லை, பார்க்கவும் முடியாது, இருக்கிறதுவுமில்லை, இல்லாததுவுமில்லை... விரும்பியவர் விரும்பிய வடிவத்தை உடையவன் அல்லது அப்படி இல்லாமலிருப்பவன்.
கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறதுதானே!, ஆனால் இதுதான் இறைவனின் வடிவம் என்கிறார் நம்மாழ்வார். எத்தனை சத்தியமான வார்த்தைகள்.
இப்படியான தரிசனங்களை பற்றிதான் நமது சித்தர் பெருமக்களும் கூறியிருக்கின்றனர். இந்த தரிசனத்தின் சிறப்பினைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
"மாண்டு சடம் போகமல் தெளிவதெப்போ
மகத்தாலன அறிவதிலே வாழ்வதெப்போ
பூண்டுகொண்ட ஆசையது ஒழிவதெப்போ
பொல்லாத மாய்கைவிட்டு நிற்பவதெப்போ
ஆண்டுகொண்ட காமவலை அறுப்பதெப்போ
அலைச்சலற்று நிற்பதெப்போ அய்யாஅய்யா
தாண்டியந்த நிலையதிலே மனதைனாட்டி
சதான்நத போதமாக தெரிசனம்பாரே."
இறந்து போய் சடலமாகாமல் நாம் தெளிவது எப்போது?
மகத்துவமான அறிவு நிலை பெற்று நாம் வாழ்வது எப்போது?
ஆசைகளை அழிப்பது எப்போது?
கொடியதான மாயை நிலையை விட்டு விலகி நிற்பது எப்போது?
எம்மை ஆட்சி செய்யும் காமவலையை அறுப்பது எப்போது?
மனமானது சஞ்சலம் இல்லாது அமைதியாய் இருப்பது எப்போது?
இப்படி வரிசையாக கேள்விகளை அடுக்கி விட்டு அதற்கான தெளிவை இப்படி சொல்கிறார்.
மேலே சொன்னவைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு உயரிய பேரானந்த நிலையினை அடைய வேண்டுமெனில் குறிப்பிட்ட சில நிலைகளில் மனதை ஊன்றி நிலை நிறுத்தினால் சில தரிசனங்கள் கிடைக்குமாம். அவற்றை தரிசித்தால் எப்போதும் ஆனந்த நிலையில் இருக்கமுடியும் என்கிறார்.
அதாவது அனைத்து உலக இன்பங்களிலிருந்தும் விடுதலை அடைந்து என்றும் ஆனந்த நிலையில் இருக்க இந்த தரிசனங்கள் வழிசெய்வதாக சொல்லும் அகத்தியர் இத் தரிசனங்களில் பதினாறு வகைகள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
அதென்ன பதினாறு வகையான தரிசனங்கள்?
விவரங்கள் நாளையபதிவில்...
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



10 comments:
பதினாறு வகையான தரிசனங்களையும்
காண ஆவலோடு காத்திருக்கிறோம்..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
Dear Thozi,
Perfectly,You have explained.It is an abstract theory.It is highly difficult to
visualize.Thanks a lot for your blog.
ஆணல்லன் பெண்ணல்லன்* அல்லா அலியுமல்லன்,*
காணலுமாகான்* உளனல்லன் இல்லையல்லன்,*
பேணுங்கால்பேணும்* உருவாகும் அல்லனுமாம்,*
கோணை பெரிதுடைத்து* எம்பெம்மானைக்கூறுதலே
. எத்தனை சத்தியமான வார்த்தை
கலக்கிட்டீங்க!
ஆவலுடன் காத்திருக்கிறோம்!
தரிசனம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்.
தரிசிக்க முக்தி தரும் தலம் சிதம்பரம். தில்லையில் நாளை (07/07/2011) தரிசனம் எனப்படும் ஆனித் திருமஞ்சனத் திருவிழா நடைபெறுகிறது. அருகில் உள்ளவர்கள் வந்து தரிசித்து அம்பலத்தானின் அருள் பெறவும்.
நன்றி,
தில்லை மணிகண்டன்
அருமையான தரிசனம்.
நன்றி
ஆணல்லன் பெண்ணல்லன் என்றபொழுதே "அல்லன்" என ஆண்பாலிலே தான் குறிப்பிடுகிறார் ஆழ்வார். இதனால் நம் கண்ணுக்கு புலப்படும் ஆண் பெண் எனும் வகுப்புக்களுக்கு அப்பாற்ப்பட்டவன் என்று உரைக்கின்றார்.
உருவத்திற்கு அவரே "தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே" என விடையும் அளிக்கின்றார்.
thanks a lot
thanks a lot ,thozhi
Post a Comment