தரிசனம் என்பது என்ன?
நாம் தினமும் கண்ணால் கானும் காட்சிகள் எல்லாமே தரிசனம்தான்.அப்படி பார்க்கிற காட்சிகள் நமக்குள் உண்டாக்குகிற எதிர்வினைகளையே உணர்வுகள் என்று சொல்கிறோம். நமக்குள் உண்டாகிற அந்த உணர்வுகளை பார்க்க முடியாது, ஆனால் உணர்கிறோம். அப்படி உணர்வதும் கூட ஒரு வகை தரிசனம்தான். பார்க்க முடிகிறவைகளை புற தரிசனம் என்றும், உணர முடிகிறவைகளை அக தரிசனம் என்று இரண்டு நிலையாக கூறலாம்.
ஒரு வகையில் பார்த்தால் நாம் பிறக்கிற கணம் தொடங்கி இறுதி மூச்சுவரையில் இந்த வாழ்க்கை பயணமே ஒரு தரிசனம்தான். தரிசனங்களின் ஊடான இந்த வாழ்க்கையில் நாம் இது வரை அறியாமல் இருக்கிற அற்புதமான சில அக தரிசனங்களைப் பற்றியே இந்த தொடரில் பார்க்க இருக்கிறோம். அதுவும் நமது சித்தர் பெருமக்கள் அருளியிருக்கிற மகத்தான தரிசனங்களைப் பற்றி!
சித்தரியலில் குருவினை கண்டறிவதையே முதலாவது தரிசனமாய் சொல்லி இருக்கின்றனர். இப்படி துவங்கும் தரிசனமானது ஜீவசமாதி என்கிற பிறவா பேரின்ப முக்தி நிலை வரையில் பல்வேறு தரிசனங்களின் ஊடாக பயணிக்கிறது.நாம் முன்னர் சொன்ன அகதரிசனமே சித்தரியலில் தரிசனமாய் குறிப்பிடப் படுகிறது. இவற்றை உள்ளொளியாக மட்டுமே தரிசிக்க முடியும்.
இந்த தரிசனங்கள் யாருக்கு வாய்க்கும்?. ஆர்வமும், முனைப்பும், உழைப்பும் உள்ள எவருக்கும் வாய்க்கக் கூடியவை இந்த தரிசனங்கள். அவரவரின் முயற்சிக்கேற்ப இந்த தரிசனங்கள் அமையுமாம். ஒவ்வொரு தரிசனமும் இப்படித்தான் இருக்குமென வரையறுத்துச் சொல்ல முடியாது என்றும் அவை அனுபவித்தே உணர வேண்டியவை என பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
இந்த தரிசனங்களைப் பற்றி அகத்தியர், போகர், திருமூலர் போன்ற வெகு சிலரே குறிப்பிட்டிருக்கின்றனர். இதில் இருந்தே இவற்றின் மகத்துவத்தை நாம் உணர்ந்திட முடியும். இந்த மூவரில் அகத்தியரே இவற்றை விரிவாக விளக்கி இருக்கின்றார். அகத்தியர் 12000 என்ற நூலில் தரிசனங்களின் படி நிலைகள் பற்றிய குறிப்புகள் விரிவாகவே கூறப் பட்டிருக்கிறது.
தரிசனத்தின் சிறப்பு மற்றும் மகத்துவம் பற்றி அகத்தியர் என்ன கூறியிருக்கிறார்?
விவரங்கள் நாளைய பதிவில்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



9 comments:
சித்தர்கள் அருளால் "தரிசனம்" மிக மிக நல்லதொரு பதிவுகளாக வரும் என்று நினைக்கின்றேன்.
தொடருங்கள். இந்த தொடர் பல்லோருக்கும் பயன்படும்.
//...ஒரு வகையில் பார்த்தால் நாம் பிறக்கிற கணம் தொடங்கி இறுதி மூச்சுவரையில் இந்த வாழ்க்கை பயணமே ஒரு தரிசனம்தான்...//
நாம் பிரம்மத்திலிருந்து தோன்றியதிலிருந்து, அதே பிரம்மத்தோடு ஒன்றும் வரை நமது ஆத்மா அடைவது ஆத்ம தரிசனம் இதுவும் அக தரிசனத்துள் ஒன்று.
//..இந்த தரிசனங்கள் யாருக்கு வாய்க்கும்?. ஆர்வமும், முனைப்பும், உழைப்பும் உள்ள எவருக்கும் வாய்க்கக் கூடியவை இந்த தரிசனங்கள். அவரவரின் முயற்சிக்கேற்ப இந்த தரிசனங்கள் அமையுமாம். ஒவ்வொரு தரிசனமும் இப்படித்தான் இருக்குமென வரையறுத்துச் சொல்ல முடியாது என்றும் அவை அனுபவித்தே உணர வேண்டியவை என பாடல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன....//
உண்மைதான். எல்லவருக்கும் முயற்சி வேண்டும். அந்த முயற்சிக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
இந்த பதிவுகளை அநேகம் பேர் பார்த்து பயன் அடைய வேண்டுமாய் சித்தர்களை பிரார்த்திக்கின்றேன்.
Dear Thozhi
Intha pathivu migavum arumai. Intha thodar muluvathum miga chirantha thagavalkal unkalidamirunthu kidaikkum enpathil iyyamillai.
Valthukkal.
தரிசனத்த்ற்கு காத்திருக்கிறேன்.
இந்த பதிவுகள் படிக்கும்போதே ஏதோ ஒரு உணர்வு புறத்தொலேங்கும் பனிக்கட்டியால் குளிர்விக்கிறது. எங்கள் தேடுதலின் மென்மையும், மேன்மையும் இறையோனால் முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதை அறிவோமாக. தோழிக்கு வணக்கங்களும் நன்றிகளும்... அன்புடன் ராஜ்குமார் சாலமன்
Dear Thozi,
I am thanking you for your hard effort.Please explain in depth how can we bringout darshan.
Thank you
நன்றி
அன்பு தோழியே! தங்களின் பதிவுகளை சேமித்துக்கொள்ள இயலவில்லையே!! எனது சிந்தனைக்கு அசைபோட வேண்டி இதனை பதிவிறக்கம் செய்யும் முறையினை தயைகூர்ந்து கூறவும். நன்றி. அன்பன் கே எம் தர்மா....FB
Not enough ...:-)
Post a Comment