இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...

Author: தோழி / Labels:

இந்த சித்தர்கள் இராச்சியம் வலைத்தளம் அழகாகவும் சிறப்பாகவும் மிளிர பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிவருபவரும், தமிழில் பங்கு வணிகம் என்னும் வலைத்தளத்தை ஸ்தாபித்து அதன் மூலம் ஆயிர கணக்கான பங்கு வணிகர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவரும், என் இனிய நண்பருமான திரு. எம். சரவண குமார் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்.

ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில்அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை ஸ்தாபித்தவர். அண்மையில் அந்தத்தளம் தனது ஆயிரம் பதிவுகளைக் கடந்து சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

பங்கு வணிகத்தில் ஈடு பட்டுவரும் ஆயிரகணக்கானவர்களுக்கு உதவி வரும் எம்.சரவண குமார் அவர்கள் சீரும்,சிறப்புடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்...



எண்ணங்களைப் பழுக்கவிட்டு
முதிர்ந்த அனுபவத்தை

அடித்தளமாக்கி இளமைக்

காலத்திலேயே - பல

அத்தியாயங்கள் படைத்த

"பங்குவணிகனே"


அடிக்கடி உம்முடன்

அளவளாவி மகிழ்ந்து

அரிய தகவல் கற்றிட

இணையமெனும் தோழன்

இணைத்தான் எம்மை...


முதல் சந்திப்பிலேயே

பெரியோர் முதல் சிறியோர் வரை

சரிசமனாய் மதிக்கும் - உந்தன்

உயரிய பண்பு கண்டு

வியந்து தான் போனேன்..!


கைபிடித்து நடக்கும் குழந்தையாய்

கவரில் போகும் கடிதமாய்

இலட்சியம் நோக்கி

நடைபோட - பலருக்கு

பாதை போட்டுத்தந்து

வாழ வழிகாட்டி

வளர உரம் ஊட்டி

அழுத்திச் சொல்லித்தந்த

"ஆசானே"


வாழ்த்தும்

வயதுமில்லை..

வாழ்த்திய

அனுபவமும் இல்லை..

இளையவள் இவள்

வாழ்த்துகிறேன் ஏற்றிடுவீர்!


நீண்டதொரு நல் வாழ்வில்

நிலையான புகழை ஈட்டி

ஆண்டவர்கள் துணைகொண்டு

அடுக்கடுக்காய் வெற்றி கண்டு

காண்பவர் வியக்கும் வண்ணம்

பார் போற்றப் பல்லாண்டு வாழ்க...!!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

13 comments:

chandru2110 said...

என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் உற்சாகத்தை என்றும் விரும்புகிறேன்.

Stills said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

S.Puvi said...

இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள் திரு சரவணகுமார் அவர்களுக்கு உரித்தாகட்டும்.

தமிழ் அமுதன் said...

http://pirathipalippu.blogspot.com/2011/07/blog-post.html

tamilvirumbi said...

Dear thozi,
Please convey my heartfelt greetings to him
despite I am not knowing him.

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்

Ramesh said...

எதுக்கு சார் உங்களுக்கு இந்த வேண்டாத வேல.

ஈஸ்வரி said...

நல்வாழ்த்துக்கள்

Shiva said...

//பார் போற்றப் பல்லாண்டு வாழ்க...!!// மதிப்பிற்குரிய திரு.சரவணக்குமார் சார் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

thirumandhiram said...

திரு.சரவணக்குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய வாழ்த்துக்கள்.

RAVINDRAN said...

நன்றி

Madurai said...

iniya pirantha nal valthukkal

Post a Comment