சித்தர்கள் உருவாக்கிய காந்த பாத்திரம்!

Author: தோழி / Labels: , ,

காந்தம் என்பது நமக்கு மேலை நாட்டு அறிவியல் வழியாகவே அறிமுகமானது என நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். ஆனல் பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்கள் அவற்றை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கின்றனர். அதைப் பற்றிய குறிப்புகள் நம்மிடையே இருந்தும் இத்தனை நாளாய் அவற்றை பயன்படுத்தத் தவறியவர்களாக நாம் இருந்திருக்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தமான செய்திதான்.

நேற்றைய பதிவில் சித்தர்கள் தங்களுடைய ரசவாதத்தின் ஒரு அங்கமாக காந்தத்தை பயன் படுத்திய செய்தியினையும், காந்தங்களின் ஐந்து வகைகளையும் பார்த்தோம். இந்த இயற்கை காந்தங்கள் பூமியின் அடியில் இருந்தே தோண்டி எடுக்கப் பட்டிருக்கின்றன. சாப நிவர்த்தி செய்த பின்னர் ஒரு முழ ஆழ பள்ளத்தை வெட்டி அங்கிருந்து எடுக்கப் படும் காந்தமே பயன்படக் கூடியது என குறிப்புகள் போகர் பாடலில் காணப் படுகிறது.

இயற்கையாக கிடைக்கும் காந்த கற்களைக் கொண்டு பாத்திரங்களை செய்து அதனை ரசவாத வேலைகளுக்கு பயன் படுத்தியிருக்கின்றனர் என்பது மிகவும் அபூர்வமான தகவல். நவீன அறிவியல் இயற்கை காந்தங்களைக் கொண்டு பாத்திரம் செய்யும் உத்தி எதனையும் உருவாக்கி பயன்படுத்துகிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பலநூறு வருடங்களுக்கு முன்னர் சித்தர் பெருமக்கள் காந்தகற்களைக் கொண்டு பாத்திரங்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

எப்படி செய்வது என்கிற தகவலையும் போகர் தனது பாடலில் பின் வருமாறு கூறுகிறார்.

என்றதொரு மஞ்சள் நிறக் காந்தம்
ஏற்றமதாய் கிட்டாட்டால் ஊசி ஏழு
மன்றதோர்தன் பிடிக்கின்ற காந்தம் வாங்கிப்
பொடிப்பொடியாய்ப் பருப்புப் போலே நொறுக்கிக் கொண்டு
குன்றாத கிழிகட்டிக் காடி தன்னில்
கொதிக்கவைத்துப் பின்பதைத்தான் கொள்ளில் வைத்து
அன்றதையே அவித்துமேதான் எடுத்துக்கொண்டு
உலரவிட்டு நன்குசீலை செய்துகொண்டு
சிறப்பாய் மூன்றுநாட்கள் புதைத்து வைத்துப்
பின்பேதான் பலம்பத்து நிறுத்திக்கொண்டு
நன்றாய் நீயும் கனமான வீரமது
பலம்போடு பஞ்சமித்தி ரத்தைக் கூட்டி
பலம்போடு அரைத்தெல்லாம் வில்லை தட்டி
வளமான கசபுடமாயப் போட்டு எடுத்துக்
குளம்போடு ரெட்டையான துருத்தி யாலே
கூசாதே ஊதியேதான் ஓட்டில் கொட்டி
சாங்கமாக கறடுவைத்துக் குகையில் ஊதே
பின்னுமேஊ திட்டு ஐந்து தரமே தானம்
பொறுக்கினதோர் சத்தெல்லாம் ஒன்றாயக் கூட்டிக்
கண்ணுமேதான் காரமிட்டு உருக்கிக் கொண்டு
காட்டியமுன் நட்பதனில் உருக்கிச் சாய்த்துப்
பண்ணுமே தான் பதினொருக்கால் உருக்கிச் சாய்த்துப்
பாங்கான நாலிலொன்று தங்கங் கூட்டி
மண்ணுமேதான் மெழுகுகட்டிக் கிண்ணி வார்த்து
வத்து உண்ணு கற்பம்உண்ணு மகத்தாம் சித்தே.


- போகர் -

மஞ்சள் நிறக் காந்தம் அல்லது ஊசிக் காந்தத்தை சிறு சிறு தூளாக அதாவது பருப்பு அளவில் வெட்டி அதனை காடியில் கொதிக்க வைத்து அன்றைய தினமே அதை கொள்ளுடன் சேர்த்து அவித்து எடுத்து உலரவைத்த பின்னர் சீலை செய்து மூன்று நாட்கள் வரை மண்ணில் புதைத்து வைக்க வேண்டுமாம்.

பின்னர் இந்த காந்தத்தில் பத்து பலம் நிறுத்து எடுத்து அத்துடன் ஒரு பலம் வீரம்,ஒரு பலம் பஞ்சமித்திரம் சேர்த்து அரைத்து வில்லையாக தட்டி அதனை கஜபுடம் போடவேண்டும் என்கிறார் போகர். பின்னர் இந்த காந்த வில்லையை இரட்டை துருத்தி கொண்டு உருக்கி ஒரு மட்பாண்டத்தில் கொட்டி கரடு வைத்து குகையில் இட்டு ஐந்து தடவை ஊதிய பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக திரட்டி அதனுடன் காரம் சேர்த்து பதினோரு தடவை உருக்கிட வேண்டும் என்கிறார்.

இப்படி உருக்கிய காந்தத்துடன் நான்கில் ஒரு பங்கு தங்கம் சேர்த்து உருக்கி மெழுகினால் செய்யப் பட்ட கிண்ண அச்சில் வார்த்து எடுத்தால் காந்த பாத்திரம் தயார். இயற்கையாக சேகரிக்கப்பட்ட காந்தத்தில் இருந்து காந்த பாத்திரம் செய்வது வரை பலவேறு செய்கைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதன் ஊடே நுட்பமான விவரங்கள் மறைக்கப் பட்டிருப்பதை வாசித்த எவரும் உணரமுடியும்.நவீன அறிவியலின் துணை கொண்டு இதில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.

இப்படி தயாரிக்கப் பட்ட பாத்திரங்கள் ரசவாத செயல்பாடுகளில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இத்தகைய காந்த பாத்திரத்தில் நிரப்பப் பட்ட தண்ணீரில் எண்ணைத் துளியை விட்டால் அது பரவாதாம். மேலும் பட்டாணிக் கடலையானது கறுத்துப் போகும், பெருங்காயத்தின் வாசனை மறையும்,இந்த பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்தால் பொங்கி வழியாது, கடுக்காயின் கசப்பு நீங்கும், எத்தனை சூடான நீரும் விரைவாக ஆறி குளிரும் என பல்வேறு ஆச்சர்யங்களை அடுக்குகிறார் போகர்.

இந்த காந்தப் பாத்திரத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்தார்கள்?. விவரங்கள் நாளைய பதிவில்...!!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

இராஜராஜேஸ்வரி said...

அரிய பகிர்வுக்கு நன்றி.

Shiva said...

காந்தசிகிச்சை முறை இங்கே பயன்பாட்டில் ஏற்கனவே உள்ளது. சென்னையில் இதனை சிறப்பாக கையாண்டு மருத்துவம் செய்து வருபவர் டாக்டர் திரு. எம்.ஜி.அண்ணாதுரை அவர்கள். பல்வேறு காந்தசிகிச்சை பொருட்களும் இவர்களிடம் கிடைகின்றன

Guruvadi Saranam said...

அன்பு தோழிக்கு,

நான் தங்கள் பதிப்புகளை தொடர்ந்து படித்துவருகிறேன். தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க ஆண்டவன் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

தங்கள் தொண்டு மென்மேலும் செழிக்க வாழ்த்துக்கள்!

என்றும் நட்புடன்
ராஜேந்திரன்
பெங்களூர்.

tamilvirumbi said...

Dear Thozi,
Thanks a lot for your today's blog.The notes given by you about magnet are revealing true.Our scientific inventions are not much
as far as magnet is concerned.We are highly thankful to you to bring about essential facts about magnetism.

ip said...

Dear Thozhi

Kantha Pathiram a very good information for latest scientific development. thanks a lot thozhi

Lingeswaran said...

ஆமாம்....சரிதான்.....கந்தபுராணம் என்பதே காந்தபுராணம் தான் என்கிறார்கள்...!

Hari Haran PS said...

Ma'am,

Thanks for the information and excellent work.

Keep posted.

Regards,
Hariharan PS
Pondicherry

Molagaa said...

super thozli :)

RAVINDRAN said...

நன்றி

mani tj said...

THANKS TO ALL

மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் said...

அரிய தகவல். நன்று. நன்றி.

Post a Comment