சித்தர் பாடல்களில் மறைபொருள்!

Author: தோழி / Labels:

சித்தர்களின் பாடல்களை புரிந்து கொள்ளும் வரிசையில் நேற்று மெய்யான இறை நிலை பற்றிய பாம்பாட்டி சித்தரின் பாடல் ஒன்றைப் பார்த்தோம். அந்த வகையில் இன்று சித்தர் பாடல்களின் உண்மையான பொருளறிவது தொடர்பான உதாரணம் ஒன்றினை பார்ப்போம்.

"செப்பரிய மூன்றுலகும் செம்பொன் ஆக்குவோம்
செங்கத்திரைத் தண்கதிராய்ச் செய்துவிடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமற் செய்வோம்
எங்கள் வல்லபம் கண்டு ஆடு பாம்பே!"


பாம்பாட்டி சித்தரின் இந்த பாடலுக்கு என்னிடம் இருக்கும் சமீபத்தைய பதிப்பில் வெளிவந்த ஒரு புத்தகத்தில் பின் வருமாறு பொருள் கூறப்பட்டிருக்கிறது.

“பூலோகம், பாதாள லோகம், சுவர்க்கலோகம் என்பன மூன்று உலகங்களாகும். இந்த மூன்று உலகங்களின் சிறப்பைச் சொல்ல ஆரம்பித்தால் அது சொல்லில் அடங்காது. அப்படிப்பட்ட மூன்று உலகங்களையும் செம்மைநிற ஒளிவீசும் பொன்னாக மாற்றுவோம். அதாவது, அவற்றை சுத்தத் தங்கமாக மாற்றிவிடுவோம் என்பதாம்.”

மேலோட்டமாய் அணுகினால் இந்தப் பொருள் சரியானதாகவே தோன்றும்.ஆனால் சித்தர்களின் பாடல்கள் மறைபொருளோடு கூடியவை, அவற்றின் பொருளறிவது தனித்துவமான கலை. இதனை குருமுகமாகவே அறிந்திட முடியும்.அந்த வகையில் இந்தப் பாடலுக்கான சரியான பொருள் பின்வருமாறு...

வாசி யோகத்தில் இரேசகம், பூரகம், கும்பம் என்கிற மூன்றும் தனித்துவமான அம்சங்கள். இவற்றை முறையாக கையாண்டு அவற்றை ஒருங்கினைக்கும் போது குண்டலினி கிளம்பி ஒளி வீசுகிறது. ஆந்த ஒளி பொன்னைப் போல பிரகாசமானதும், வெப்பம் நிறைந்ததும் ஆகும். இப்படியான வாசியோகத்தில் சிறந்த சித்தர்கள் எத்தகைய வெப்பத்தையும் கிரகித்து உடலை குளிர்விக்கும் தன்மை பெற்று விடுவார்கள்.

இத்தனை சிறப்பான வாசியோகம் கைவரும் போது எட்டு வகையான சித்துக்களின் ஒன்றான “கரிமா” கைகூடும். அதனால் எத்தனை பெரிய பொருளையும், ஏன் பூமியைக் கூட ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும். இத்தகைய வல்லபம், திறமை கொண்டவர்கள் சித்தர்கள் என்பதை உணர்ந்து குண்டலினிப் பாம்பே, நீ ஆடு என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

வர்த்தக நோக்கில் எழுதப் படும் பல நூல்களில் தெரிந்தோ, தெரியாமலோ இம்மாதிரியான அரிய தகவல்கள் வெளிவராமல் தொலைந்து கொண்டிருப்பது வருந்தத் தக்கது. இந்த உதாரணத்தை முன் வைப்பதன் மூலம் எவரையும் குறை சொல்வதோ அல்லது எவருக்கும் வருத்தம் உண்டாக்குவதோ என் நோக்கமில்லை. என்னுடைய புரிதல்களை பகிரும் ஒரு முயற்சி மட்டுமே.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

6 comments:

RAVINDRAN said...

நல்ல கருத்து

ThirumalaiBaabu said...

அன்புத் தோழிக்கு வணக்கம் ....
மிக அழகாக எடுத்துரைத்துள்ளீர்கள்...
அணைத்து பதிவுகளும் சிறப்பாக உள்ளது ..இறைஅருள் என்றும் கிடைக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன் !!!

Arunkumar said...

குருவின் அருள் இருந்தால் மட்டுமே உண்மை கருத்தை அறியமுடியும்.இதனை நாள் நான் இந்த பாடலுக்கு முதலில் கூறிய விளக்கத்தை மட்டும் தான் அறிய முடிந்தது.

Hari Haran PS said...

Great information!

AtheethanSubramaniam said...

தோழி முழுமையான சித்தர் பாடல்களுக்கான விளக்கங்களுடன் கூடிய புத்தகம் இருக்கிறதா என்று சொல்லமுடியுமா ?

tamilvirumbi said...

Dear Thozi,
You have explained in a neat and gentle way
of siththar padalgal.Thanks a lot

Post a Comment