சித்தர்கள் சொன்ன பகுத்தறிவு!!

Author: தோழி / Labels:

சித்தர்களின் பாடல்களின் வழியே பயணித்தால், இறைநிலை என்பதை எவரும் எய்திடக் கூடிய ஒன்றாகவே புரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த பாடல்களில் இறை நிலை பற்றிய தேவையற்ற கற்பனா வாதங்களோ, மிகைப்படுத்திய புகழுரைகளையோ, அலங்காரங்களையோ அநேகமாய் காண முடியாது. ஒரு சிலபாடல்கள் இதற்கு விதிவிலக்கு,இவைகூட பிற்காலத்தில் இடைச் செருகலாய் வந்திருக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.

சித்தர்களின் பார்வையில் கடவுள்தன்மை என்பது மனித மனத்தின் செம்மைப் படுத்தப் பட்ட ஒரு உயர் நிலைதான் எனவும், அத்தகைய மேலான மனப் பக்குவத்தை தொடர் பயிற்சியின் மூலம் எவரும் அடைய முடியும் என்பதை வலியுறூத்தியிறுக்கின்றனர். இதற்கு பலபாடல்களை உதாரணம் காட்டிட முடியும்.

இறைநிலை,இறைவன் என்கிற தத்துவார்த்தங்களை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிடும் ஆன்மீகத்தை கடுமையாக சாடியுமிருக்கின்றனர். இத்தகைய தெளிவுகளைக் கூறிடும் பாடல்களை அன்றைய பெரும்பான்மை கருத்தாளார்கள் நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் இவை பொது வெளிக்கு வருவதை முனைந்து தடுத்திருக்கின்றனர். இதனையும் மீறி சில பாடல்கள் காலம் கடந்து நம்முடன் நிற்கின்றன.

அந்த வகையில் இன்று பாம்பாட்டி சித்தரின் பாடல் ஒன்றைப் இன்றைய பதிவில் பார்ப்போம்.

"பூசை செய்தாலே சுத்தபோதம் வருமோ?
பூமிவலம் செய்ததனாற் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவே
அயைடலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே!"


இறைவனுக்கு பூசை செய்கிறேன் பேர்வழி என சதா சர்வகாலமும் ஏதேனும் சடங்குகளை செய்வதாலும், அவரைப் பார்த்து புண்ணியம் தேட போகிறேன் என ஊர் ஊராய் கோவில் கோவிலாய் சுற்றுவதால் என்ன பலன் கிடைத்து விடும் என ஆன்மீகத்தின் அடிப்படையை இந்தப் பாடலில் கேள்விக்குள்ளாக்குகிறார் பாம்பாட்டிச் சித்தர்.

இறை நிலை என்பது இவர்கள் எண்ணுவதைப் போல ஒரு மனித உருவிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அருள் பாலிக்கிற அம்சமில்லை. ஆதியும், அந்தமும் இல்லாத எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தத்துவ நிலை. தோற்றமில்லாத தோற்ற நிலை, எங்கும் நிறைந்திருக்கும் அத்தகைய நிலையினை நமக்குள்ளேயும் உணரமுடியும்.

இப்படியான இறை நிலையை பூசை செய்வதாலும், புண்ணியம் தேடி சுற்றுவதாலும், சமய நூல்களை படிப்பதாலும் அடைய முடியாது.தேவையற்ற சஞ்சலங்களுக்கு பலியாகாமல் சுயநலம் கடந்த பொது நலத்தோடு வாழ்ந்தால் எங்கும் நிறைந்திருக்கும் இறைநிலையினை உணர்ந்து அனுபவிக்க முடியும்.அந்த நிலைக்கு தன்னையும் உயர்த்திக் கொள்ள முடியுமென்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...

Post a Comment

8 comments:

Shiva said...

///ஊர் ஊராய் கோவில் கோவிலாய் சுற்றுவதால் என்ன பலன் கிடைத்து விடும்…………///
///தேவையற்ற சஞ்சலங்களுக்கு பலியாகாமல் சுயநலம் கடந்த பொது நலத்தோடு வாழ்ந்தால் எங்கும் நிறைந்திருக்கும் இறைநிலையினை
நமக்குள்ளேயும் உணரமுடியும். உணர்ந்து அனுபவிக்கவும் முடியும்///
……….ஆம் முடியும்.

Piththa_ Piraisoodi said...

நட்டகல்லை சுற்றிவந்து நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றிவந்து மொன மொனன்னு சொல்லும் மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

ip said...

Dear Thozhi,

A superb explanation . Thanks

RAVINDRAN said...

நன்றி

tamilvirumbi said...

Dear thozi,
Thanks a lot for your very good explanation.
In the present Juncture,it is not possible to attain a guru to practise kundalini.Some
followers of Maharishi vedathathiri have guided wrongly one group of persons in our place.Without the knowledge of getting down kundalyni,one person is not able to talk to anyone.He is in deranged condition.One's spiritualism is at the will of God with zero
resistance.

Admin said...

You are really amazing Thozhi, Ungalai manaiviyagavo,udanpirapagavo,thaiagovo, magalagavo adainthavargal pakkiyam seiythavargal. Neengal seithuvarum indha magathana kariathuku en manamarntha nanrigal.

Anonymous said...

இவர்களின் கூற்று படி பார்த்தால் இறைநிலை என்பது வேதங்கள் கூறும் அத்வைத வழிபாடை குறிக்கிறது

New*inOz said...

தமிழ் விரும்பி, தமிழிலே பதிவிடலாமே? முயற்சியுங்கள். முடியும்.

Post a comment