அருட் புலம்பல் - ஓர் அறிமுகம்!

Author: தோழி / Labels: ,

தமிழ் கூறும் சித்தர்கள் அனைவருமே எளிமையான பின்புலங்களில் இருந்தே வந்திருக்கின்றனர். சமூகத்தின் எளிய ஒடுக்கப் பட்ட தரப்பினரின் பிரதிநிதிகளாகவே சித்தர்களை தமிழ் சமூகம் ஆணவப் படுத்தியிருக்கிறது. எதிலும் விதி விலக்கு உண்டே!

இந்த கருத்தியலுக்கு விதிவிலக்கானவர்கள் இரண்டு பேர் ஒருவர் வணிகக் குடும்பத்தில் பிறந்து பெரும் செல்வம் ஈட்டி அதில் திளைத்த பட்டினத்தார். மற்றவர் பத்திரகிரியார் அரசராக இருந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. பட்டினத்தாரை தனது குருவாகக் கொண்டு அரச சுகபோகங்களைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டவர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் முக்தி அடைந்ததாக கருதப்படும் பத்திரகிரியார் எழுதிய அருட்புலம்பல் எனப்படும் மெய்ஞான புலம்பல் என்கிற நூல் சித்தர் நூல்களில் தனித்துவம் வாய்ந்தது. இந்த பாடல்களை ஏற்கனவே மின்னூலாக்கி இங்கே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அந்த நூலை தரவிறக்கிக் கொள்ளலாம்.

அருட் புலம்பல் என அறியப் படும் இந்த பாடல்கள் எளிய தமிழில்,முதல் வாசிப்பில் எளிதாய் பொருள் உணரும் வகையில் எழுதப் பட்டிருப்பது சிறப்பு. எனினும் மீள் வாசிப்புகளில் மட்டுமே இந்த எளிய சொல்லாடல்களின் பின்னிருக்கும் விரிவான தத்துவத்தினை அருமைகளை உணர்ந்திட இயலும்.

உதாரணத்திற்கு இந்த பாடலை பார்ப்போம்...

"ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம்?"

இந்த பாடல் முதல் வாசிப்பில் ஆணவத்த்தை அடக்கி,ஐம்புலன்களை ஒடுக்கி இறைவனை அடைவது எக்காலம் என்று பொருள் விளங்கும்.

இதையே சற்றே நுணுகி ஆராய்ந்தால், ஆங்காரம் என்ற சொல்லுக்கு தான் என்கிற மமதையை குறிப்பதை அறியலாம். தான் என்கிற அஹங்கார நிலை அழியும் போதே ஐம்புலன்களும் அதில் கரைந்து போய்விடுகிறது.

தூங்காமல் தூங்கி என்கிற வார்த்தைகள் வாசிக்க எளியதாய் இருந்தாலும், பத்திரகிரியாரின் இந்த சொல்லாடல் மிகவும் புதுமையானது. தூங்காமல் தூங்கி என்கிற வார்த்தைக்கு நேரடி பொருள் தேடுவது சிரமம். என்னுடைய புரிதலில் இதனை சுயமறிந்த விழிப்பு நிலை என்று கருதியிருக்கிறேன்.

ஆக, தான் என்கிற அகங்கார நிலையழித்த விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே உயர்ந்த சுகமான முக்தி நிலை சாத்தியமாகும் என்பதை பாடலின் வழியே சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறார் பத்திரகிரியார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

Lingeswaran said...

ஆமாம் கரெக்ட்டு..

குணசேகரன்... said...

அருமை.

Unknown said...

தூங்காமல் தூங்கி -
தூங்கினாலும் இறைவனை விடாமல் நினைத்து கொண்டிருப்பது . இறை அருளால் இது சாத்தியம்

Shiva said...

இன்றைய அறிவியல் சொல்லுகின்ற அல்பா நிலை (A level between sleep and wakefulness) என்பதை தான் - தூங்காமல் தூங்கி - என்று பத்ரகிரியார் அன்றே சொல்லியுள்ளார். இந்த நிலையில் அல்லவை நீக்கி நல்லவை கொள்ள இயலும்.
Alpha is a brainwave frequency between 7 and 14 cycles per second. This is a level between sleep and wakefulness. While functioning at this level, apart from the usual left brain activity, our right brain also gets activated. This makes a person's thinking very powerful, very intuitive and very creative. This level connects us with our subconscious and helps us to access the amazing powers lying dormant there. it has been found that any thought projected in the mind at this level will certainly be manifested in real life.

tamilvirumbi said...

தோழி ,
இதையே,பசித்திரு, தனித்திரு ,விழித்திரு என்று வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று அருளிய வள்ளலார் கூறியுள்ளார். மிக்க நன்றி.

Anonymous said...

இருளில் விழித்திருப்பான் ஒளியில் உறங்கி இருப்பான் - ஞானி
மனிதன் பகலில் விழிதிருப்பன் இருளில் உறங்கி இருப்பான்
இந்த பாடலில் மனிதன் பகலில் விழித்து பொன் பொருள் முதலிய அற்ப சுகத்திற்காக ஆசை பட்டு அறியாமை என்கிற இருளில் மூழ்கி இருப்பான் ஆனால் ஞானி எது அறியாமை என்று விழிப்போடு இருந்து பரமாத்மாவில் உறங்கி இருப்பான்

Post a comment