வித்துவேடணம் தொடர்ச்சி!

Author: தோழி / Labels: ,

வித்துவேடணம் என்பது குறிப்பிட்ட இரண்டு நபர்களிடையே கருத்து வேற்றுமைகளை உருவாக்கி அவர்களின் உறவினை பிரிப்பதே ஆகும்.தற்காலத்தில் மலையாள மாந்திரிகர்கள் இந்த முறையில் வெற்றிகரமாக செய்யப் படுவதாக தெரிகிறது.

மற்ற மாந்திரிக முறைகளைப் போலவே இந்த முறையிலும் யந்திரம் முக்கியமானது.நான் பார்த்தவரையில் அச்சு ஊடகங்களில் இந்த யந்திரங்களின் படங்களை இதுவரையில் யாரும் தந்ததாக தெரியவில்லை. அநேகமாய் இங்குதான் முதல் முதலாய் இந்த யந்திரங்கள் பொது பார்வைக்கு வைக்கப் படுகிறது என நினைக்கிறேன்.

வாருங்கள் இந்த யந்திரங்களை எவ்வாறு அமைகக் வேண்டும் என பார்ப்போம். கருவூரார் பின் வரும் தனது பாடல்களில் யந்திர வடிவமைப்பைப் பற்றி விளக்குகிறார்.

பிரித்தேனேவித்து வேஷணந்தானையா
பிசகாதுயிருப்பதைந் தரைதான்கீரி
வருத்தமின்றியறுகோணம் முக்ககோணந்தான்
வகையானவைங்கோணம் நாற்கோணம்பார்
பொருத்தமாய்வட்டமது போடுபோடு
பொங்கமுடன்சிவயநம வென்றுபாட்டு
கருத்துவைத்து நம் -சவ்வும் - ஈம் - லம்போடு
கலங்காதே - ஐம்என்றபீஜம்போடே.

போட்டுவிடு உ - ஒ - இ - எ - அ - போடு
புகழானசவ்வும் ஸ்ரீயும் கிலியும் - றீயும்
நீட்டமாய் ஐயும்என்ற பீஜம்போடு
நீமகனே மூன்றாவ தணையைமாறு
தாட்டிகமாய்நாலுபனி ரெண்டுபோடு
தாழ்வின்றிபதினொன்று பதினைந்தப்பா
நாட்டுவாய்க்கடை வீட்டில் ஒன்பதையா
நாலாவதணைபிடித்து மாறுமாதே
.

இந்த பாடல்களில் குறிப்பிடப்பட்ட யந்திரத்தினை படியெடுத்தால் கீழே உள்ள படத்தில் உள்ளதைப் போல வரும். இந்த யந்திரமானது வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறப்பட வேண்டும்.இந்த வித்துவேடண யந்திரத்தை குருவருளுடன் கூடிய ஒரு சனிக் கிழமை நாளில், எட்டி மணிகளால் ஆன மாலை அணிந்து கொண்டு எட்டிப் பலகையால் ஆன ஆசனத்தில் வடமேற்கு திசையை நோக்கி அமர்ந்திருந்து கழுதைவண்ணப்பட்டுத் துணியில் வைக்க வேண்டும்.

இப்போது வித்துவேடணத்திற்கான மூல மந்திரமான “ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா” என்ற மந்திரத்தினை அந்தி சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் ஒருமண்டலம் செபித்து, காக்கனமலர்களால் யந்திரத்தை அர்ச்சித்துவர வித்துவேடணம் சித்தியாகுமாம் என்கிறார் கருவூரார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

தகவல்களுக்கு நன்றி.

Unknown said...

ஒருவரை பிரிக்கின்ற மந்திரம்.... பலருக்கு சந்தோசம்தான்...

பிரிப்பதென்றால் சந்தோசம்தானே எல்லோருக்கும்

Shiva said...

மாந்த்ரீகத்தை பற்றி பதிவு எழுதிய தாங்கள் , இனி இதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும்
சித்தர்கள் சொன்ன வழி முறைகளைப் பற்றி எழுதினால் மட்டுமே, இந்த தலைப்பிற்காண தங்கள் பணி நிறைவுறும் என எண்ணுகிறேன்.

Unknown said...

Ok

tamilvirumbi said...

Dear Thozi,
Thanks a lot for your new addition.

Post a comment