வித்துவேடணம்

Author: தோழி / Labels:

மாந்திரிகம் தொடர் தனது ஏழாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது.மாந்திரிகத்தின் நீள எல்லைகள் மிகவும் விஸ்தாரமானவை.அதை விளக்கிச் சொல்ல முற்பட்டால் மேலும் பல வாரங்கள் தேவைப் படும். எனினும் வாசிப்பின் சுவாரசியம் கருதி இந்த வாரத்துடன் இந்த தொடரினை நிறைவு செய்திட உத்தேசித்திருக்கிறேன்.

சித்தர் பெருமக்களின் அட்டமாகர்மங்களில் ஒன்றாகவும், ஆயகலைகள் 64ல் ஒன்றாகவும் அறியப்படும் வித்துவேடணம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

வித்துவேடணம் என்பது ஒருவருக்கொருவர் தீரா பகையை உண்டாக்கிப் அவர்களை பிரிப்பது ஆகும். எத்தகைய காரணங்களுக்காக இந்த கலை சித்தர் பெருமக்களால் கைக்கொள்ளப் பட்டது என்பது குறித்தான விளக்கங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.

வித்துவேடண பயிற்சி முறைக்கான முன் தயாரிப்புகளைப் பற்றி இனி பார்ப்போம்.

வித்துவேடணத்திற்கான அதிதேவதை வாயுதேவன் ஆவார்.

வித்துவேடணத்திற்கான மூல மந்திரம் “ஓம் நமசிவய ஐயும் கிலியும் ஸ்ரீயும் சுவாகா” ஆகும்.

இந்த பயிற்சியினை ஒரு சனிக் கிழமையில் துவங்கிட வேண்டும்.

வடமேற்கு திசையினை நோக்கி அமர்ந்து பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

எட்டி மணியினால் ஆன மாலையினை அணிவதற்கும், மந்திரத்தினை செபிக்கவும் பயன்படுத்திட வேண்டும்.

எட்டி மரத்தின் பலகையினை ஆசனமாக பயன்படுத்திட வேண்டுமாம்.

காக்கனம மலர் கொண்டே யந்திரத்தினை அர்ச்சிக்க வேண்டும்.

அணிவதற்கும், மூலகங்களுக்கு அணிவிக்கவும் கழுதைவண்ண பட்டினை உபயோகிக்க வேண்டும்.

யந்திரம் தயாரிப்பதைப் பற்றியும் அதனைக் கொண்டு சித்தியடையத் தேவையான தந்திரம் பற்றியும் நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

Shiva said...

அரிய தகவல்கள். தொடரட்டும் தங்கள் பணி.
காக்கனமலர் - என்ன மலர் இது?
இதில் நிறைய விஷயங்கள் - நுட்பமானவற்றை -சொல்லித்தர குரு அவசியம் தேவையே.

Elangai Tamilan said...

தோழி,
வணக்கம்.நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் பதிவில் கருத்துரை இடுகின்றேன் .தாங்கள் என்னை
மறந்து போய் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். தங்களின் மாந்தரீகம் தொடர் மிகவும் வெறுப்பாக உள்ளது.தாங்கள் எப்பொழுது அடுத்த தலைப்புக்கு மாற உள்ளீர்கள்?.விரைவில் ,விறுவிறுப்பாக
எழுதுங்கள்.மிக்க நன்றி.

--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

குணசேகரன்... said...

ஆமாம்..ஒரே டாபிக் பதிவை விட டாபிக் மாற்றி மாற்றி எழுதினால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும். But ur post is informative.

tamilvirumbi said...

Dear Thozi,
Thanks a lot.Please don't get perturbed by
disgruntled comments.Please write more about
siththars.

Post a comment