பேதனம் தொடர்ச்சி..

Author: தோழி / Labels: ,

தான் நினைக்கிற ஒருவரின் புத்தியை முற்றாக பேதலிக்கச் செய்திடும் தீவிரத் தன்மை வாய்ந்தது இந்த பேதனம் எனும் மாந்திரிக கலை.

எந்த காரணத்திற்காக இந்த கலையினை சித்தர் பெருமக்கள் கைகொண்டார்கள் என்பதற்கான சரியான விளக்கங்கள் நான் தேடிய வரையில் கிட்டவில்லை. விவரம் அறிந்தவர்கள் விளக்கினால் நன்றியுடையவளாயிருப்பேன்.

பேதன முறைக்கான யந்திரம் கீறுவதைப் பற்றி கருவூரார் தனது பாடலில் பின்வருமாறு விளக்குகிறார்.

குணமாகும்பேதனமாஞ் சித்துகேளு
கொற்றவனேயிருபத்தைந் தரைதான்கீறி
மணமுள்ளோய்ஐங்கோணம் நாற்கோணவட்டம்
மயங்காதேயறுகோணம் முக்கோணம்பார்
கணக்காக ம - வ - ந - சி - ய வென்றுமாட்டு
கலங்காதே ஈம் - லம் - ஐம் - நம் - சௌவும்தான்
பிசகாமல்கிலியும் றீயும் - ஐயும் - தானே.

தானேதான் சவ்வும்ஸ்ரீயும் - பீஜம்போடு
தன்மையாய்மூன்றாவ தணையைமாறு
கோனேகேள்பதினொன்று பதினைந்தையா
கொற்றவனேஒன்பதுவும் நாலுபோடு
தேனேபார்கடைவீட்டில் பனிரெண்டாகும்
தெளிவாகதான்வரைந்து செப்பக்கேண்மோ
மானேநீநாலாவ தணைபிடித்த
மாறிவிடுபேதனயந் திரந்தானாச்சு.


இந்த பாடல்களில் கூறியுள்ள படி படியெடுத்தால் யந்திரம் கீழே படத்தில் உள்ளதைப் போல அமையும்.இனி இந்த யந்திரத்தைக் கொண்டு பேதன முறையில் சித்தியடைவதற்கான தந்திரத்தினை பார்ப்போம்.

குருவருளுடன் கூடிய ஒரு ஞாயிற்றுக் கிழமை நாளில், வெண்முத்து மணிகளால் ஆன மாலை அணிந்து கொண்டு, பேய்த்தேத்தான் பலகையால் ஆன ஆசனத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்திருந்து செப்பு அல்லது வெள்ளி தகட்டில் கீறிய யந்திரத்தினை வெண்பட்டுத் துணியில் வைத்திட வேண்டும்.

பேதன மூலமந்திரமான “ஓம் யவசிமந அரிஓம் ஸ்ரீயும் சவ்வும் சுவாகா”என்ற மந்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் ஒருமண்டலம் செபித்து ஊமத்தம் பூவினால் யந்திரத்தை அர்ச்சித்துவர சித்தியாகுமாம் என்கிறார் கருவூரார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

kimu said...

நன்றி தோழி

R.Puratchimani said...

கொடியவர்களின் கொட்டத்தை அடக்க இதை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம்...நான் இதைத்தான் செய்வேன் தோழியே, நீங்கள் எப்படி?

Lingeswaran said...

பேதனமா ?.....அபூர்வ தகவல்.......கண்ண கட்டுது...

இராஜராஜேஸ்வரி said...

Interesting.

ganesh said...

enakku niraiya santheham irukku athi eppadi ungalidam ketkarathu?
plz thozhi....

Unknown said...

வாசித்தேன்...

Elangai Tamilan said...

மிக்க நன்றி ,தோழி

tamilvirumbi said...

Dear Thozi,
Thanks a lot.

SPSenthil said...

@Lingeswaran

இந்த கலையைத்தான், "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளனர். அநேக மக்களுக்கு அந்த காட்சியின் உள்ளருத்தம் தெரியாமல் அந்த இயக்குனரை ஒரு "Psycho" என்று திட்டியதுண்டு..!
ஆனால், அவர் ஆராய்ச்சி செய்து பயன்படுத்தியுள்ளார்.

Post a comment