ஆக்ருசணம்.

Author: தோழி / Labels:

சித்தர்களின் அட்டமாகர்மங்களில் ஒன்றான ஆக்ருசணம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

ஆக்ருசணம் என்பது பிறரை முற்றிலுமாய் ஆக்கிரமித்து தனக்கு அடிபணியச் செய்வதாகும். இது சக மனிதரில் துவங்கி விலங்குகள், தேவதைகள் என பட்டியல் நீள்கிறது. பொதுவில் இந்தக் கலையின் மூலம் நன்மைகளை விட தீமைகளையே அதிகம் செய்கின்றனர்.

சித்தர்களைப் பொறுத்தவரையில் இந்தக் கலையானது அவர்களின் எல்லையற்ற தேடலில் துணை நிற்கும் ஒரு தந்திர சாதனமாகவே கருதப் பட்டது.

பிற மாந்திரிக கலைகளைப் போலவே ஆக்ருசணத்திற்கும் நிறைய முன் தயாரிப்புகள் தேவையாகிறது.

ஆக்ருசணத்திற்கான அதிதேவதை வருணன் ஆவார்.

இந்தக் கலைக்கான பயிற்சியினை ஒரு வெள்ளிக் கிழமையன்றே துவங்கிட வேண்டும்.

ஆக்ருசணத்திற்கான மூல மந்திரம் “ஓம் வசிமநய ஸ்ரீயும் சவ்வும் கிலியும் சுவாகா” என்பதாகும்.

மேற்கு முகமாய் அமர்ந்தே இந்த பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

வெண்நாவல் மரத்தின் பலகையினையே ஆசனமாய் பயன்படுத்திட வேண்டுமாம்.

அணிவதற்கும், செபிக்கவும் சங்கு மணியினாலான மாலையினை பயன்படுத்திட வேண்டும்.

அரளிப் பூவினை யந்திரத்தினை அர்ச்சனை செய்வதற்கு பயன்படுத்திட வேண்டும்.

ஆந்த வண்ண பட்டினை அணிவதற்கும், மூலகங்களுக்கு அணிவிப்பதற்கும் பயன்படுத்திட வேண்டும்.

ஆக்ருசணத்திற்கான யந்திரத்தை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறிட வேண்டும்.

இத்தனை முன் தயாரிப்புகளுடன் முக்கியமான யந்திரத்தினை வரைவது பற்றியும் அதனைக் கொண்டு இந்த கலையில் சித்தியடைவது பற்றியும் நாளைய பதிவில் காண்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

குறும்பன் said...

மன்னிக்கவும்.
உச்சாடனம், ஆக்ருசணம் என்பவை மாந்திரீக வகையில் அடங்குமா? வகை வேறு, படி நிலை வேறா? மாந்தீரிகத்தின் முன் தயாரிப்பு என்ற இடுகைக்கும் (http://siththarkal.blogspot.com/2011/05/blog-post_18.html) மாந்திரிகத்தின் வகைகள் என்ற இடுகைக்கும் (http://siththarkal.blogspot.com/2011/05/blog-post_04.html) இடையில் வேறுபாடுகள் உள்ளது அதனால் வகை வேறா? முன் தயாரிப்பு வேறா என்ற ஐயம் தோன்றுவதை மறுக்க முடியவில்லை. தொடரின் இறுதியில் கேள்விகளிக்கு பதில் கூறுவீர்கள் என்ற போதிலும் இதற்கான பதிலை அடுத்த இடுகையிலேயே கூறினால் என்னை போன்றோருக்கு பயன்படும். என்னை போன்றோரின் பல குழப்பங்கள் தீரும். உச்சாடனம் என்பதை உரை என்று நினைத்துக்கொண்டுள்ளேன். உச்சாடனம் தான் தீவிரமானது என்று கூறியதால் என்னுல் ஐயம் தோன்றியது.

Lingeswaran said...

கேள்வியே படாத தகவலா இருக்கு....!

Elangai Tamilan said...

தோழர்களின் சந்தேகத்தை தீர்த்து பதில் அளியுங்கள் ,தோழி

S.Chandrasekar said...

அன்புள்ள தோழி,

மாந்த்ரீகம் சம்பந்தமான எந்த மந்திரத்தையோ, சித்தர் பாடலையோ வலையில் ஏற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நானும் எனது சமீபத்திய போகரின் நூலில் 'மாந்த்ரீகம் மற்றும் அதர்வணம்' பற்றிய எந்த பாடல்கலளையும் சேர்க்கவில்லை. இதை படிக்கும் போதே அதன் உகிரகம் தெரியும். அதை படிக்கும் அநேகம் பேர் எப்படி பிரயோகம் செய்வது என்று தெரியாமல் விளயாட்டுக்கோ அல்லது விஷபரீட்சை செய்து பார்கவோ எண்ணலாம். குருவின் நேரடி கண்காணிப்பின்றி இதை செய்யகூடாது. இது தவறாகப் போய் முடியும் என்பது என் அபிப்ராயம்.
இந்த வலையில் பகுத்தறிவு நண்பர்களும் இருக்கலாம், இதை அவர்கள் தவறுதலாக சோதிக்க எண்ணக்கூடாது. குருவின் நேரடி கண்காணிப்பின்றி இதை செய்யகூடாது. Ouija Boardஐ விளையாட்டுக்கு சோதித்து வினையாக முடிந்த நிகழ்வுகள் TV இல் பார்த்துள்ளோம்.

சந்திரசேகர்

Post a comment