உச்சாடனம் தொடர்ச்சி..

Author: தோழி / Labels: ,


உச்சாடனம் என்பது மந்திரங்களை உச்சரிக்கும் கலையில் சித்தியடைவதை கூறுகிறது. சப்தங்களுக்கு அதிர்வுகள் உண்டு என்பதன் அடிப்படையில், இந்த சப்தங்களை முறையாக கையாளுவதன் மூலம் உடலிலும், உள்ளத்திலும், சுற்றுச் சூழலிலும் குறிப்பிடத் தக்க விளைவுகளை உண்டாக்கலாம் என்கிற அறிவியலின் அடிப்படையில் அமைந்தது இந்தக் கலை. இதனை அறிவியல் ரீதியாக நிறுவிட சில முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. அது தொடர்பான ஆய்வறிக்கைகளை இணையத்திலும் கூட வாசித்தறியலாம்.

உச்சாடன கலையில் சித்தியடைய தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.அவை அனைத்தும் சித்தர்களின் பாடல்களில் இருந்து பெறப் பட்ட தகவல்கள். இன்றைய பதிவில் மிக முக்கியமான முன் தயாரிப்பான யந்திரம் உருவாக்குதவதைப் பற்றியும் அதனைக் கொண்டு செய்ய வேண்டிய தந்திர முறையினையும் பார்ப்போம்.

இந்த முறைக்கான யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்பாலான தகட்டில் கீறிட வேண்டுமென்கிறார் கருவூரார். மேலும் இதனை எவ்வாறு அமைப்பது என்பதைப் பற்றி பின் வருமாறு விளக்குகிறார்.

ஏற்றினேன்உச்சாடன சித்துகேளு
என்மகனேயிருபத்தைந் தரையினுள்ளே
போற்றியேமுக்கோணம் வட்டம்போடு
புகழ்பெரியவைங்கோண மறுகோணந்தான்
பாற்றால்போல் நாற்கோணம் பரிந்துபோடு
பாலகனேமயநசிவ வரைந்துபோடு
நாற்றிசையோர்புகழ்பாலா நயந்துகேளு
நாட்டுவாய் சௌவும் ஐம் - ஈம் -நம்தானே.

தானே தான்லம்என்ற பீஜம்போடு
தாழ்வின்றி ஒ - அ - இ - உ - எ -போடு
கொணேகேள் ஸ்ரீயும் ஐயும் - கிலியும் - சவ்வும்
கொற்றவனே றீயும்என்ற பீஜம்போடு
தேனேபாரிவையெல்லா முன்போலப்பா
தெளிவாகநடுவணையைப் பிடித்தவாறு
மானேவாபனிரெண்டு ஒன்பதையா
மயங்காதேபதினொன்று நாலுபோடே.

போட்டுவிதிபதினைந்தா மிலக்கமையா
பொன்னாவனெநாலாவ தணையைமாறு
நாட்டிவிடுயான்சொன்ன வாறுபோல
நளினமாமுச்சாடன பெருமையாச்சு
காட்டுவேன்கலங்காதே கண்ணேகேண்மோ
கனமானபூஜையுட விவரங்கூட
மாட்டுவேன்வெகுசுருக்காய் மைந்தாமைந்தா
மகாபெருமைஅரமையடா மகிழ்ந்துபாரே.


இந்த பாடல்களில் கூறப்பட்டுள்ள படி யந்திரத்தினை அமைத்தால் அது கீழே உள்ள படத்தினைப் போல வரும்.
பாடல்களில் கூறப்பட்டுள்ள தகவல்களை வைத்து யந்திரம் வரைவது மிகவும் கடினமானது. சித்தர்களின் பாடல்களில் பரிச்சயம் உள்ள ஒருவரால் மட்டுமே சரியான யந்திரத்தினை வரைந்தெடுக்க இயலும். வர்த்தக ரீதியாக கடைகளில் விற்கப் படும் யந்திரங்கள் பெரும்பாலும் இத்தனை கவனத்துடன் தயாரிக்கப் படுவதில்லை.

இனி இந்த யந்திரத்தைக் கொண்டு செய்ய வேண்டிய தந்திரத்தினைப் பார்ப்போம். குருவருளுடன் கூடிய ஒரு வியாழக் கிழமை நாளில் துளசி மணிகளால் ஆன மாலை அணிந்து கொண்டு, வெப்பாலை பலகையால் ஆன ஆசனத்தில் தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்திருந்து செப்பு அல்லது வெள்ளி தகட்டில் கீறிய யந்திரத்தினை பஞ்சவர்ணப்பட்டு துணியில் வைத்து உச்சாடன மூலமந்திரமான “ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா” என்கிற மந்திரத்தை அந்தி சந்தி வேளைகளில் 108 தடவை வீதம் ஒருமண்டலம் செபித்து தும்பை மலர்களால் யந்திரத்தை அர்ச்சித்துவர சித்தியாகுமாம் என்கிறார் கருவூரார்.

அடுத்த பதிவில் வேறொரு மாந்திரிக கலையினைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

இர.கருணாகரன் said...

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு
வைத்த வழி இதுவென்று வைத்தவர்கள் சொன்னதில்லை-வைத்தியத்திலுமில்லை - இவ்வழியின் மெய்யறிதல் கண்டுணர்ந்து - வைத்தவர்கள் - அருளன்போடு கலந்தேகி கொண்டுகொள்ள சித்தமது சீராகி உத்தமராய்
ஆகுவிரே!!

அன்புடன்

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

இந்த பதிவு மிகவும் நன்று பாரட்டுக்கள் வாழ்க வளமுடன்

Elangai Tamilan said...

தாங்கள் குறிப்பிட்டு இருக்கும் வெப்போலை பலகை என்பது எதனால் ஆனது.? என்பதை விளக்க வேண்டுகிறேன்

Murugeswari Rajavel said...

நல்ல பதிவு.நன்றி

tamilvirumbi said...

Dear thozi,

Thanks a lot.

Post a comment