உச்சாடனம்.

Author: தோழி / Labels:

உச்சாரணம் அல்லது உச்சாடனம் என அழைக்கப் படுவது சித்தர்களின் அஷ்டகர்மங்களில் ஒன்று. மற்ற பிற மாந்திரிக கலைகளை விட இந்த முறை மிகவும் தீவிரமானதும், ஆபத்து நிறைந்ததும் ஆகும். பொதுவில் மந்திரங்களை உச்சரிக்கும் வகைகளைப் பற்றி முந்தைய பதிவொன்றில் பார்த்தோம்.அதனை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

உச்சாடனம் பற்றி விரிவாக எழுதுவதற்கு நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் சித்தர்களின் பார்வையில் அவர்களின் கலையாக உச்சாடணம் பற்றி என்ன கூறியிருக்கின்றனர் என்பதை மட்டுமே நாம் இங்கே கவனிக்கிறோம். அடிப்படையில் உச்சாடனம் என்பது மந்திரங்களை உச்சரிக்கும் கலையில் சித்தியடைவதாகவே கருதப் படுகிறது.

சித்தர்களின் பயன்பாட்டில் இந்த முறை ஒரு தற்காப்பு கலையாகவே அறியப் படுகிறது. தங்களின் சீடர்களுக்கும் அவ்வாறே இதனை அருளினர். மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் உருவாக்கப் படும் அதிர்வுகளைக் கொண்டு தங்களின் உடலையும், சுற்றத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு உத்தியாகவே இதைக் கருதினர்.

வாருங்கள்!, உச்சாடன முறைக்கு தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி இன்று பார்ப்போம்.

உச்சாடனத்திற்கான அதிதேவதை நிருதி

உச்சாடத்திற்கான மூல மந்திரம் “ஓம் வயநமசி ஸ்ரீயும் அரிஓம் ஐயும் சுவாகா”

ஒரு வியாழக் கிழமையன்று இந்த பயிற்சியினை துவங்கிட வேண்டும்.

இந்த பயிற்சியினை தென்மேற்கு திசையை நோக்கி அமர்ந்து செய்திட வேண்டும்.

துளசி மணியினால் ஆன மாலையினை அணிவத்ற்கும், மந்திரங்களை செபிக்கவும் பயன் படுத்திட வேண்டும்.

வெப்பாலை மரத்தின் பலகையினை அமரும் ஆசனமாய் உபயோகிக்க வேண்டும்.

யந்திரத்தினை அர்ச்சிக்க தும்பைப் பூவினை பயன்படுத்திட வேண்டும்.

பஞ்சவர்ண பட்டாடையினை அணிவதற்கும், மூலகத்திற்கு அணிவிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.

உச்சாடன முறையில் சித்தியடைய தேவையான யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்பாலான தகட்டில் கீறிட வேண்டும்.

அடுத்த பதிவில் இந்த யந்திரத்தினை எவ்வாறு அமைப்பது என்பதையும் அதனைக் கொண்டு உச்சாடன கலையில் சித்தியடைவதைப் பற்றியும் பார்ப்போம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

காத்திருக்கிறோம் தோழியே...

இராஜராஜேஸ்வரி said...

Very Interesting.

சி.பி.செந்தில்குமார் said...

ஹூம்.. எக்சாம் முடிஞ்சுது.. இனி பதிவாப்போட்டு தாக்கப்போறீங்க..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஈஸ்வரி said...

உங்கள் பதிவு மிக அருமை. குரு வழியாக மூல மந்திரங்களை பெற்று சாதகம் செய்து மந்திரங்களை சித்தி ஆக்கி கொள்ள குருவை எப்படி தேடுவது என்று முதலில் சொல்லி தரவும். இதற்கான வழி சொல்லி உதவுங்கள். மிக்க நன்றி.

இர.கருணாகரன் said...

சிறப்பான பலனுள்ள பதிவுகள்

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

நன்று பாரட்டுக்கள் வாழ்க வளமுடன்

Lingeswaran said...

Good.Carry on...நல்லா இருக்கீங்களா?

மாலதி said...

very nice

tamilvirumbi said...

Dear thozi,
Thanks a lot.

Elangai Tamilan said...

தங்களின் இரத்தத்தின் இரத்தம் போல் தங்களின் பதிவுகளுக்கு தவறாமல் மறுமொழி இடும் தமிழ்
விரும்பிக்கு வாழ்த்துக்கள் . மிக்க நன்றி,தோழி.

Post a comment