தம்பனம்.

Author: தோழி / Labels:


சித்தர்களின் மாந்திரிக வரிசையில் இன்று “தம்பனம்” என்கிற கலையினைப் பற்றியும்,அதில் சித்தியடைய தேவையானவைகளைப் பற்றியும் பார்ப்போம்.

தம்பனம் அல்லது ஸ்தம்பனம் என அழைக்கப்படும் இந்த கலைக்கு கட்டுதல் என நேரடி பொருள் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒன்றினை கட்டி அதனை முற்றிலுமாக செயலிழக்க செய்வதே தம்பனம் என அறியப் படுகிறது. ஆய கலைகள் என அறியப் படும் அறுபத்தி நான்கு கலைகளில் கூட எட்டு வகையான தம்பனங்களைப் பற்றி கூறப் பட்டுள்ளது.

இந்த கலையின் விளைவுகள் மிகவும் தீவிரத் தன்மை கொண்டவை என்பதால் மிகக் கண்டிப்பாக குருவின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடலாலும், மனதாலும் முழுமையாக தகுதியானவர்களுக்கே குருவின் அனுமதியும் ஆசியும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ளவும்.

இனி தம்பன முறையில் சித்தியடையத் தேவையான முன் தயாரிப்புகளைப் பற்றி பார்ப்போம்.

தம்பனத்திற்கான அதிதேவதை இந்திரன்.

தம்பன முறைக்கான மூல மந்திரம் “ஓம் நமசிவய ஐயும் கிலியும் சவ்வும் சுவாகா”

இந்த முறையில் சித்தியடைய பயிற்சியினை ஒரு திங்கட் கிழமையில் துவக்கிட வேண்டும்.

தம்பன சித்தி வேண்டுவோர் பூசைகளை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து செய்திட வேண்டும்.

தாமரை மணியினால் ஆன மாலையினை உடலில் அணிவதற்கும், மந்திரங்களை செபிக்கவும் பயன்படுத்திட வேண்டும்.

பலா மரத்தின் பலகையினை உட்காருவதற்கான ஆசனமாக பயன் படுத்திட வேண்டும்.

தாமரை மலர்களை கொண்டே யந்திரத்தை பூசிக்க வேண்டும்.

பச்சை பட்டினை அணிவதற்கும், மூலகங்களுக்கு அணிவிப்பதற்கும் பயன்படுத்திட வேண்டும்.

தம்பன யந்திரத்தினை செப்பு அல்லது வெள்ளியினால் ஆன தகட்டில் கீறிட வேண்டும்.

மிக முக்கியமான இந்த யந்திரத்தை எவ்வாறு வரைவது என்பதையும், அதனைக் கொண்டு தம்பன முறையில் சித்தியடையத் தேவையான தந்திரத்தினையும் நாளைய பதிவில் காண்போம்..சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

3 comments:

kimu said...

Nandri Thozi

tamilvirumbi said...

Dear thozi,

Thanks for your great effort.

S.Chandrasekar said...

அன்புள்ள தோழி,

மாந்த்ரீகம் சம்பந்தமான எந்த மந்திரத்தையோ, சித்தர் பாடலையோ வலையில் ஏற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். நானும் எனது சமீபத்திய போகர் நூலில் 'மாந்த்ரீகம் மற்றும் அதர்வணம்' பற்றிய எந்த பாடல்கலளையும் சேர்க்கவில்லை, அதை படிக்கும் போதே அதன் உக்கிரகம் தெரியும். படிக்கும் அநேகம் பேர் எப்படி பிரயோகம் செய்வது என்று கூட தெரியாமல் விளயாட்டுக்கோ அல்லது விஷபரீட்சை செய்து பார்கவோ எண்ணலாம். இந்த வலையில் பகுத்தறிவு நண்பர்களும் இருக்கலாம், இதை அவர்கள் தவறுதலாக சோதிக்க எண்ணக்கூடாது. குருவின் நேரடி கண்காணிப்பின்றி இதை செய்யகூடாது. இது தவறாகப் போய் முடியும் என்பது என் அபிப்ராயம். விளையாட்டுக்கு Ouija Spirit Board சோதித்து வினையாக முடிந்த நிகழ்வுகள் TV இல் பார்த்துள்ளோம்.

Post a comment