மோகனம்

Author: தோழி / Labels:


சித்தர்களின் மாந்திரிகத்தில் அட்டமா சித்துக்களாய் சொல்லப் படும் எட்டுப் படி நிலைகளில் ஒன்றான “மோகனம்” பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

மோகனம் என்பது பிறறை தன் மீது மோகம் கொள்ளச் செய்வது ஆகும். மற்ற பிற மாந்திரிக முறைகளைப் போலவே இந்த முறையும் காலம் காலமாய் ரகசியமாகவே பேணப் பட்டு வருகிறது. தகுதியான உடல் மற்றும் மனபக்குவம் உள்ளவர்கள் மட்டுமே இதனை முயற்சிக்க வேண்டும்.தேவையற்ற எதிர் விளைவுகளை தவிர்க்க குருமுகமாக பயில்வதே சிறப்பு.

மற்ற மாந்திரிக முறைகளைப் போலவே இந்த முறைக்கும் நிறைய முன் தயாரிப்புகள் அவசியமாகிறது. ஏற்கனவே அவை பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தாலும் வாசிப்பின் சுவாரசியம் கருதி மீண்டுமொறு முறை நினைவு படுத்திட விரும்புகிறேன்.

மோகன முறையில் சித்தியடைய இந்த பயிற்சியினை ஒரு செவ்வாய் கிழமையே துவங்கிட வேண்டும்.

மோகனத்திற்கான அதி தேவதை “அக்கினி” ஆகும்.

மிளகுமணியிலான மாலையினை செபிக்கவும், அணியவும் பயன்படுத்திட வேண்டும்.

மோகனத்திற்கான மூல மந்திரம் “ஓம் மசிவயந கிலியும் சவ்வும் ஸ்ரீயும் சுவாகா”

மாமரத்தின் பலகையினை அமரும் ஆசனமாக பயன்படுத்திட வேண்டும்.

தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்தே இந்த பூசைகளை மேற்கொள்ள வேண்டும்.

முல்லை மலரை பூசைக்கு பயன் படுத்திட வேண்டும்.

உடலில் அணியவும், மூலகத்திற்கு அணிவிக்கவும் மஞ்சள் நிற பட்டாடையினை பயன்படுத்த வேண்டும்.

இத்தனைக்கும் பிறகு மிக முக்கியமான மோகனத்திற்கென பிரத்யேகமாக அருளப் பட்ட யந்திரம் வேண்டும். இந்த யந்திரமானது வெள்ளி அல்லது செப்பு தகட்டில் கீறப்பட வேண்டும். இந்த யந்திரத்தை அமைக்கும் முறையினையும், அதைக் கொண்டு செய்திட வேண்டிய பூசை முறைகளைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

காத்திருங்கள்!!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அற்புதமான செய்திகளை தந்து கொண்டிருக்கிறீர்கள்..

காத்திருக்கிறோம் தோழியே...

Unknown said...

மாந்திரீகம் பற்றிய செய்திகள் தேவைதானா என்பதை யோசிக்கவும், ஆன்மீக அன்பர்களுக்கு தற்போது ஆன்மீகத்தில் முன்னேற என்ன வழிகளை சித்தர்கள் காட்டி உள்ளார்கள் என்பதைக் கூறுவது நலம் பயக்கும். சித்திகள், மாந்திரீகம் இவை தவறான எண்ணங்களுக்கு தூண்டில் போட்டுப் பார்க்கும். எனவே தவிர்ப்பது உத்தமம்.
please visit http://thavayogi.blogspot.com/

tamilvirumbi said...

Dear Thozi,

Thank you very much.

Adshows said...

@KARTHIKEYAN

surendar am itis useful me karthik
if we use this formula for un wanted means its spoil him dont worry nallathey ninaipoom

diegojayapradap said...

Mikka nandri

Post a comment