வசியம் தொடர்ச்சி...!

Author: தோழி / Labels: , ,


வசிய முறையில் சித்தியடைய மந்திரம், யந்திரம் மற்றும் இவற்றை பிரயோகிக்கும் தந்திரம் அவசியமென முந்தைய பதிவில் பார்த்தோம். அந்த வகையில் முக்கியமான யந்திரத்தை எப்படி அமைத்திட வேண்டும் மற்றும் இதனை எவ்வாறு பயன் படுத்திட வேண்டும் என்பதை இன்றைய பதிவில் பார்ப்போம்.

வசிய முறைக்கு பயன்படுத்த வேண்டிய யந்திரத்தினை அமைக்கும் முறையினைப் பற்றி கருவூரார் தனது பாடலில் பின்வருமாறு கூறுகிறார்.


"தானேதானாறுவகை நேரேகீறி
தண்மையாயாறுவரை குறுக்கேகீறி
கோனேகேளிருபத்தைந் தரையுமாச்சு
கொற்றவனேயரைதோரும் பீடங்கேளு
தேனேபார் முதல்வரையில் நாற்கோணந்தான்
தெளிவாகமருவரையில் முக்கோணந்
மானே நான் சொல்லுகிற ணன்டைவீட்டில்
மத்திடுவாய்வட்டமதை போடுபோடே"

"போடே நீயடுத்தவரை யைங்கோணம்பார்
பொன்னவனேயறுகோண படுதத்வீடு
நாடேநீநடுவணையைப் பிடித்துமாறு
நாயகனேயரைதோறும் மாறிக்கொள்ளு
வாடாதேவயநமசி யென்றுபோடு
வகையாகநடுவணையை முன்போல்மாறு
தேடாதேவகாரத்தில் றீயும்போடு
தெளிவாகயகராகத்தில் ஸ்ரீயும்போடே"

"ஸ்ரீயும்போட்டானவுடன் சொல்லக்கேளு
திகழானநகாரத்தில் ஐயும்போடு
நீயுமேமகாரத்தில் கிலியும்போடு
நேர்மையாய்சிகரத்தில் சௌவும்போடு
வாயுள்ளோய் எ - ஒ - அ - இ - உ - போடு
வாகாகவகாரத்தில் லம்தானையா
மாயுள்ளவளரென்சீஷா வகுக்கக்கேண்மோ
மைந்தனேயகாரத்தில் சௌவும்போடே"

"போட்டவுடன் நகாரத்தில் ஐம்தானப்பா
பொன்னவனேமகாரத்தில் ஈம்தான்போடு
நாட்டுவாய்ச்சிகாரத்தில் நம்தானையா
நலமாகப்போட்டுமல்லோ நவிலக்கேளு
தாட்டிகமாயிவையெல்லாங் கோர்வையாக
தப்பாமலரைதோரும் வரைந்துகொண்டு
காட்டுவேன்நடுவணையை முன்போல்மாறு
கருத்தகவரைதோறு மிப்படிப்படியேமாறே"


இந்த பாடல்களின் படி யந்திரத்தினை கீறினால் கீழே உள்ள படத்தில் இருப்பதைப் போல யந்திரம் இருக்கும்.



இப்போது நமக்கு தேவையான அனைத்து முன் தயாரிப்புகளும், உபகரணங்களும் தயாராகி விட்டது.வாருங்கள் வசிய சித்தி பெறுவதற்கான செயல் முறையினை(தந்திரம்) பார்ப்போம்.

குருவருளை வேண்டி அவரின் மேலான அனுமதியுடன் ஒரு ஞாயிற்று கிழமை நாளில் நீராடி, செம்பட்டு ஆடை அணிந்து வடகிழக்கு திசையை நோக்கி வில்வ மரத்தினாலான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு, முன்னால் செம்பட்டிலான துணியில் யந்திரத்தை வைத்து; வசிய மூல மந்திரமான “ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா” என்ற மந்திரத்தை செபித்தவாறே மல்லிகை மலர்களால் யந்திரத்தை 108 தடவை அர்ச்சிக்க வேண்டும் என்கிறார். இதனை காலை மாலை என இரு வேளையும் ஒரு மண்டலம் தொடர்ச்சியாக செய்து வர வசியம் சித்திக்குமாம்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!, அடுத்த பதிவில் மற்றொரு மாந்திரிக முறையுடன் சந்திக்கிறேன்.

காத்திருங்கள்!!
Post a Comment

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆச்சரியமான பகிர்வு. வாழ்த்துக்கள்.

RAVINDRAN said...

நன்றி

tamilvirumbi said...

Dear thozi,
It looks so incredible.Thanks.

RAJ said...

அன்பு தோழி அகஸ்தியர் வாகடம் மற்றும் அகஸ்தியர் குணபாடம்' என்னும் நூல் எங்கு கிடைக்கின்றது என்று தயவு கூர்ந்து கூறுங்கள். பல இட ங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தங்களிடம் இருந்தால் தயவு கூர்ந்து ஒரு பிறதி அனுப்பினால் மிகவும் நன்றிவுடையவனாக இருப்பேன். தங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு,

ராஜ்
aijraj@gmail.com
9176813274

RAJ said...

அன்பு தோழி அகஸ்தியர் வாகடம் மற்றும் அகஸ்தியர் குணபாடம்' என்னும் நூல் எங்கு கிடைக்கின்றது என்று தயவு கூர்ந்து கூறுங்கள். பல இட ங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தங்களிடம் இருந்தால் தயவு கூர்ந்து ஒரு பிறதி அனுப்பினால் மிகவும் நன்றிவுடையவனாக இருப்பேன். தங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு,

ராஜ்

Post a Comment