வசியம்.

Author: தோழி / Labels: ,

இதுவரையில் சித்தர்களின் மாந்திரிகம் பற்றிய அறிமுகம் மற்றும் அதற்கான முன் தயாரிப்புகளைக் குறித்து பார்த்தோம். இனிமேல்தான் இந்த தொடர் சுவாரசியமான பகுதிக்குள் பயணிக்க இருக்கிறது. ஆம், மாந்திரிகத்தின் எட்டு படிநிலைகளை பற்றி இனி வரும் நாட்களில் பார்ப்போம்.

நண்பர்களே!, மாந்திரிகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் விளைவுகள் இதுவரை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படவில்லை. மேலும் இம்மாதிரியான கலைகளை போலியான அறிவியல்(Pseudo Science) என்று நவீன அறிவியல் நிராகரிக்கிறது. எனவே இந்த கலையில் தவறான முன்னெடுப்புகள் அல்லது முயற்சிகள் தேவையற்ற எதிர்விளைவுகளையும், பாதிப்புகளையும் உண்டாக்கி விடக் கூடும்.

ஆகவே தகுதியான குருவின் வழிகாட்டுதல் இல்லாத பட்சத்தில் யாரும் இவற்றை முயற்சிக்க வேண்டாம். இங்கே பகிரப் படும் தகவல்கள் அனைத்தும் காலத்தால் அழிந்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களை ஆவணப் படுத்தி, அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி மட்டுமே!.

மாந்திரிக வரிசையில் இன்று முதலாவதாக வசியம் பற்றி பார்ப்போம். வசியம் என்பது ஒரு மனிதனை அல்லது மனிதர்களை தன் வயப்படுத்தி, தனது இச்சைகளுக்கு ஏற்ப அவரை அல்லது அவர்களை ஆட்டுவிப்பதாகும். தேவைகளைப் பொறுத்து இந்த வசியம் எட்டு பிரிவுகளாக அறியப் படுகிறது. அவை “ஜனவசியம்”, “ராஜவசியம்”, “புருஷவசியம்”, “ஸ்திரிவசியம்”, “மிருகவசியம்”, “தேவவசியம்”, “சத்துருவசியம்”, “லோகவசியம்” என அறியப் படுகிறது. இவற்றிற்கென தனித்த்துவமான செயல்முறைகள் சித்தர்களின் பாடல்களில் கூறப் பட்டிருக்கின்றன.

எந்த ஒரு மாந்திரிக முறையிலும் சித்தியடைய மந்திரம், யந்திரம் மற்றும் அதனை பிரயோகிக்கும் தந்திரம் ஆகிய மூன்றும் ஒன்றினைவது அவசியமாகிறது. இது தொடர்பான முன் தயாரிப்புகளைப் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இருப்பினும் வாசிப்பின் வசதி கருதி மீண்டுமொரு தடவை வசிய முறைக்கான முன் தயாரிப்பு தகவல்களை மீண்டுமொரு முறை இங்கே தருகிறேன்.

வசிய முறையில் சித்தியடைய பயிற்சியினை ஒரு ஞாயிற்றுக் கிழமையில் துவக்கிட வேண்டும். மந்திர உச்சாடனத்தின் போது உருத்திராட்ச மணி மாலையினை பயன் படுத்திட வேண்டும். வட கிழக்கு திசையினை நோக்கியாவாறு, வில்வ மரத்தினால் ஆன பலகையை ஆசனமாக பயன் படுத்தி அமர வேண்டும். வசியத்திற்கான அதிதேவதை ஈசன், மல்லிகை மலரை பூசைக்கு பயன்படுத்திட வேண்டும்.

செம்பட்டு ஆடையை அணிவதற்கும்,அணிவிப்பதற்கும் பயன் படுத்திட வேண்டும். வசிய முறைக்கான மூல மந்திரம் “ஓம் யநமசிவ அரிஓம் ஐயும் கிலியும் சுவாகா”. வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறப்பட்ட யந்திரத்தை பயன்படுத்திட வேண்டுமாம். காலை, மாலை என இரு வேளைகளும் பூசைகளை செய்திட வேண்டும்.

எல்லாம் சரிதான் இந்த யந்திரத்தை எப்படி அமைப்பது?, அந்த யந்திரத்தை பயன் படுத்தி எவ்வாறு சித்தியடைவது?

விவரங்கள் அடுத்த பதிவில்...

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

2 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

ம்ம்.. சுவாரசியமாகவும் அற்புதமாகவும் இருக்கிறது..

ஆவலோடு காத்திருக்கிறோம்..

tamilvirumbi said...

Dear thozi,
Thanks a lot for your maverick
writings about maanthareegam.

Post a comment